ஆகஸ்டு 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
<< | ஆகஸ்ட் 2016 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXVI |
ஆகஸ்டு 1 (August 1) கிரிகோரியன் ஆண்டின் 213 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 214 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 152 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[தொகு]
- கிமு 33 - ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
- 527 - முதலாம் ஜஸ்டீனியன் பைசண்டைன் பேரரசன் ஆனான்.
- 1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
- 1461 - நான்காம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கலைக்கப்பட்டனர்.
- 1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
- 1619 - முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.
- 1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1800 - பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
- 1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.
- 1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
- 1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.
- 1894 - கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
- 1902 - பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
- 1902 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.
- 1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1927 - சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
- 1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- 1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
- 1944 - போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
- 1960 - டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
- 1964 - பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.
- 1980 - அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- 2004 - பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.
- 2006 - இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்
பிறப்புகள்[தொகு]
- கிமு 10 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54)
- 1782 – இயூஜின் டி மசெனோ, பிரெஞ்சு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1861)
- 1819 – ஏர்மன் மெல்வில், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1891)
- 1837 – மேரி ஹாரிசு ஜோன்சு, ஐரிய-அமெரிக்கத் தொழிற்சங்கவாதி (இ. 1930)
- 1876 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950)
- 1885 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (இ. 1966)
- 1907 – மறை. திருநாவுக்கரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1983)
- 1910 – கேர்டா டேரோ, செருமானிய புகைப்படக் கலைஞர் (இ. 1937]])
- 1910 – முகமது நிசார், இந்தியத் துடுப்பாளர் (இ. 1963)
- 1924 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (இ. 2015)
- 1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிய அரசியல்வாதி (இ. 1979)
- 1932 – மீனாகுமாரி, இந்திய நடிகை (இ. 1972)
- 1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்
- 1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கித்தானின் 2வது அரசுத்தலைவர்
- 1952 – வி. எஸ். ராதாகிருஷ்ணன், இலங்கை மலையக அரசியல்வாதி.
- 1967 – ஜோஸ் பாடில்கா, பிரேசில் இயக்குநர்
- 1969 – கிரகாம் தோர்ப், ஆங்கிலேயட் துடுப்பாளர்
- 1984 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமன் கால்பந்தாட்ட வீரர்
- 1987 – டாப்சி பன்னு, இந்திய நடிகை
இறப்புகள்[தொகு]
- 1714 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (பி. 1665)
- 1787 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலியப் புனிதர் (பி. 1696)
- 1868 – பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரெஞ்சு கத்தோலிக்க குரு (பி. 1811)
- 1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)
- 1944 – மானுவல் எல். குவிசோன், பிலிப்பீனின்2வது அரசுத்தலைவர் (பி. 1878)
- 1967 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1900)
- 1974 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1908)
- 1982 – தா. திருநாவுக்கரசு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)
- 1999 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர் (பி. 1897)
- 2008 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய அரசியல்வாதி (பி. 1916)
- 2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (பி. 1933)
சிறப்பு நாள்[தொகு]
- அங்கோலா - இராணுவ நாள்
- பெனின் - தேசிய நாள் (1960)
- கொங்கோ - பெற்றோர் நாள்
- லெபனான் - இராணுவ நாள்
- சுவிட்சர்லாந்து - தேசிய நாள் (1291)