கருங்கழுகு என்பது ஒரு வகைக் கழுகு இனப் பறவை ஆகும். எல்லா கழுகுகளையும் போலவே, இது பாறுக் குடும்பத்தில் உள்ளது, மேலும் இது இக்டினேட்டஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். இப்பறவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தெற்கு மற்றும் தென்கிழக்காசியா மற்றும் தென்கிழக்கு சீனாவின் மலைப்பாங்கான பகுதிகளின் காடுகளில் காணப்படுகிறது. இப்பறவையின் உடல் பார்க்க கறுப்பாகவும், அலகு மஞ்சளாகவும் இருக்கும். இவை எப்போதும் அடர்ந்த பசுமையான காடுகளிலேயே சார்ந்து வாழும். மேலும்...
மொடு சன்யூ என்பவர் சியோங்னு பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரது தந்தை தோவுமன் ஆவார். சிமா சியானின் கூற்றுப்படி மொடு ஒரு அறிவாற்றல் மிகுந்த குழந்தையாக இருந்தார். இவர் கி. மு. 209ஆம் ஆண்டு தன் தந்தையைக் கொல்லுமாறுத் தன் ஆட்களுக்கு ஆணையிட்டு ஆட்சிக்கு வந்தார். மொடு கி. மு. 209 முதல் கி. மு. 174 வரை ஆட்சி செய்தார். இவர் இவரது தந்தை தோவுமனுக்குக் கீழ் ஒரு இராணுவத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு சியோங்னு பேரரசின் சன்யூவாக முடிசூட்டிக் கொண்டார். இவரது பேரரசு தற்போதைய மங்கோலியாவில் அமைந்திருந்தது.மேலும்...
1977 இல் ஏவப்பட்ட வொயேஜர் 1 விண்வெளி ஆய்வுகலம் கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக படிக்கக்கூடிய தரவை புவிக்கு அனுப்புவதாக நாசா அறிவித்தது.
இந்திய சதுரங்க வீரர் குகேசு (படம்) 2024 பிடே வேட்பாளர் சுற்றில் வெற்றி பெற்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.
செருமனியின் பவேரியா எனும் இடத்திலுள்ள வளைவுப் பாலம். கட்டிடக்கலையில் 'வளைவு' என்பது வளைவான வடிவத்தில் உள்ள ஓர் அமைப்பு ஆகும். இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஓர் அழகான அமைப்பு முறைமை ஆகும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,65,118 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.