முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

சிட்டுக்குருவி என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பேஸ்ஸரிடேவில் உள்ள ஒரு பறவை ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 16 செ.மீ.ம், எடை 24-39.5 கிராமும் இருக்கும். பெண் சிட்டுக்குருவிகள் மற்றும் குஞ்சுகள் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் ஆண் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியதரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். மேலும்...


எசுபார்த்தாவின் மேலாதிக்கம் என்பது எசுபார்த்தா அரசு கிரேக்க பழங்காலத்தின் மிகப்பெரிய இராணுவ நில சக்தியாக இருந்ததைக் குறிக்கும். பாரம்பரியக் காலத்தில், எசுபார்த்தா முழு பெலொப்பொனேசியா மீதும் ஆதிக்கம் செலுத்தியது அல்லது செல்வாக்கு செலுத்தியது. கூடுதலாக, கிமு 431-404 இல் நடந்த பெலோபொன்னேசியப் போரில் ஏதெனியர் மற்றும் டெலியன் கூட்டணியின் தோல்வியின் விளைவாக கிமு 404 முதல் கிமு 371 வரை தெற்கு கிரேக்க உலகில் குறுகிய காலம் எசுபார்த்தன் ஒற்றை ஆதிக்கம் இருந்தது. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

நெப்டியூன் கோள்
நெப்டியூன் கோள்

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

சனவரி 26: ஆஸ்திரேலியா நாள், இந்தியக் குடியரசு நாள்

சி. டி. ராஜகாந்தம் (பி. 1917· ஓவியர் மணியம் (பி. 1924· ஆர். கே. லட்சுமண் (இ. 2015)
அண்மைய நாட்கள்: சனவரி 25 சனவரி 27 சனவரி 28

சிறப்புப் படம்

வெற்று வயல்வெளிகளில் பச்சைப் புல் பாதையில் ஒரு தனிமையான பேரி மரம். இடம்: நியூடெனாவ், ஜெர்மனி. பேரி ஒரு தாவரப் பேரினமும் பழமும் ஆகும். சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இந்தோனேசியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது.

படம்: Roman Eisele
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இலிருந்து மீள்விக்கப்பட்டது