T

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

T (தீ அல்லது டி அல்லது ரீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 20ஆவது எழுத்து ஆகும்.[1] ஆங்கில உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மெய்யொலியும் t ஆகும்.[2]

கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்[தொகு]

கணிதத்தில், தொடர் ஒன்றின் nஆவது உறுப்பு Tnஆல் குறிக்கப்படும்.

ஏரணத்தில், உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.

இயற்பியலில், வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் அனைத்துலக முறை அலகான தெசுலாவின் குறியீடும் T ஆகும். திணிவின் அலகான தொன்னைக் குறிக்க t பயன்படுத்தப்படும். நேரத்தைக் குறிக்கவும் t பயன்படுத்தப்படும்.

வேதியியலில், நீரியத்தின் ஓரிடத்தானாகிய திரித்தியத்தின் குறியீடு T ஆகும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=T&oldid=3578413" இருந்து மீள்விக்கப்பட்டது