முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

மான் கொம்பு என்பது என்பது செர்விடே (மான்) குடும்ப உறுப்பினர்களுக்கு காணப்படும் ஒரு உறுப்பு ஆகும். இது மானின் மண்டை ஓட்டின் நீட்சிகளாக அமைந்துள்ளது. மான் கொம்புகள் என்பவை எலும்பு, குருத்தெலும்பு, இணைப்பிழையம், தோல், நரம்பு, குருதிக்குழல் ஆகியவற்றால் ஆன ஒரு அமைப்பாகும். மான் கொம்பானது துருவ மான் / கரிபோவைத் தவிர பொதுவாக ஆண் மான்களுக்கு மட்டுமே காணப்படுகின்றன. மானின் கொம்புகளில் கிளைகள் உண்டு. கிளைகளுடைய இக்கொம்புகள் கலைக் கொம்புகள் என்று அழைக்கப்பபடும். மான் கொம்புகள் குறித்த காலத்திற்கு ஒருமுறை உதிர்ந்து மீண்டும் வளரக்கூடியன. மேலும்...


அசோகர் என்பவர்இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்ட மௌரியப் பேரரசின் மூன்றாவது பேரரசர் ஆவார். இவர் பொதுவாக மகா அசோகர் என்று அறியப்படுகிறார். இவர் அண்.பொ.ஊ.மு. 268 முதல் அண். பொ.ஊ.மு. 232 வரை ஆட்சி புரிந்தார். இவரது பேரரசானது இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பெரும் பகுதியை உள்ளடக்கியிருந்தது. அது மேற்கில் தற்போதைய ஆப்கானித்தான் முதல் கிழக்கில் தற்போதைய வங்காளதேசம் வரை பரவியிருந்தது. இவரது பேரரசின் தலைநகரம் பாடலிபுத்திரம் ஆகும். இவர் பௌத்தத்தின் புரவலராக விளங்கினார். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

  • தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.
  • சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானில் பின்பற்றப்படும் ஒரு மதம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.
  • சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.
  • இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

அக்டோபர் 21:

முத்துசுவாமி தீட்சிதர் (இ. 1835· தேங்காய் சீனிவாசன் (பி. 1937· வெங்கட் சாமிநாதன் (இ. 2015)
அண்மைய நாட்கள்: அக்டோபர் 20 அக்டோபர் 22 அக்டோபர் 23

சிறப்புப் படம்

துருவ ஒளி என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித்தோற்றமானது பொதுவாக ஆர்க்டிக், அண்டார்க்டிக்கா பகுதிகளில் இலகுவில் காணக்கூடியதாக இருக்கின்றது.

படம்: AstroAnthony
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இருந்து மீள்விக்கப்பட்டது