இரண்டாம் உலகப் போர் என்பது 1939 முதல் 1945 வரை நடைபெற்ற ஓர் உலகப் போர் ஆகும். அனைத்து உலக வல்லமைகள் உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும்பாலானவை இதில் பங்கெடுத்தன. இவை அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகள் என இரண்டு எதிரெதிர் இராணுவக் கூட்டணிகளை உருவாக்கின. இரண்டாவது உலகப் போரானது ஓர் ஒட்டுமொத்தப் போர் ஆகும். இதில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர். எக்காலத்திலும் போரில் பயன்படுத்தப்பட்ட 2 அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும்...
சோலோனிய அரசியலமைப்பு என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏதென்சுக்காக சோலோனால் உருவாக்கப்பட்டதாகும். சோலோனின் காலத்தில், மக்கள் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக ஏதெனியன் அரசு கிட்டத்தட்ட துண்டு துண்டாகிவந்தது. திராகோவின் பழைய சட்டங்களைத் திருத்த அல்லது ஒழிக்க சோலன் விரும்பினார். அவர் குடிமை மற்றும் தனிநபர் வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கிய சட்டங்களின் கோட்பாட்டை அறிவித்தார், அதன் நன்மையால் ஏற்பட்ட விளைவுகள் அவரது அரசியலமைப்பின் முடிவுக்குப் பிறகும் நீண்ட காலம் நீடித்தது.மேலும்...
இந்தியாவின் ஒடிசா மாநிலம், பாலசோரில் இரண்டு பயணிகள் தொடருந்தும் ஒரு சரக்குத் தொடருந்தும் மோதியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
2000 – தென்கொரியாவின் அரசுத்தலைவர் கிம் டாய் ஜுங், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லை வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
2006 – நியூ ஹரைசன்ஸ் (படம்) விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 ஏபிஎல் என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,54,416 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.