கூட்டாளர்களிடமிருந்து கிடைக்கும் எனது செயல்பாடு குறித்த தரவுகளின் அடிப்படையில் Facebook இல் எனக்கு விளம்பரங்கள் எவ்வாறு காட்டப்படுகின்றன என்பதை நான் எவ்வாறு சரிசெய்யலாம்?

உங்களுக்கு மேலும் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட, விளம்பரதாரர்களும் பிற கூட்டாளர்களும் தங்களின் இணையதளங்களிலும் செயலிகளிலும் நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டைப் பற்றி எங்களுக்கு வழங்கும் தரவையும் வாங்குதல்கள் போன்ற உங்களின் சில ஆஃப்லைன் ஊடாடல்களைப் பற்றிய தகவல்களையும் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, ஆடைகள் தொடர்பான இணையதளத்திற்கு நீங்கள் சென்றதன் அடிப்படையில் சட்டைக்கான விளம்பரத்தை உங்களுக்கு நாங்கள் காட்டக்கூடும்.
உங்கள் விளம்பர முன்னுரிமைகளில்உள்ள கூட்டாளர்களிடமிருந்து உங்கள் செயல்பாடு பற்றிய தரவு மூலமாக, Facebookக்கு வெளியில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களின் அடிப்படையில் விளம்பரங்களை உங்களுக்குக் காட்டலாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
இந்த அமைப்பைப் பார்க்க, மாற்றியமைக்க:
  1. Facebook இன் மேல் வலதுபுறத்தில் உள்ள accountஐ கிளிக் செய்யவும்.
  2. அமைப்புகளும் தனியுரிமையும் என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அமைப்புகளைக் கிளிக் செய்யவும்.
  3. கீழே ஸ்க்ரோல் செய்து, இடதுபுற மெனுவில் உள்ள விளம்பரங்களைக்கிளிக் செய்யவும்.
  4. விளம்பர அமைப்புகளைக் கிளிக் செய்யவும், பின்னர் கூட்டாளர்களிடமிருந்து உங்கள் செயல்பாடு பற்றிய தரவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட எங்கள் கூட்டாளர்களிடம் இருந்து பெறும் தரவை நாங்கள் பயன்படுத்தலாமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களின் செயல்பாட்டைப் பற்றி எங்களின் கூட்டாளர்களிடம் இருந்து பெறும் தரவின் அடிப்படையில் Facebook இல் உங்களுக்குப் பிரத்தியேகமான விளம்பரங்களை நாங்கள் காட்டலாமா என்பதை இந்த அமைப்பு கட்டுப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த அமைப்பை நீங்கள் முடக்கினால், நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் எங்களின் பிளாட்பார்மில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டின் அடிப்படையிலேயே இன்னும் காட்டப்படலாம். குறிப்பிட்ட வணிகமானது எங்களிடம் பகிர்ந்த தனிநபர்கள் அல்லது சாதனங்களின் பட்டியலில் உள்ள தகவல்களுடன் உங்கள் சுயவிவரம் பொருந்தினால், அந்த வணிகம் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலும் விளம்பரங்கள் காட்டப்படலாம்.
Messenger உட்பட உங்கள் Facebook கணக்கு முழுவதும் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கும், Facebook இன் விளம்பரச் சேவைகளால் வழங்கப்படும் இணையதளங்கள், செயலிகள் மற்றும் சாதனங்களில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கும் மட்டுமே இந்த அமைப்பு பொருந்தும். உங்கள் Instagram மற்றும் Facebook கணக்குகள் முழுவதும் இணைக்கப்பட்ட அனுபவங்களைச் செயல்படுத்தியிருந்தால் தவிர, Instagram இல் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களுக்கு இந்த அமைப்பு பொருந்தாது. Instagram இல் உங்களுக்கு எவ்வாறு விளம்பரங்கள் காட்டப்படுகின்றன என்பதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை அறிக.
உங்களின் Instagram மற்றும் Facebook கணக்குகள் முழுவதும் இணைக்கப்பட்ட அனுபவங்களை நீங்கள் இயக்கியிருந்தால், கூட்டாளர்களிடமிடமிருந்து உங்கள் செயல்பாடு பற்றிய தரவு எனும் அமைப்பு மூலம் உங்களின் Instagram விளம்பர அனுபவத்தை நீங்களும் மாற்றி அமைக்கலாம்.
ஆன்லைன் நடத்தை விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் அட்வர்டைசிங் அலையன்ஸ், டிஜிட்டல் அட்வர்டைசிங் அலையன்ஸ் ஆஃப் கனடா மற்றும் ஐரோப்பியன் இன்டராக்டிவ் டிஜிட்டல் அட்வர்டைசிங் அலையன்ஸ் ஆல் நிறுவப்பட்ட ஆப்ட்-அவுட் திட்டங்களில் பங்கேற்பதற்கான சுய ஒழுங்குமுறை கொள்கைகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்கிறோம். இந்த தளங்களின் வழியாக, நீங்கள் அனைத்து பங்குபெறும் நிறுவனங்களிலிருந்தும் வெளியேறலாம்.
இது உதவிகரமாக இருந்ததா?
ஆம்
இல்லை