1909
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1909 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1909 MCMIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1940 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2662 |
அர்மீனிய நாட்காட்டி | 1358 ԹՎ ՌՅԾԸ |
சீன நாட்காட்டி | 4605-4606 |
எபிரேய நாட்காட்டி | 5668-5669 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1964-1965 1831-1832 5010-5011 |
இரானிய நாட்காட்டி | 1287-1288 |
இசுலாமிய நாட்காட்டி | 1326 – 1327 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 42 (明治42年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2159 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4242 |
1909 (MCMIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 28 - அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் ஏனைய பகுதிகளை விட்டுப் புறப்பட்டன.
- மார்ச் 10 - ஆங்கிலேய-சியாம் உடன்பாடு பாங்கொக் நகரில் கைச்சாத்திடப்பட்டது.
- மார்ச் 18 - ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.
- மார்ச் 31 - டைட்டானிக் கப்பல் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
- மார்ச் 31 - பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.
- ஏப்ரல் 18 - ஜோன் ஆஃப் ஆர்க் ரோம் நகரில் புனிதப்படுத்தப்பட்டாள்.
- ஏப்ரல் 27 - துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.
- ஜூலை - இலங்கையில் மன்னாருக்கான தொடருந்துப் பாதை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
- ஜூலை 10 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
- நவம்பர் 11 - ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
- நவம்பர் 18 - நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
- டிசம்பர் 31 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.
நாள் அறியப்படாத நிகழ்வுகள்[தொகு]
- இந்திய அறிவியல் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- பார் அளவை சேர் நேப்பியர் ஷா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து நீர்கொழும்புக்கு ஆரம்பிக்கப்பட்டது.
- குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- ஜனவரி 22 - ஊ தாண்ட், ஐநாவின் 3வது பொதுச் செயலாளர் (இ. 1974)
- பெப்ரவரி 16 - மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (இ. 1969)
- மார்ச் 22 - நேதன் ரோசென், இஸ்ரேலிய இயற்பியலாளர்
- செப்டம்பர் 15 - சி. என். அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை ஆரம்பித்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் (இ. 1969)
- நவம்பர் 17 - சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)
- நவம்பர் 19 - பீட்டர் ட்ரக்கர், மேலாண்மைத்துறை எழுத்தாளர் (இ. 2005)
இறப்புக்கள்[தொகு]
- மார்ச் 29 - டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (பி. 1843)
நோபல் பரிசு பெற்றோர்[தொகு]
- இயற்பியல் - மார்க்கோனி, கார்ல் பேர்டினண்ட் பிறவுன்
- வேதியியல் - வில்ஹெம் ஓஸ்ட்வால்ட்
- மருத்துவம் - எமில் தியோடர் கோக்கர்
- இலக்கியம் - செல்மா லாகர்லோஃப்
- அமைதி - அகுஸ்டெ பியர்னார்ட்