சிமோன் என்பவர் கிரேக்கத்தில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு ஏதெனிய அரசியல்வாதியும் தளபதியும் ஆவார். இவர் மராத்தான் போரில் வெற்றி பெற்ற மில்டியாட்டீசின் மகனாவார். ஏதெனியன் கடல் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் சிமோன் முக்கிய பங்கு வகித்தார். சிமோன் புகழ்பெற்ற ஒரு இராணுவ வீரராக ஆனார். சலாமிஸ் போரில் ஈடுபட்ட பிறகு தளபதி இராணுவத் தரத்திற்கு உயர்ந்தார். மேலும்...
தாவர உண்ணியானதும்பிப்பன்றி (படம்) பாலூட்டிகள், பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.
முதல் கன்னடப் பேசும் படத்தை இயக்கியவர் ஒய். வி. ராவ் ஆவார்.
1989 – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்றுவங்காளதேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.
2005 – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.
துருவ ஒளி என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றப்பாடு உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,45,931 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.