தங்க நாடோடிக் கூட்டம் என்பது மங்கோலியாவில் தோன்றி பின் துருக்கிய மயமாக்கப்பட்ட 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கானேடாகும். இது கிப்சாக் கானேடு என்றும் சூச்சியின் உளூஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாடு 1255 இல் படு கானின் மறைவுக்குப் பின் 1359 வரை தழைத்தோங்கியது. இதன் இராணுவமானது இசுலாமைத் தழுவிய உசுபெக் கானின் (1312–1341) காலத்தில் வலிமையுடன் விளங்கியது. மேலும்...
பாபிலோன் தற்கால ஈராக் நாட்டின் கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாயும் யூப்ரடீஸ் ஆற்றின் இடது மற்றும் வலது கரையில், தற்கால ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு தெற்கே 100 கிலோ மீட்டர் தெற்கே, கி.மு. 1800 முதல் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முடிய செழித்திருந்த பண்டைய நகரம் ஆகும். கி.மு. 19 ஆம் நூற்றாண்டில், முதல் பாபிலோனியாவின் முதல் வம்சத்தவர்களின் நகர அரசாக பாபிலோன் நகரம் விளங்கியது. மேலும்...
செரெங்கெட்டி இடப்பெயர்வு (படம்) ஒவ்வோராண்டும் ஒரே நேரத்தில், ஆப்பிரிக்காவின் செரங்கட்டி சரணாலயத்திலிருந்து மசாய் மாரா என்ற இடத்துக்கு லட்சக்கணக்கான விலங்குகள் இடம் பெயரும் ஒரு நிகழ்வு.
புழுப்பாம்புகள் அனைத்தும் பெண் பாம்புகளாக இருப்பதால், ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்பவையாக உள்ளன.
188 மீட்டர் உயரம் உடைய தக்கீசு அணை ஆப்பிரிக்காவிலேயேஉயரமான அணையாகும்.
என்ஹெடுவானா என்பவர் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் கிடைக்கப்பெறும் முதல் எழுத்தாளராகவும், முதல் பெண் கவிஞராகவும் உலக வரலாற்றில் இடம்பெற்றவர் ஆவார்.
துபாயில் நடைபெற்ற உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் மாக்னசு கார்ல்சன் (படம்) உருசியாவின் இயன் நெப்போம்னியாட்சியை வென்று உலக வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
செருமனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவர் ஒலாஃப் சோல்த்சு தலைமையில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,42,978 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.