பிராண்டு ஆதாரங்கள்

கீழ்காண்பவை எங்கள் பிராண்டின் அடிப்படை விஷயங்களாகும். இந்தப் பக்கம் நீங்கள் அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்ள உதவுகிறது. எனினும் நீங்கள் எதைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் அதற்கு YouTube இன் ஒப்புதல் வேண்டும்.

பிராண்டு பயன்பாட்டின் கோரிக்கைப் படிவத்தை நிரப்புக

YouTube லோகோவைப் பயன்படுத்துதல்

சுற்றியிருக்கும் காலியிடம்

படங்கள், உரைகள், பிற கிராஃபிக்ஸ்கள் போன்றவற்றால் லோகோவின் தாக்கமும் தெரிவுநிலையும் பாதிக்கப்படாமலிருக்க லோகோவைச் சுற்றியிருக்கும் காலியிடம் உதவுகிறது. எங்கள் லோகோவைச் சுற்றியிருக்கும் காலியிடத்தின் அளவு அதிகரிக்கும்போது அதன் தாக்கமும் அதிகரிக்கக்கூடும்.

லோகோவைச் சுற்றியிருக்கும் காலியிடத்தின் அளவு, ஐகானின் உயரத்திற்குச் சமமாகவோ அதைவிட அதிகமாகவோ இருக்க வேண்டும்.

வெளிர்நிறப் பின்னணியில் முழு வண்ண YouTube லோகோ

உரிய அளவிற்கு மாற்றுதல்

குறிப்பிட்ட அளவுகளுக்கேற்ப எங்கள் லோகோவை மாற்றியமைத்துள்ளோம். எங்கள் லோகோ ஸ்மார்ட்ஃபோனில் தோன்றினாலும் அரங்கின் பெரிய திரையில் தோன்றினாலும் அது தெளிவாகவும் எளிதில் அடையாளங்காணக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

வெளிர்நிறப் பின்னணியில் முழு வண்ண YouTube லோகோ

குறைந்தபட்ச டிஜிட்டல் உயரம்: 20dp

வெளிர்நிறப் பின்னணியில் முழு வண்ண YouTube லோகோ

குறைந்தபட்ச அச்சிடும் உயரம்: 0.125இன்ச் அல்லது 3.1மிமீ

லோகோவில் என்ன செய்யக்கூடாது

YouTube லோகோ என்பது மக்கள் எளிதாக அடையாளம் காணக்கூடியதாகும், எனவே இதை ஒருபோதும் மாற்றக்கூடாது.

YouTube லோகோவில் என்ன செய்யக்கூடாது? சில உதாரணங்கள்:

செய்யக்கூடாதவைசெய்யக்கூடாதவை

  • ஐகான் மற்றும் "YouTube" வார்த்தை அல்லது இந்த எழுத்துகளின் இடைவெளியை மாற்றுதல்
  • சிவப்பு, கிட்டத்தட்ட கருப்பு அல்லது வெள்ளை அல்லாத மற்ற நிறங்களை பயன்படுத்துதல்
  • "YouTube"க்கு வேறொரு அச்சுமுகத்தைத் தேர்வுசெய்தல்
  • நிழலிடுதல் போன்ற காட்சி விளைவுகளைச் சேர்த்தல்
  • "YouTube" என்றச் சொல்லை வேறு விதத்தில் மாற்றுதல்
  • லோகோவின் வடிவத்தை மாற்றுதல்
  • லோகோவை, சொற்றொடர் அல்லது வாக்கியத்தில் பயன்படுத்துதல்
YouTube லோகோக்களைப் பயன்படுத்தும்போது நிகழும் பொதுவான தவறுகள்

ஒற்றை வண்ணப் பின்னணியில் லோகோவைப் பயன்படுத்துதல்

வெவ்வேறு, வண்ணம் மாறாத பின்னணிகளில் YouTube லோகோ எந்தெந்த நிறங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. பழுப்பு நிறத்தைவிட 40% வெளிர் வண்ணத்தில் இருக்கும் பின்னணியில் கிட்டத்தட்ட முழு, கருப்புநிற லோகோவைப் பயன்படுத்த வேண்டும். பழுப்பு நிறத்தைவிட 50% அடர் வண்ணத்தில் இருக்கும் பின்னணியில் முழு வெண்மைநிற லோகோவைப் பயன்படுத்த வேண்டும்.

ஒற்றை வண்ணப் பின்னணிகளில் YouTube லோகோ

முழு வண்ண லோகோ

முழு வண்ண லோகோவில், கிட்டத்தட்ட வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு வகைகள் உள்ளன – ஆனால் ஐகானில் இருக்கும் முக்கோணம் எப்போதும் வெள்ளையாகவே இருக்க வேண்டும்.

வெளிர்நிறப் பின்னணியில் கிட்டத்தட்ட முழுமையான கருப்பு வண்ண லோகோவைப் பயன்படுத்தவும். அடர்நிறப் பின்னணியில் முழு வெள்ளை வண்ண லோகோவைப் பயன்படுத்தவும்.

முழு வண்ணப் பின்னணிகளில் முழு வண்ண YouTube லோகோ

மோனோக்ரோம் லோகோ

பின்னணி நிறமானது, முழு வண்ண லோகோவின் தோற்றத்தைப் பார்க்க கடினமாக்குகிறது எனில், மோனோக்ரோம் லோகோவைப் பயன்படுத்த வேண்டும்.

கிட்டத்தட்ட கருப்பு நிற (#282828) மோனோக்ரோம் லோகோ, வெள்ளை முக்கோணத்தை ஐகானில் கொண்டுள்ளது. இதை வெளிர்நிறப் பல வண்ணப் படங்களுடன் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளை (#FFFFFF) மோனோக்ரோம் லோகோ வண்ணம் ஏதும் நிரம்பாத முக்கோணத்தைக் கொண்டிருக்கும். இதை அடர்நிறப் பல வண்ணப் படங்களுடன் பயன்படுத்த வேண்டும்.

சாம்பல் நிற கிரேடியன்ட் பின்னணியில் YouTube லோகோ

YouTube ஐகானைப் பயன்படுத்துதல்

எங்களின் ஐகான்

எங்கள் ஐகான், செயல்பாட்டிற்கு உகந்த வகையிலும், லோகோவின் சிறிய பதிப்பாகவும் பயன்படும் ஒரு குறியீடாகும். லோகோவை 24dp இல் பாதுகாப்பு இடைவெளியுடன் பயன்படுத்துவதற்கான போதிய இடமில்லை என்றால், YouTube ஐகானைப் பயன்படுத்த வேண்டும்.

முழு வண்ண YouTube ஐகான்

சுற்றியிருக்கும் காலியிடம்

படங்கள், உரைகள், பிற கிராஃபிக்ஸ்கள் போன்றவற்றால் லோகோ ஐகானின் தாக்கமும் தெரிவுநிலையும் பாதிக்கப்படாமலிருக்க அதைச் சுற்றியிருக்கும் காலியிடம் உதவுகிறது. லோகோ ஐகானைச் சுற்றியிருக்கும் காலியிடத்தின் அளவு அதிகரிக்கும்போது அதன் தாக்கமும் அதிகரிக்கக்கூடும்.

லோகோ ஐகானைச் சுற்றியிருக்கும் காலியிடத்தின் அளவு, ஐகானின் உயரத்திற்குச் சமமாகவோ அதைவிட அதிகமாகவோ இருக்க வேண்டும்.

YouTube லோகோ, வெளிர், அடர்நிறப் பின்னணியில் வெண்மை

உரிய அளவிற்கு மாற்றுதல்

குறிப்பிட்ட அளவுகளுக்கேற்ப எங்கள் லோகோ ஐகானை மாற்றியமைத்துள்ளோம். எங்கள் லோகோ ஐகான் ஸ்மார்ட்ஃபோனில் தோன்றினாலும் அரங்கின் பெரிய திரையில் தோன்றினாலும் அது தெளிவாகவும் எளிதில் அடையாளங்காணக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

வெளிர்நிறப் பின்னணியில் முழு வண்ண YouTube ஐகான்

குறைந்தபட்ச டிஜிட்டல் உயரம்: 20dp

வெளிர்நிறப் பின்னணியில் முழு வண்ண YouTube ஐகான்

குறைந்தபட்ச அச்சிடும் உயரம்: 0.125இன்ச் அல்லது 3.1மிமீ

ஐகானில் என்ன செய்யக்கூடாது

YouTube ஐகானை ஒருபோதும் மாற்றக்கூடாது.

ஐகானில் என்ன செய்யக்கூடாது? சில உதாரணங்கள்:

செய்யக்கூடாதவைசெய்யக்கூடாதவை

  • ஐகானின் வடிவத்தைச் செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ இழுத்தல்
  • முக்கோண வடிவத்தின் கோணங்கள் அல்லது அவற்றின் அளவுகளை மாற்றுதல்
  • சிவப்பு, கிட்டத்தட்ட கருப்பு அல்லது வெள்ளை அல்லாத நிறங்களைப் பயன்படுத்துதல்
  • ஐகானைச் சுழற்றுதல்
  • சிறப்பு விளைவுகளைச் சேர்த்தல்
  • ஐகானில் வடிவம் அல்லது படத்தைச் சேர்த்தல்
  • முக்கோண வடிவத்தை வேறு வடிவங்களாகவோ ஐகான்களோடோ மாற்றுதல்
  • முக்கோணத்தை வார்த்தைகளால் மாற்றுதல்
  • செவ்வக வடிவத்திற்குப் பதிலாகப் புதிய வடிவத்தைத் தேர்வுசெய்தல்
YouTube ஐகான்களைப் பயன்படுத்தும்போது நிகழும் பொதுவான தவறுகள்

சமூக ஊடகத்தில் ஐகானைப் பயன்படுத்துதல்

YouTube சேனலுக்கான இணைப்பாக இருந்தால் மட்டுமே YouTube ஐகானை சமூக ஊடக உரிமைகளில் பயன்படுத்த முடியும்.

முக்கியம்: இலக்கு URL ஆனது ஒரு YouTube சேனலாக இருந்தால் மட்டுமே லோகோ அல்லது ஐகானை இணைப்பாக மாற்ற முடியும்.

சமூக ஊடகப் பகிரும் பட்டியின் சூழலில் இருக்கும் YouTube ஐகான்

சரியான சூழலில் உள்ள YouTube சமூக மீடியா ஐகான்

YouTube வண்ணங்கள்

YouTube பிராண்டின் எந்தவொரு உறுப்பையும் பயன்படுத்துவதற்குச் சிறப்பு ஒப்புதல் பெறப்படவேண்டும். மேலும், அதற்கான மதிப்பாய்விற்காக பிராண்டு உபயோகக் கோரிக்கைப் படிவத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆங்கிலம் அல்லாத பிற மொழிக் கோரிக்கைகளுக்கு, நிகரான YouTube கூட்டாளரைத் தொடர்புகொள்ளவும். தனது வர்த்தகமுத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கும், எந்த நேரத்திலும் தனது உரிமைகளைச் செயல்படுத்துவதற்கும் YouTubeக்கு முழு அதிகாரம் உண்டு.

பிராண்டு பயன்பாட்டின் கோரிக்கைப் படிவத்தை நிரப்புக

கூட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள்

உங்கள் YouTube சேனல் அல்லது உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்த நீங்கள் விரும்புகிறீர்கள், நாங்கள் அதற்கு உதவ விரும்புகிறோம். கீழேயுள்ளவற்றையும், லோகோ மற்றும் ஐகான் பயன்பாட்டு வழிகாட்டுதல்களையும் நீங்கள் தொடர்ந்து கடைபிடிக்கும் வரை YouTube பெயர், லோகோ மற்றும் ஐகானைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செய்யக்கூடியவை

  • YouTube பிராண்டு உறுப்புகளின் ஒவ்வொரு உபயோகத்திற்கும் YouTube இன் ஒப்புதலைப் பெறவும்.
  • YouTube பிராண்டு வழிகாட்டுதல்கள் அனைத்தையும் பின்பற்றவும்
  • சேனல் ஆர்ட்டில் YouTube லோகோவை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  • சமீபத்திய லோகோக்களைப் பயன்படுத்தவும்
  • சமூக ஐகான்களுக்கு மத்தியில் YouTube ஐகானைப் பயன்படுத்துதல்
  • உங்கள் சேனல் அல்லது உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்துவதற்காக, சேனல் இணைப்பைக் கொடுக்கும்போதும், டிராஃபிக்கை அதிகரிக்கச் செயல்படும்போதும், நிலையான லோகோவைப் பயன்படுத்தவும்

செய்யக்கூடாதவை

  • YouTube இன் வெளியே இருக்கும் தளங்களுக்கு ஈர்ப்பதற்கு லோகோக்கள் அல்லது பிராண்டு உறுப்புகளைப் பயன்படுத்தவும்
  • லோகோக்கள், ஐகான்கள் அல்லது பிற பிராண்டு உறுப்புகளின் விகிதாச்சாரங்களை மாற்றுதல், நிலைகளை மாற்றுதல், இழுத்தல், சுருக்குதல், நிறம் அல்லது அச்சுமுகத்தை மாற்றுதல், புரட்டுதல் அல்லது சுழற்றுதல், விளைவுகளைச் சேர்த்தல் போன்ற வழிகளில் (ஆனால் இவை மட்டுமே அல்லாமல், மற்ற வழிகளிலும்) அவற்றில் மாற்றங்கள் செய்தல்
  • முழு வண்ண லோகோவை சிவப்பு நிறத்தில் வைக்கவும் (தெரிவுநிலை குறைவதால்)
  • லோகோ அல்லது ஐகானைப் பகுதியளவு மறைத்தல்
  • லோகோ அல்லது ஐகானுக்குள்ளேயே படத்தை வைத்தல்

YouTube பிராண்டிங் பயன்பாடு தொடர்பாகச் சில நல்ல மற்றும் மோசமான எடுத்துக்காட்டுகள்:

பிற சமூக மீடியா ஐகான்களுடன் சேர்த்து லோகோவை இன்லைனாகப் பயன்படுத்தும்போது, YouTube லோகோவிற்குப் பதிலாக YouTube ஐகானைப் பயன்படுத்துவது சிறந்தது.

செய்யக்கூடியவை
செய்யக்கூடாதவை

சரியான YouTube லோகோ & ஐகான்

சரியான, புதிய YouTube லோகோவைத்தான் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும், அதிகாரப்பூர்வமற்ற அல்லது பழைய லோகோவைப் பயன்படுத்தவில்லை என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும் (தவறான லோகோக்கள் பல உள்ளன). புதிய லோகோக்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

செய்யக்கூடியவை
செய்யக்கூடாதவை

சிவப்புப் பின்னணியில் தெரிவுநிலையின் முக்கியத்துவம் குறைவதால், வழக்கமான லோகோவை வைக்கக்கூடாது. வெள்ளை மோனோக்ரோம் லோகோ சிவப்புப் பின்னணியில் நன்றாகத் தெரியும்.

செய்யக்கூடியவை
செய்யக்கூடாதவை

முழு வண்ண லோகோவை சேனல் ஆர்ட்டில் பயன்படுத்தக்கூடாது, ஏனென்றால் இணையதளத்தில் ஏற்கனவே உள்ள YouTube லோகோவுடன் சேர்கையில் இது தேவையற்றதாகிவிடும்.

செய்யக்கூடியவை
செய்யக்கூடாதவை

மூன்றாம் தரப்பு அனுமதிகள்

  • உங்களுக்குச் சொந்தமில்லாத உள்ளடக்கத்தை YouTube இல் பதிவேற்றினால் அந்தந்த உள்ளடக்க உரிமையாளர்களிடமிருந்து மூன்றாம் தரப்பு அனுமதிகளைப் பெறுவது உங்களின் பொறுப்பாகும்.
  • விளம்பர பொருட்களில் ஏதேனும் உள்ளடக்கத்தைக் காட்டினால் தொடர்புடைய உள்ளடக்க உரிமையாளர்களிடமிருந்து தகுந்த மூன்றாம் தரப்பு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
  • கூட்டாளர்களுக்காக அனுமதிகளை வாங்கித்தரும் வேலையை YouTube செய்யாது. தகுந்த அனுமதிகளைப் பெற படம் அல்லது வீடியோ உரிமையாளரை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
  • YouTube இல் பதிவேற்றுவதன் மூலம் வீடியோவைப் பதிவேற்ற தேவைப்படும் உரிமைகள் உங்களுக்கு உண்டு என உத்திரவாதம் அளிக்கிறீர்கள். YouTube இன் பயன்பாட்டு விதிமுறைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களை மீறக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் தளத்திலிருந்து அகற்றுவதற்கான உரிமை YouTube இடம் உள்ளது.

"YouTuber" என்ற வார்த்தையைப் பயன்படுத்துதல்

படைப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்

  • பல படைப்பாளர்கள் தங்களை YouTuberகள் என்று அழைக்க விரும்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும், YouTube இல் அசல் வீடியோ அல்லது இசை உள்ளடக்கத்தை உருவாக்கி, பதிவேற்றுபவர்களை மட்டுமே “YouTuber” அல்லது “Tuber” என்று அழைக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
  • "YouTuber" என்பதை அனைவரும் வழக்கு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம். அதனால் “YouTuber” அல்லது “Tuber” என்ற பெயரை, வீடியோ தொடர்கள், புத்தகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வப் பெயர்களிலும், டொமைன்கள், சேனல் பெயர்கள் அல்லது வர்த்தக முத்திரைகளைப் பதிவுசெய்யவும் பயன்படுத்த வேண்டாம். இது, YouTube வர்த்தகமுத்திரையை ஒட்டுமொத்த படைப்பாளர்களின் சமூகத்திற்காக மட்டுமே வைத்துக்கொள்ள உதவுகிறது.

விளம்பரதாரர்களுக்கான வழிகாட்டுதல்கள்

  • YouTube இல் அசல் வீடியோ அல்லது இசை உள்ளடக்கத்தை உருவாக்கி, பதிவேற்றுபவரை மட்டுமே “YouTuber” என அழைக்கலாம். மற்ற வீடியோ இயங்குதளங்களில் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுபவர்களை "YouTubers”\ என அழைக்க முடியாது.
  • "YouTuber" என்பது வழக்கு மொழியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த, வீடியோ தொடர்கள், புத்தகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வப் பெயர்களிலும், “YouTuber” என்பதைப் பயன்படுத்திப் பதிவுசெய்ய விரும்பும் டொமைன்கள், சேனல் பெயர்கள் அல்லது வர்த்தக முத்திரைகளிலும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாமென மூன்றாம் தரப்பினரிடம் கேட்டுக்கொள்கிறோம். YouTube வர்த்தகமுத்திரையை YouTubeகும் YouTube சமூகத்துக்கும் மட்டுமே வைத்துக்கொள்ள இது உதவியாக இருக்கும்.
  • YouTube படைப்பாளர்கள், “Tuber” என்பதை வழக்கு மொழியில் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் விளம்பரதாரர்கள் ஒருபோதும் இதைப் பயன்படுத்தக்கூடாது.

YouTube பிராண்டின் எந்தவொரு உறுப்பையும் பயன்படுத்துவதற்குச் சிறப்பு ஒப்புதல் பெறப்படவேண்டும். மேலும், அதற்கான மதிப்பாய்விற்காக பிராண்டு உபயோகக் கோரிக்கைப் படிவத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆங்கிலம் அல்லாத பிற மொழிக் கோரிக்கைகளுக்கு, நிகரான YouTube கூட்டாளரைத் தொடர்புகொள்ளவும். தனது வர்த்தகமுத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கும், எந்த நேரத்திலும் தனது உரிமைகளைச் செயல்படுத்துவதற்கும் YouTubeக்கு முழு அதிகாரம் உண்டு.

பிராண்டு பயன்பாட்டின் கோரிக்கைப் படிவத்தை நிரப்புக

பொழுதுபோக்கு மற்றும் மீடியா

ஏதேனும் மீடியாவில் (வீடியோக்கள், டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செய்தித்தாள்கள் போன்றவை) YouTube பிராண்டைக் காண்பிக்க இந்த வழிகாட்டுதல்களைப் படிக்கவும்.

பிராண்டைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல்

நீங்கள் பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் துறையில் உள்ளீர்கள் எனில், எந்தவொரு ஊடகத்திலும் (எ.கா. டிவி, இசை வீடியோ, திரைப்படங்கள், புத்தகங்கள் போன்றவை) எந்தவொரு YouTube லோகோக்கள், ஐகான்கள் அல்லது UI இன் கூறுகளைக் (எ.கா. பொத்தான்கள், பக்கங்கள், மொபைல் ஸ்க்ரீன்ஷாட்கள் போன்றவை) காண்பிக்கும் எல்லாத் தயாரிப்பு இடங்களும் YouTube ஆல் ஒப்புதலளிக்கப்பட்டிருக்க வேண்டும். லோகோ பயன்பாட்டு வழிகாட்டுதல்களுடன் கீழே உள்ளவற்றையும் பின்பற்றி, பிராண்டு பயன்பாட்டின் கோரிக்கைப் படிவத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கவும். அதிகமான பார்வையாளர்களால் உங்கள் உருவாக்கம் பார்க்கப்படுமானால், நீங்கள் Google Inc. இன் சட்டப்பூர்வ அனுமதிப் படிவங்களில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.

முக்கியம்: நீங்கள் பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர் எனில், பிராண்டு பயன்பாட்டின் கோரிக்கைப் படிவத்தின் வழியாக மதிப்பாய்வுக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. என்பதைப் படிக்கவும். பிறகு, YouTube லோகோ அல்லது ஐகானைப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.

Google அனுமதிகள் படிவத்தை நிரப்புக

தயாரிப்பு இருப்பிடங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாகப் பின்வருவனவற்றை உறுதிசெய்யவும்

  1. தயாரிப்பு அமைவிடமானது YouTubeஐ நேர்மறையான அல்லது நடுநிலையான விதத்தில் பிரதிபலிக்கிறது.
  2. ப்ராடக்ட் ப்ளேஸ்மெண்ட் கென உருவாக்கப்பட்ட எந்தவொரு வீடியோவும் YouTube சமூக வழிகாட்டுதல்களை மீறவில்லை, YouTube பயன்பாட்டு விதிமுறைகளை மீறாது.
  3. அமைவிடத்திற்கான உங்கள் கோரிக்கையுடன், சூழலைப்பற்றியும் விரிவாகத் தெரிவிக்கலாம். இதில் YouTube எவ்வாறு காண்பிக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக, பயன்படுத்தப்படும் YouTube லோகோ மாதிரிகள் மற்றும்/அல்லது சூழலில் YouTube இன் இடைமுகம், தொடர்புடைய ஸ்கிரிப்ட் பக்கங்கள், தயாரிப்பின் மேலோட்டப் பார்வை, தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், தயாரிப்பின் பெயர் மற்றும் நடிகர்கள், இயக்குநர் போன்ற விவரங்களை உள்ளடக்கிய ஒரு PDF கோப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மூன்றாம் தரப்பு அனுமதிகள்

  • தளத்தில் மூன்றாம் தரப்பினர் உள்ளடக்கத்திற்கு YouTubeக்கு எந்த உரிமையும் இல்லை. தயாரிப்பின் இருப்பிடமானது பயனர் அல்லது கூட்டாளரின் உள்ளடக்கத்தைக் காண்பிக்குமானால் உள்ளடக்கத்தின் உரிமையாளருடன் உள்ளடக்கத்தின் பயன்பாட்டை நீக்குவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.
  • கூட்டாளர்களுக்காக அனுமதிகளை வாங்கித்தரும் வேலையை YouTube செய்யாது. தகுந்த அனுமதிகளைப் பெற படம் அல்லது வீடியோ உரிமையாளரை நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
  • YouTube இல் பதிவேற்றுவதன் மூலம், வீடியோவைப் பதிவேற்ற தேவைப்படும் உரிமைகள் உங்களுக்கு உண்டு என உத்திரவாதம் அளிக்கிறீர்கள். YouTube இன் பயன்பாட்டு விதிமுறைகள் அல்லது சமூக வழிகாட்டுதல்களை மீறக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் தளத்திலிருந்து அகற்றுவதற்கான உரிமை YouTube இடம் உள்ளது.
  • உங்களிடம் எல்லாத் தகவலும் மெட்டீரியல்களும் இருந்தால், பிராண்டு பயன்பாட்டுக்கான ஒப்புதல் கோரும் விண்ணப்பத்தை மதிப்பாய்வுக்காக ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கவும். பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் தேவைப்படும். ஆங்கிலம் அல்லாத கோரிக்கைகளுக்கு, உங்கள் YouTube கூட்டாளர்களுக்கு நிகரானவரைத் தொடர்புகொள்ளவும். தனது வர்த்தகச் சின்னங்களின் தவறான பயன்பாடுகளை எதிர்க்க மற்றும் எந்த நேரத்திலும் தனது உரிமைகளைச் செயல்படுத்த YouTubeக்கு உரிமை உண்டு.

YouTube பிராண்டின் எந்தவொரு உறுப்பையும் பயன்படுத்துவதற்குச் சிறப்பு ஒப்புதல் பெறப்படவேண்டும். மேலும், அதற்கான மதிப்பாய்விற்காக பிராண்டு உபயோகக் கோரிக்கைப் படிவத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆங்கிலம் அல்லாத பிற மொழிக் கோரிக்கைகளுக்கு, நிகரான YouTube கூட்டாளரைத் தொடர்புகொள்ளவும். தனது வர்த்தகமுத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்ப்பதற்கும், எந்த நேரத்திலும் தனது உரிமைகளைச் செயல்படுத்துவதற்கும் YouTubeக்கு முழு அதிகாரம் உண்டு.

Google அனுமதிகள் படிவத்தை நிரப்புக

API டெவெலப்பர்கள்

YouTube API ஆனது YouTube செயல்பாட்டை உங்கள் பயன்பாட்டில் அல்லது சாதனத்தில் இணைக்க உங்களை அனுமதிக்கிறது. வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ளக் கீழே உள்ள தளத்தைப் பார்வையிடவும் மேலும் உங்கள் பயன்பாடு, சாதனம் அல்லது சந்தைப்படுத்தல் பொருட்களில் YouTube அடையாளமிடலைச் சேர்ப்பதற்குத் தேவையான சொத்துகளைப் பதிவிறக்கவும்.

YouTube API டெவெலப்பர்களின் பிராண்டிங் வழிகாட்டுதல்களைப் பார்வையிடுக

சாதனக் கூட்டாளர்கள்

YouTube பிராண்டைப் பயன்படுத்த ஒப்புதல் கோருவதற்கான மதிப்பாய்விற்கு, பிராண்டு பயன்பாட்டின் கோரிக்கைப் படிவத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கவும். பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் தேவைப்படும். தனது வர்த்தகச் சின்னங்களின் தவறான பயன்பாடுகளை எதிர்க்க மற்றும் எந்த நேரத்திலும் தனது உரிமைகளைச் செயல்படுத்த YouTubeக்கு உரிமை உண்டு. உங்கள் சாதனத்தில், YouTube மற்றும் YouTube பிராண்டைப் பயன்படுத்துவதற்கு, YouTube உடன் தனியாக எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும், மேலும் ஒப்பந்தத்தின்படி, YouTube வலியுறுத்தும் சான்றிதழ்களைப் பெற்றிருக்கும் சாதனத்திற்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும்.

பிராண்டு பயன்பாட்டின் கோரிக்கைப் படிவத்தை நிரப்புக