முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதற்பக்கக் கட்டுரைகள்

Sneeze.JPG

மூச்சுத் திவலை என்பது பெரும்பாலும் நீரைக் கொண்டுள்ள ஒரு துகள் ஆகும். இது உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் விரைவாக தரையில் விழும் அளவுக்கு பெரியது. பெரும்பாலும் 5 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டதாக வரையறுக்கப்படுகிறது. சுவாசிப்பது, பேசுவது, தும்மல், இருமல் அல்லது வாந்தியெடுத்தல் போன்ற செயல்பாடுகளின் விளைவாக சுவாசத் துளி இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அல்லது தூசுப்படலத்தை உருவாக்கும் மருத்துவ நடைமுறைகள், கழிப்பறைகளை சுத்தப்படுத்துதல் அல்லது பிற வீட்டு வேலை நடவடிக்கைகள் மூலம் செயற்கையாகவும் இத்துளிகளை உருவாக்க முடியும். மேலும்...


Blue Marble Eastern Hemisphere.jpg

புவி சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள், விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்த புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாக கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அது முதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Northern Polished Black Ware Culture (700-200 BCE).png

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

COVID-19 Outbreak World Map.svg

இன்றைய நாளில்...

Yuri Gagarin in Sweden, 1964 (cropped).jpg

ஏப்ரல் 12: மனித விண்வெளிப் பயணத்துக்கான பன்னாட்டு நாள்

சே. ப. நரசிம்மலு நாயுடு (பி. 1854· வைத்திலிங்கம் துரைசுவாமி (இ. 1966· நெ. து. சுந்தரவடிவேலு (இ. 1993)
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 11 ஏப்ரல் 13 ஏப்ரல் 14

பங்களிப்பாளர் அறிமுகம்

W gandimadi.jpg

சு.காந்திமதி தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். அரசு பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.யோகா, உடற்பயிற்சி, பள்ளிப்பணி என திட்டமிட்டு நேரத்தைச் செலவிடும் காந்திமதி கிடைக்கும் குறைந்த ஓய்வு நேரத்திலும் விக்கிப்பீடியாத் திட்டங்களில் பங்களிப்பு செய்கிறார்.

விக்கிமூலத்தில் சுமார் 1700 தொகுப்புகளும், விக்கித்தரவில் சுமார் 1300 தொகுப்புகளும் செய்துள்ள காந்திமதி விக்கிப்பீடியாவில் வேங்கைத்திட்டம் 2.0 போட்டி, விக்கி மகளிர் நலம், விக்கிப் பெண்களை நேசிக்கிறது 2020 போன்ற திட்டங்களில் பங்கேற்று முக்கிய பங்காற்றியவர்.

சிறப்புப் படம்

Basil-cathedral-morning.jpg

புனித பசில் பேராலயம் உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட்டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

படம்: அ. சாவின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2157527" இருந்து மீள்விக்கப்பட்டது