முதற் பக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும்
இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு.
ஆக்கங்கள் 10,507 | மேம்படுத்த வேண்டியப் பக்கங்கள்: 3,68,951 தமிழ் விக்கிமூல டுவிட்டர் கணக்கு
விக்கிமூலத்தைப் பற்றியது (மேலும்)
  இன்றைய இலக்கியம்

இந்த புத்தகத்தை Mobi(kindle) fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை EPUB fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை RTF fileஆக பதிவிறக்குக. இந்த புத்தகத்தை PDFஆக பதிவிறக்குக. இவ்வடிவில் பதிவிறக்குக

"அதிகமான் நெடுமான் அஞ்சி" நூலை கி. வா. ஜகந்நாதன் எழதியுள்ளார். எழுத்தாளர் நூலைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

தமிழ் இலக்கியங்களில் வீரமும் காதலும் இணைந்து ஒளிர்கின்றன. சங்க காலத்து நூல்களில் காதற் பாட்டுக்கள் ஐந்துபங்கும் வீரப்பாடல்கள் ஒருபங்குமாக இருக்கின்றன. காதற் பாட்டுக்கள் எல்லாம் புனைந்துரைகள்; கற்பனைக் காட்சிகளை உடையன. ஆனால் வீரப் பாடல்கள் பெரும்பாலும் வரலாற்று உண்மைகளைக் கருவாகக் கொண்டவை.

எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலை தரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம். புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களும், தகடூர் யாத்திரைப் பாடல்களும், கொங்குமண்டல சதகப் பாடலும் இந்த வரலாற்றையறியத் துணையாக இருந்தன. அன்றியும் அதிகமான் கோட்டையின் இரகசியத்தைச் சேரனுக்கு ஒரு வஞ்சகமகள் அறிவித்தாள் என்ற செய்தி அதிகமான் வாழ்ந்த தருமபுரிப் பக்கத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவருகிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டேன்.

ஆராய்ச்சி முறையில் எழுதியதன்று இது. படிப்பவர்கள் நெஞ்சில் அதிகமான் உருவமும் செயல்களும் ஒவியமாக நிற்கவேண்டும் என்ற கருத்தோடு உரையாடல்களையும் வருணனைகளையும் இணைத்து எழுதினேன். ஆயினும் தலைமையான நிகழ்ச்சிகளுக்கெல்லாம்.ஆதாரங்கள் உண்டு; அவற்றை அடிக் குறிப்பிலே தந்திருக்கிறேன்.

1.முன்னோர்கள்

தமிழ் நாட்டைப் பல மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். ஆயினும் அவர்களுக்குள்ளே மிகப் பழங்காலந் தொட்டு இடைவிடாமல் ஆண்டு வந்தவர்கள் சேர சோழ பாண்டியர்கள். இந்த மூவேந்தர்களின் பழமையை, 'படைப்புக் காலந் தொட்டே இருந்து வருபவர்கள்' என்று சொல்லிப் புலவர்கள் பாராட்டுவார்கள். தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பிரிந்திருந்தது. சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், சேர மண்டலம் என்பவை அவை. அவற்றை ஆண்டுவந்த மன்னர்கள் மூவரையும் முடியுடை மூவேந்தர் என்று இலக்கியம் கூறும். அவர்களுடைய தலைமையின் கீழும், தனியேயும் பல சிறிய அரசர்கள் சிறிய சிறிய நாடுகளைத் தங்கள் ஆட்சிக்குரிமையாக்கி ஆண்டு வந்ததுண்டு; ஆனால் அவர்களுக்கு முடி அணியும் உரிமை இல்லை. பழங்கால முதல் தமிழ் நாட்டை ஆண்டு வந்த சேர சோழ பாண்டியர்களுக்கே அந்த உரிமை இருந்தது.

(மேலும் படிக்க...)
 
  இலக்கியங்கள்
சங்க இலக்கியம் பழந்தமிழ் இலக்கியங்கள்


இலக்கணம்

அகரமுதலியியல்

விக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம். Emblem-question.svg

பக்க விவரங்கள்

3,68,951 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
19,288 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
22,733 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
155 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
113 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை

நூல் விவரங்கள்

மெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 1,658
மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 97
மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 91

  கூட்டு முயற்சி
Featured article star - check.svg

இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்
தமிழ் இலக்கியக் கதைகள்  (2009)
ஆசிரியர் நா. பார்த்தசாரதி.

சென்ற மாதம் நிறைவடைந்தது: கிரிக்கெட் ஆட்டத்தின் கதை
அடுத்த கூட்டு முயற்சி ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.

தமிழ் இலக்கியக் கதைகள்.pdf
  புதிய உரைகள்


Wikimedia-logo.svg
விக்கிப்பீடியா விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்
விக்கி செய்திகள் விக்கி செய்திகள்
செய்திச் சேவை
விக்சனரி விக்சனரி
அகரமுதலி
விக்கி நூல்கள் விக்கி நூல்கள்
நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கியினங்கள் விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிபொது விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
மேல்-விக்கி மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
"https://ta.wikisource.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=953025" இருந்து மீள்விக்கப்பட்டது