முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதற்பக்கக் கட்டுரைகள்

Dostoevsky 1872.jpg

பியோதர் தஸ்தயெவ்ஸ்கி (1821–1881) ஒரு உருசியப் புதின எழுத்தாளரும் சிறுகதை ஆசிரியரும் கட்டுரையாளரும் பத்திரிக்கையாளரும் மெய்யியலாளரும் ஆவார். 19-ஆம் நூற்றாண்டு உருசியாவின் சிக்கலான அரசியல், சமூக, ஆன்மீகத் தளங்களில் மனித மனத்தின் ஆழங்களை இவரது படைப்புகள் ஆராய்பவை. பல்வேறு வகையான தத்துவ ஆன்மீக பின்புலங்களில் இவை முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னுடைய இருபதுகளில் எழுத ஆரம்பித்தவர். ‘குற்றமும் தண்டனையும்’ (1866), ‘அசடன்’ (1869), ‘அசுரர்கள்‘ (1872) ‘கரமசோவ் சகோதரர்கள்’ (1880) ஆகியன இவரது முக்கிய படைப்புகள். இலக்கிய விமர்சகர்கள் இவரை உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகக் கூறுவதும் உண்டு. மேலும்...


Crowds of French patriots line the Champs Elysees-edit2.jpg

பாரிசின் விடுவிப்பு என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நாட்சி செருமனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசு சண்டை என்றும் அறியப்படுகிறது. 1940ம் ஆண்டு பிரான்சை செருமனி தாக்கிக் கைபற்றியது. அடுத்த நான்காண்டுகள் பிரான்சு செருமனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இக்காலகட்டத்தில் அங்கு பல உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகி செருமானியர்களுக்கு எதிராகப் போராடி வந்தன. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Northern Polished Black Ware Culture (700-200 BCE).png

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

COVID-19 Outbreak World Map.svg

இன்றைய நாளில்...

0092 - Wien - Kunsthistorisches Museum - Gaius Julius Caesar.jpg

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமைகள் நாள்

எஸ். எம். சுப்பையா நாயுடு (பி. 1914· அழகு சுப்பிரமணியம் (பி. 1915· தி. சு. சதாசிவம் (பி. 1938)
அண்மைய நாட்கள்: மார்ச் 14 மார்ச் 16 மார்ச் 17

பங்களிப்பாளர் அறிமுகம்

பாத்திமா ரினோசா 2019 ஆம் ஆண்டு நடந்த புதுப்பயனர் போட்டியின் மூலம் விக்கிக்கு அறிமுகமானவர். வேங்கைத் திட்டம் 2.0, ஆசிய மாதம் 2019, விக்கி பெண்களை நேசிக்கிறது ஆகிய திட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். வேங்கைத்திட்டம் 2.0 இல் இந்திய அளவில் முதலிடம் பெற்ற பெண் ஆவார். அப்போட்டியில் இந்திய அளவில் பத்தாவது இடத்தை பெற்றவர். உயர் தேசிய பட்டயம் கற்கும் மாணவியான இவர் இலங்கையில் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். இவர் எழுதிய கட்டுரைகளில் சில : மூலக்கூற்று படியாக்கம், தாவர நோயியல், நொறுங்கு விண்மீன், சதிர்க்குரு, பரு, திமிங்கில எண்ணெய், செம்புள்ளி தொற்றுநோய்.

சிறப்புப் படம்

Basil-cathedral-morning.jpg

புனித பசில் பேராலயம் உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட்டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

படம்: அ. சாவின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2157527" இருந்து மீள்விக்கப்பட்டது