சேவை விதிமுறைகள்



Facebookக்கு வரவேற்கிறோம்!

மக்களை ஒன்றிணைப்பதற்கும், சமூகங்களை உருவாக்குவதற்கும், வணிகங்களை வளர்ப்பதற்கும் உதவும் தொழில்நுட்பங்களையும் சேவைகளையும் Facebook உருவாக்குகிறது. தனிப்பட்ட விதிமுறைகள் (இவை அல்ல) பொருந்தும் என வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை தவிர்த்து, Facebook, Messenger மற்றும் பிற தயாரிப்புகள், அம்சங்கள், பயன்பாடுகள், சேவைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை தொடர்பான உங்கள் உபயோகமும் நாங்கள் வழங்கும் மென்பொருளும் ( Facebook தயாரிப்புகள் அல்லது தயாரிப்புகள்) இந்த விதிமுறைகளின் கீழ் நிர்வகிக்கப்படும். Facebook, Inc உங்களுக்கு இந்தத் தயாரிப்புகளை வழங்குகிறது.

Facebook அல்லது இந்த விதிமுறைகளுக்கு கீழ் வரும் பிற தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்துவதற்கு நாங்கள் உங்களிடம் கட்டணம் வசூலிக்க மாட்டோம். மாறாக, வணிகங்களும் நிறுவனங்களும் அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை உங்களுக்கு காண்பிக்க எங்களுக்குப் பணம் செலுத்துகின்றன. எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களுக்கும் நீங்கள் ஆர்வங்கொள்ளும் விஷயங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும் என நாங்கள் கருதும் விளம்பரங்களை உங்களுக்குக் காட்டலாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். எந்த விளம்பரங்களை உங்களுக்குக் காட்டலாம் என்பதைத் தீர்மானிக்க உதவுவதற்காக உங்களின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம்.

உங்கள் தனிப்பட்ட தரவை விளம்பரதாரர்களுக்கு நாங்கள் விற்கமாட்டோம். மேலும், நீங்கள் குறிப்பிட்ட அனுமதியை வழங்காத பட்சத்தில் நேரடியாக உங்களை அடையாளப்படுத்தும் தகவலை (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது பிற தொடர்புத் தகவல் போன்றவை) நாங்கள் விளம்பரதாரர்களுடன் பகிரமாட்டோம். மாறாக, விளம்பரதாரர்கள் தங்களின் விளம்பரங்களை எந்த வகை பார்வையாளர்கள் பார்க்கலாம் என்பன போன்ற விஷயங்களை விளம்பரதாரர்கள் எங்களுக்குத் தெரிவிக்கலாம். நாங்கள் அந்த விளம்பரங்களை ஆர்வமுள்ள பயனர்களுக்கு காட்டுவோம். விளம்பரதாரர்களுக்கு அவர்கள் விளம்பரங்களின் செயல்திறனைப் பற்றி அறிக்கை அளிப்போம், இது அவர்களின் உள்ளடக்கத்துடன் எப்படி மக்கள் தொடர்புகொள்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவும். மேலும் அறிய கீழே பிரிவு 2 ஐப் பார்க்கவும்.

நீங்கள் காணும் சில விளம்பரங்களைத் தீர்மானிப்பதற்கும் கீழே விவரிக்கப்பட்டுள்ள பிற சேவைகள் அனைத்தையும் வழங்குவதற்கும் உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வாறு சேகரித்து பயன்படுத்துகிறோம் என்பதை எங்கள் தரவுக் கொள்கை விளக்குகிறது. எந்நேரமும் உங்கள் அமைப்புகள் என்பதற்குச் சென்று தனியுரிமை விருப்பங்களையும் உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

1. நாங்கள் வழங்கும் சேவைகள்

நட்பான சமூகத்தை உருவாக்கி, உலகை இன்னும் நெருக்கமானதாக மாற்றும் சக்தியை அளிப்பதே எங்கள் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதற்கு உதவும் வகையில், கீழே விவரிக்கப்பட்டுள்ள தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குகிறோம்:
உங்களுக்குத் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குதல்:
இடுகைகள், கதைகள், நிகழ்வுகள், விளம்பரங்கள் மற்றும் செய்தி வழங்கலில் நீங்கள் பார்க்கும் பிற உள்ளடக்கம் அல்லது நீங்கள் பின்தொடரும் பக்கங்களில் உள்ள எங்கள் வீடியோ தளம் மற்றும் டிரெண்டிங், Marketplace, தேடல் போன்று நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிற அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் உங்களின் Facebook அனுபவம் வேறெவரும் பெற்றிராத வகையில் மிகச் சிறப்பாக அமையும். உங்களுக்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தை வழங்குவதற்காக, நீங்கள் உருவாக்கும் இணைப்புகள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பங்கள் மற்றும் அமைப்புகள், எங்கள் தயாரிப்புகளிலும் பிற தயாரிப்புகளிலும் நீங்கள் பகிரும் மற்றும் செய்யும் செயல்கள் போன்று எங்களிடம் உள்ள தரவைப் பயன்படுத்துகிறோம்.
நீங்கள் முக்கியமாகக் கருதும் மக்கள் மற்றும் நிறுவனங்களுடன் உங்களை இணைத்தல்:
நீங்கள் பயன்படுத்தும் Facebook தயாரிப்புகள் அனைத்திலும் மக்கள், குழுக்கள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் நீங்கள் முக்கியமாகக் கருதும் பிற விஷயங்களைக் கண்டறிந்து, தொடர்புகொள்வதற்கான உதவியை வழங்குகிறோம். சேர்வதற்கான குழுக்கள், கலந்துகொள்வதற்கான நிகழ்வுகள், பின்தொடர்வதற்கான பக்கங்கள் அல்லது செய்தியை அனுப்புவதற்கான பயனர்கள், பார்ப்பதற்கான ஷோக்கள், நீங்கள் நண்பராக விரும்பக்கூடிய பயனர்கள் போன்ற பரிந்துரைகளை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குவதற்காக, எங்களிடம் உள்ள தரவைப் பயன்படுத்துகிறோம். நட்பான சமூகம் உருவாவதற்கு வலுவான உறவுகளே அடித்தளமாகும், மேலும் மக்கள் மக்களுடனும், குழுக்களுடனும், அவர்கள் முக்கியமாகக் கருதும் நிறுவனங்களுடனும் இணைப்பிலிருந்தே எங்கள் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.
எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் முக்கியமாகக் கருதும் விஷயங்களைத் தெரிவிப்பதற்குமான ஆற்றலை உங்களுக்கு வழங்குதல்:
உங்கள் எண்ணங்களை Facebook இல் வெளிப்படுத்தவும் நீங்கள் முக்கியமாகக் கருதும் விஷயங்களை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிறருக்குத் தெரிவிக்கவும் பல வழிகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் பயன்படுத்தும் Facebook தயாரிப்புகள் அனைத்திலும் நிலைப் புதுப்பிப்புகள், படங்கள், வீடியோக்கள் மற்றும் கதைகளைப் பகிர்தல், நண்பருக்கோ பிறருக்கோ செய்திகளை அனுப்புதல், நிகழ்வுகள் அல்லது குழுக்களை உருவாக்குதல் அல்லது உங்கள் சுயவிவரத்தில் உள்ளடக்கத்தைச் சேர்த்தல். Facebook இல் மிகவும் வெளிப்படையான மற்றும் கவரக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்கி, பகிர்வதற்காக, ஆக்மண்டட் ரியாலிட்டி, 360 டிகிரி வீடியோ போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளை உருவாக்கியுள்ளோம். அத்துடன், இது தொடர்பான ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
நீங்கள் ஆர்வங்காட்டக்கூடிய உள்ளடக்கம், தயாரிப்புகள், சேவைகள் ஆகியவற்றைக் கண்டறிய உங்களுக்கு உதவுதல்:
Facebook மற்றும் பிற Facebook தயாரிப்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு வணிகங்களும் நிறுவனங்களும் வழங்கும் உள்ளடக்கம், தயாரிப்புகள், சேவைகள் ஆகியவற்றைக் கண்டறிய உங்களுக்கு உதவும் வகையில், விளம்பரங்கள், ஆஃபர்கள் மற்றும் விளம்பரப்படுத்திய பிற உள்ளடக்கத்தையும் உங்களுக்குக் காட்டுகிறோம். கீழே பிரிவு 2 ஐப் பார்க்கவும், அதில் மேலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தீங்குவிளைவிக்கும் நடத்தைக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொண்டு, எங்கள் சமூகத்திற்குப் பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குதல்:
மக்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே, Facebook இல் சமூகத்தை உருவாக்ககுவார்கள். எங்கள் தயாரிப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, பிறருக்குத் தீங்குவிளைவிக்கும் நடத்தை, நமது சமூகத்திற்கு ஆதரவளிக்க அல்லது அதைப் பாதுகாக்க நாங்கள் உதவக்கூடிய சூழல்கள் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக, மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்கியுள்ளோம், மேலும் இது தொடர்பான விஷயங்களைக் கையாளக்கூடிய எங்கள் பிரத்யேகக் குழுக்கள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன. இதுபோன்ற உள்ளடக்கம் அல்லது உதவி வழங்குதல், உள்ளடக்கத்தை அகற்றுதல், சில அம்சங்களுக்கான அணுகலைத் தடுத்தல், குறிப்பிட்ட அம்சங்களுக்கான அணுகலை அகற்றுதல் அல்லது வரம்பிடுதல், கணக்கை முடக்குதல் அல்லது சட்ட அமலாக்கத் துறையைத் தொடர்புகொள்ளுதல் போன்ற நடத்தைக் குறித்தோ எங்களுக்குத் தெரிய வந்தால், உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம். எங்களின் தயாரிப்புகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துபவர் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது தீங்குவிளைவிக்கும் நடத்தையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தால், பிற Facebook நிறுவனங்களுடன் தரவைப் பகிர்வோம்.
அனைவருக்கும் பாதுகாப்பான, செயல்படக்கூடிய சேவைகளை வழங்குவதற்காக, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்:
உடல்திறன் அல்லது புவி இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், மக்கள் பாதுகாப்பான முறையில் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வகையில், ஆர்ட்டிஃபிஷியல் இண்ட்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் சிஸ்டம்ஸ், ஆக்மண்டட் ரியாலிட்டி போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன் நில்லாமல், அவற்றை மேம்படுத்தவும் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் Facebook அல்லது Instagram இல் பகிரப்பட்டுள்ள படங்கள் அல்லது வீடியோக்களில் என்ன இருக்கிறது அல்லது யார் இருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இதுபோன்ற தொழில்நுட்பம் உதவும். இணையத்தை ஓரளவு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பகுதிகளிலும் அதிகமானோர் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில், அதிநவீன நெட்வொர்க்கையும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தையும் உருவாக்குகிறோம். நமது சமூகத்திற்கும் எங்கள் தயாரிப்புகளின் ஒருங்கிணைப்பிற்கும் தீங்குவிளைவிக்கக்கூடிய முறைகேடான, ஆபத்தான செயல்பாட்டைக் கண்டறிந்து, அகற்றுவதற்கான எங்கள் திறனை மேம்படுத்த, தன்னியக்க அமைப்புகளையும் மேம்படுத்துகிறோம்.
எங்கள் சேவைகளைச் சிறப்பாக்குவதற்கான ஆராய்ச்சி வழிகள்:
எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்த, சோதிக்கவும் மேம்படுத்தவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறோம். எங்களிடம் உள்ள பயனர்கள் பற்றிய தரவை ஆய்வு செய்தல் மற்றும் எங்களின் தயாரிப்புகளை மக்கள் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை, உதாரணமாக கருத்துக்கணிப்பை நடத்துதல் மற்றும் புதிய அம்சங்களைச் சோதித்து பார்த்து பிழைகளைச் சரிசெய்தல் போன்றவை மூலம் புரிந்துகொள்வதும் இதில் அடங்கும். எங்கள் சேவைகளைக் கட்டமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான இந்த ஆய்வை ஆதரிப்பதற்காக நாங்கள் எவ்வாறு தரவைப் பயன்படுத்துகிறோம் என்பதை எங்கள் தரவுக் கொள்கை விளக்குகிறது.
Facebook நிறுவனத் தயாரிப்புகள் அனைத்திலும் சீரான, தடையில்லாத அனுபவங்களை வழங்குதல்:
நபர்கள், குழுக்கள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் உங்களுக்கு முக்கியமானவர்களைக் கண்டறியவும் தொடர்புகொள்ளவும் எங்கள் தயாரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் பயன்படுத்தும் வெவ்வேறு Facebook நிறுவனத் தயாரிப்புகள் அனைத்திலும் சீரான மற்றும் தடையில்லாத அனுபவத்தை பெறும்படி எங்கள் அமைப்புகளை வடிவமைத்துள்ளோம். எடுத்துக்காட்டாக, Facebook இல் நீங்கள் தொடர்பில் இருக்கும் நபர்களைப் பற்றிய தரவைப் பயன்படுத்தி, அவர்களுடன் Instagram அல்லது Messenger இல் நீங்கள் எளிதாக இணையும்படி செய்வோம். Facebook இல் நீங்கள் பின்தொடரும் வணிகத்துடன் Messenger வழியாக தொடர்புகொள்ளும் வசதியை வழங்குவோம்.
எங்கள் சேவைகளுக்கு உலகளாவிய அணுகலை வழங்குதல்:
எங்கள் உலகளாவிய சேவையைச் செயல்படுத்த, நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே இருப்பவை உட்பட உலகெங்கும் உள்ள எங்கள் தரவு மையங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ளடக்கத்தையும் தரவையும் சேமித்து, பகிர வேண்டும். இந்தக் கட்டமைப்பானது Facebook, Inc., Facebook அயர்லாந்து லிமிடெட் அல்லது அதன் துணை நிறுவனங்களால் நடத்தப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம்.

2. How our services are funded

Facebook மற்றும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் பணம் செலுத்துவதற்குப் பதிலாக, இந்த விதிமுறைகளின் கீழ் வரும் Facebook தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், Facebook நிறுவனத் தயாரிப்புகளிலும் பிற தயாரிப்புகளிலும் விளம்பரப்படுத்துவதற்காக வணிகங்களும் நிறுவனங்களும் எங்களுக்கு பணம் செலுத்தும் விளம்பரங்களை உங்களுக்கு விளம்பரப்படுத்தலாம் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் பொருத்தமான விளம்பரங்களைக் காட்டுவதற்கு, உங்கள் செயல்பாடு மற்றும் நீங்கள் ஆர்வம் காட்டும் விஷயங்கள் போன்ற உங்களின் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவோம்.
மக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்டு எங்களது விளம்பர அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் யார் என்பதை விளம்பரதாரர்களுக்குத் தெரியப்படுத்தாமலே உங்களுக்குப் பொருத்தமான மற்றும் பயனுள்ள விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிக்கலாம். உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் விற்க மாட்டோம். விளம்பரதாரர்கள் தங்கள் வணிகக் குறிக்கோள், அவர்கள் விளம்பரங்களை பார்க்க வேண்டும் என அவர்கள் விரும்பும் பார்வையாளர்கள் (உதாரணமாக, 18-35 வயதிற்குட்பட்டவர்கள் சைக்கிள் ஓட்டுவதை விரும்புகிறவர்கள்) போன்ற தகவலை எங்களுக்குத் தெரிவிக்க அனுமதிக்கிறோம். ஆர்வமாக இருப்பவர்களுக்கு அவர்களின் விளம்பரங்களைக் காட்டுவோம்.
Facebook மற்றும் பிற இடங்களில் விளம்பரதாரர்களின் உள்ளடக்கத்துடன் எப்படி மக்கள் தொடர்புகொள்கிறார்கள் என்பதை விளம்பரதாரர்கள் புரிந்துகொள்ள உதவுவதற்காக அவர்களுக்கு விளம்பரங்களின் செயல்திறனைப் பற்றி அறிக்கையையும் அளிப்போம். எடுத்துக்காட்டாக, தங்கள் பார்வையாளர்களை மேலும் புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில், பொதுவான டெமோகிராஃபிக் மற்றும் ஆர்வம் தொடர்பான தகவலை (எடுத்துக்காட்டாக, 25 முதல் 34 வயதுக்கு இடையே உள்ள மேட்ரிட்டில் வசிக்கும் மற்றும் மென்பொருள் பொறியியலை விரும்பும் பெண் விளம்பரத்தைப் பார்த்தார்) விளம்பரதாரர்களுக்கு வழங்குவோம். நீங்கள் குறிப்பிட்ட அனுமதியை எங்களுக்கு வழங்காத பட்சத்தில் நேரடியாக உங்களை அடையாளப்படுத்தும் தகவலை (உங்கள் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற உங்களைத் தொடர்புகொள்ள அல்லது அடையாளம் காணப் பயன்படுத்தக்கூடிய தகவல்கள்) நாங்கள் விளம்பரதாரர்களுடன் பகிரமாட்டோம். Facebook விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி இங்கே மேலும் அறிக.
மேலே விவரிக்கப்பட்டுள்ள சேவைகளை வழங்குவதற்காக, உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரித்து, பயன்படுத்துகிறோம். உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு சேகரித்து, பயன்படுத்துகிறோம் என்பது குறித்து, எங்கள் தரவுக் கொள்கையில் அறிந்துகொள்ளலாம். நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் மற்றும் விளம்பரதாரர்களின் வகைகளையும் உங்களுக்கு நாங்கள் எந்த விளம்பரங்களைக் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நாங்கள் பயன்படுத்தும் தகவல்களின் வகைகளையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். மேலும் அறிக.

3. Facebook மற்றும் எங்கள் சமூகத்திற்கு உங்களின் கடமைகள்

எங்கள் நோக்கத்தை முன்னெடுப்பதற்கு இந்தச் சேவைகளை உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குகிறோம். அதற்குப் பதிலாக, பின்வரும் உறுதிமொழிகளை நீங்கள் எடுக்க விரும்புகிறோம்:
1. Facebook ஐ யார் பயன்படுத்தலாம்
மக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் செயல்களில் உறுதியாக இருக்கும்போது, நமது சமூகம் பாதுகாப்பாகவும், இன்னும் பொறுப்பாகவும் இருக்கும். இந்தக் காரணத்திற்காக, நீங்கள் செய்யவேண்டியவை:
  • அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் பெயரையே பயன்படுத்துங்கள்.
  • உங்களைப் பற்றிய சரியான தகவல்களை வழங்குங்கள்.
  • ஒரேயொரு கணக்கை (உங்களுக்குச் சொந்தமானது) மட்டும் உருவாக்கி, தனிப்பட்ட நோக்கங்களுக்கு மட்டும் உங்கள் காலக்கோட்டைப் பயன்படுத்துங்கள்.
  • உங்கள் கடவுச்சொல்லைப் பகிர வேண்டாம், பிறருக்கு உங்கள் Facebook கணக்கின் அணுகலை வழங்க வேண்டாம் அல்லது வேறு எவருக்கும் உங்கள் கணக்கை மாற்ற வேண்டாம் (எங்கள் அனுமதி இல்லாமல்).
பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் வகையில் Facebook ஐ உருவாக்குகிறோம். இருப்பினும், பின்வரும் நிலைகளில் உங்களால் Facebook ஐப் பயன்படுத்த முடியாது:
  • 13 வயதுக்குக் கீழ் உள்ளவராக இருந்தால்.
  • பாலியல் குற்றவாளியாக இருந்தால்.
  • எங்களின் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறியதன் காரணமாக, உங்கள் கணக்கை ஏற்கனவே நாங்கள் முடக்கியிருந்தால்.
  • பொருந்தக்கூடிய சட்டங்களின்படி, எங்களின் தயாரிப்புகள், சேவைகள் அல்லது மென்பொருள் போன்றவற்றைப் பெறுவதில் இருந்து நீங்கள் தடைசெய்யப்பட்டிருந்தால்.
2. Facebook இல் நீங்கள் என்ன பகிரலாம், செய்யலாம்
பிறரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அல்லது எங்கள் சமூகத்தின் நன்மதிப்பு போன்றவற்றிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல், மக்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு முக்கியமாக இருக்கும் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கும் Facebook ஐப் பயன்படுத்த வேண்டுமென விரும்புகிறோம். அதனால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நடத்தைகளில் (அல்லது வேறொருவர் அதைச் செய்வதற்கு எளிதாக்குதல் அல்லது உதவுதல்) ஈடுபடக்கூடாது என்பதை ஏற்கிறீர்கள்:
  1. பின்வருவனவற்றைச் செய்ய அல்லது பகிர, எங்களின் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது:
    • Facebook ஐ நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக, இந்த விதிமுறைகள் , எங்களின் சமூகத் தரநிலைகள் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மீறும் செயல்கள்.
    • சட்டத்திற்குப் புறம்பான, தவறாக வழிநடத்தும், பாரபட்சம் அல்லது மோசடி செயல்கள்.
    • அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட ஒருவரின் உரிமைகளை மீறும் செயல்கள்.
  2. வைரஸ்கள் அல்லது தீங்கிழைக்கும் குறியீட்டைப் பதிவேற்றக்கூடாது அல்லது எங்களின் தயாரிப்புகளின் செயல்பாடு அல்லது தோற்றத்தை முடக்கும், பழுதாக்கும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக எதையும் செய்யக்கூடாது.
  3. தானியங்கு முறைகளைப் பயன்படுத்தி எங்களின் தயாரிப்புகளின் தரவை அணுகவோ அல்லது சேகரிக்கவோ கூடாது (எங்களின் முன்அனுமதி இல்லாமல்) அல்லது உங்களுக்கு அணுகல் அனுமதி இல்லாத தரவை அணுகக்கூடாது.
இந்த விதிகளை மீறும் உள்ளடக்கத்திற்கான அணுகலை நாங்கள் அகற்றலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்.
எங்கள் சமூகத் தரநிலைகளை மீறியதற்காக நீங்கள் பகிர்ந்த உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றினால், இந்த விதிமுறைகளை நீங்கள் வேண்டுமென்றோ அல்லது தொடர்ச்சியாகவோ மீறுகிறீர்கள் அல்லது அவ்வாறு செய்வது சட்டப்பூர்வப் பொறுப்புக்கு எங்களை அல்லது மற்றவர்களை உட்படுத்தும்; நம் சமூகத்தில் உள்ள பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்; தொழில்நுட்ப வரம்புகள் காரணமாக நாங்கள் கட்டுப்படுத்தப்படுத்தும் எங்கள் சேவைகள், அமைப்புகள் அல்லது தயாரிப்புகளின் நேர்மைத்தன்மை அல்லது செயல்பாட்டுடனான ஒப்பந்தம் அல்லது குறுக்கிடு; அல்லது சட்டப்பூர்வக் காரணங்களுக்காக நாம் அவ்வாறு செய்ய தடை செய்யப்படுவது போன்ற சூழல்கள் இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன் மதிப்பாய்வைக் கோருவதற்காக உங்களுக்குள்ள விருப்பங்கள் பற்றியும் விளக்குவோம்.
எங்களின் சமூகத்திற்கு உதவ, உங்கள் உரிமைகள் (அறிவுசார் சொத்துரிமைகள் உட்பட) அல்லது எங்களின் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை மீறுவதாக நீங்கள் கருதும் நடத்தை அல்லது உள்ளடக்கத்தைப் புகாரளிக்கவும்.
3. நீங்கள் எங்களுக்கு வழங்கும் அனுமதிகள்
எங்கள் சேவைகளை வழங்குவதற்கு, குறிப்பிட்ட அனுமதிகளை நீங்கள் வழங்க வேண்டும்:
  1. நீங்கள் உருவாக்கும் மற்றும் பகிரும் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி: படங்கள் அல்லது வீடியோக்கள் போன்ற நீங்கள் பகிரும் அல்லது பதிவேற்றும் சில உள்ளடக்கமானது அறிவுசார் சொத்தின் சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்படலாம்.
    நீங்கள் பயன்படுத்தும் Facebook மற்றும் பிற Facbook நிறுவனத் தயாரிப்புகளில் நீங்கள் உருவாக்கி பகிர்ந்து கொள்ளும் உள்ளடக்கத்தில், அறிவுசார் சொத்து உரிமைகள் (பதிப்புரிமை அல்லது வர்த்தக முத்திரைகள் போன்றவை) உங்களுடையதாக இருக்கும். இந்த விதிமுறைகளில் உள்ள எதுவும் உங்கள் சொந்த உள்ளடக்கம் மீதான உங்களது உரிமையை அகற்றாது. நீங்கள் விரும்பும் யாருடனும், எப்போதும் உங்கள் உள்ளடக்கத்தைப் பகிரலாம்.
    இருப்பினும், எங்கள் சேவைகளை வழங்க, இந்த உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு சில சட்டப்பூர்வ ('உரிமம்' என்றழைக்கப்படும்) அனுமதிகளை எங்களுக்கு நீங்கள் வழங்க வேண்டும். இது மேலே உள்ள பிரிவு 1 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் மட்டுமே ஆகும்.
    குறிப்பாக, அறிவுசார் சொத்துரிமைகளுக்கு உட்படும் உள்ளடக்கங்களை எங்கள் தயாரிப்புகளில் அல்லது அவற்றோடு தொடர்புடையவற்றில் பகிர்தல், இடுகையிடுதல் அல்லது பதிவேற்றுதல் ஆகியவற்றைச் செய்யும் போது, பிரத்யேகமல்லாத, பிறருக்கு வழங்கக்கூடிய, துணை உரிமம் பெறக்கூடிய, ராயல்டி இல்லாத மற்றும் தொகுக்க, பயன்படுத்த, விநியோகிக்க, மாற்ற, இயக்க, நகலெடுக்க, பொதுவில் செயல்படுத்த அல்லது காட்சிப்படுத்த, மொழிபெயர்க்க மற்றும் உங்கள் உள்ளடக்கம் தொடர்பான வேலைகளை உருவாக்குவதற்கான உலகளாவிய உரிமத்தை எங்களுக்கு அளிக்கிறீர்கள் (உங்கள் தனியுரிமை மற்றும் பயன்பாட்டு அமைப்புகளுக்கு இணங்க). அதாவது, எடுத்துக்காட்டாக, Facebook இல் நீங்கள் படத்தைப் பகிர்ந்தால், அதைச் சேமிப்பது, நகலெடுப்பது மற்றும் எங்கள் சேவையை அல்லது நீங்கள் பயன்படுத்தும் பிற Facebook தயாரிப்புகளை ஆதரிக்கும் சேவை வழங்குநர்கள் போன்றோருடன் பகிர்வதற்கான (மீண்டும், உங்கள் அமைப்புகளுக்கு இணங்க) அனுமதியை எங்களுக்கு வழங்குகிறீர்கள். உங்கள் உள்ளடக்கமானது எங்கள் அமைப்புகளில் இருந்து நீக்கப்படும் போது இந்த உரிமம் முடிவடையும்.
    உள்ளடக்கத்தை ஒவ்வொன்றாக நீக்கலாம் அல்லது மொத்தமாக உங்கள் கணக்கை நீக்கலாம். உங்கள் கணக்கை எப்படி நீக்கலாம் என்பது குறித்து மேலும் அறிக. உங்கள் கணக்கை அகற்றுவதற்கு முன் உங்கள் தரவின் நகலை எந்நேரமும் பதிவிறக்கலாம்.
    உள்ளடக்கத்தை நீங்கள் நீக்கினால், பிற பயனர்களால் அதைப் பார்க்க முடியாது, இருப்பினும் பின்வரும் காரணங்களின் நிமித்தம் எங்கள் அமைப்புகளில் எங்காவது இருக்கலாம்:
    • தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக உடனடியாக நீக்க முடியவில்லை எனில் (இந்தச் சூழலில் உங்களின் உள்ளடக்கமானது நீங்கள் நீக்கியதிலிருந்து அதிகபட்சம் 90 நாட்களுக்குள் நீக்கப்படும்);
    • இந்த உரிமத்திற்கு இணங்க உங்கள் உள்ளடக்கம் பிறரால் பயன்படுத்தப்பட்டு அவர்கள் இன்னும் நீக்கவில்லை எனில் (இந்தச் சூழலில் அந்த உள்ளடக்கம் நீக்கப்படும் வரை இந்த உரிமம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்); அல்லது
    • உடனடியாக நீக்குவது பின்வரும் செயல்களைத் தடுக்கும் எனில்:
      • சட்டவிரோத நடவடிக்கை அல்லது எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கை மீறல்களைக் கண்டறிவது அல்லது அடையாளம் காண்பது (உதாரணமாக, எங்கள் தயாரிப்புகள் அல்லது அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அடையாளம் காண்பதற்காக அல்லது ஆராய்வதற்காக);
      • ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற சட்டப்பூர்வக் கடமைக்கு இணங்குதல்; அல்லது
      • நீதித்துறை அல்லது நிர்வாக அதிகாரி, சட்ட அமலாக்க அதிகாரி அல்லது அரசு நிறுவனம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு இணங்குதல்;
  2. இந்தச் சூழலில், உள்ளடக்கம் தக்கவைக்கப்பட்டிருந்த நோக்கங்களுக்காக இனி அவசியப்படாத போது உள்ளடக்கம் தக்கவைக்கப்படாது (ஒவ்வொரு சூழலுக்கேற்ப சரியான கால அளவு மாறுபடும்).
    மேலே உள்ள ஒவ்வொரு காரணங்களிலும் உள்ளடக்கம் முழுமையாக நீக்கப்படும் வரை இந்த உரிமம் தொடரும்.
  3. உங்கள் பெயர், சுயவிவரப் படம் மற்றும் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்த உள்ளடக்கத்துடனான உங்கள் செயல்கள் பற்றிய தகவல்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதி: உங்கள் பெயர், சுயவிவரப் படம் மற்றும் விளம்பரங்கள் மற்றும் எங்கள் தயாரிப்புகளில் நாங்கள் காண்பிக்கும் விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் பிற ஸ்பான்சர் செய்த உள்ளடக்கத்திற்கு அடுத்து அல்லது தொடர்புடைய Facebook இல் நீங்கள் மேற்கொண்ட செயல்கள் பற்றிய தகவல்களைப் பயன்படுத்த அனுமதியை வழங்குகிறீர்கள். உங்களுக்கு எந்தச் சன்மானமும் வழங்கப்படாது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆர்வம் காட்டிய விளம்பரப்படுத்திய நிகழ்வையோ அல்லது விருப்பம் தெரிவித்த, தனது விளம்பரங்களை Facebook இல் காண்பிக்க எங்களுக்கு ஊதியம் அளிக்கும் பிராண்டு உருவாக்கிய பக்கத்தையோ உங்கள் நண்பர்களுக்குக் காட்டக்கூடும். Facebook இல் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களைப் பார்ப்பதற்கு உங்கள் அனுமதியைப் பெற்றவர்களால் மட்டுமே இது போன்ற விளம்பரங்களைப் பார்க்க முடியும். உங்கள் விளம்பர அமைப்புகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் பற்றி மேலும் அறியவும்.
  4. நீங்கள் பயன்படுத்தும் அல்லது பதிவிறக்கும் மென்பொருளைப் புதுப்பிப்பதற்கான அனுமதி: எங்கள் மென்பொருளை நீங்கள் பதிவிறக்கினாலோ பயன்படுத்தினாலோ, கிடைக்கும் மென்பொருளுக்குப் பதிவிறக்கவும் நிறுவவும் எங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள்.
4. எங்கள் அறிவுசார் சொத்தைப் பயன்படுத்துவதற்கான வரம்புகள்
அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வரும் எங்களிடத்தில் உள்ள உள்ளடக்கம் மற்றும் எங்கள் தயாரிப்புகளில் கிடைக்கும் உள்ளடக்கம் (எடுத்துக்காட்டாக, நாங்கள் வழங்கும் படங்கள், டிசைன்கள், வீடியோக்கள் அல்லது ஒலிகள் ஆகியவற்றை Facebook இல் நீங்கள் உருவாக்கும் அல்லது பகிரும் உள்ளடக்கத்துடன் சேர்ப்பது) ஆகியவற்றைப் பயன்படுத்தினால், அந்த உள்ளடகத்திற்கான (ஆனால் உங்களுடையது இல்லை) அனைத்து உரிமைகளும் எங்களுக்குச் சொந்தமாகும். எங்கள் பிராண்ட் பயன்பாட்டு வழிகாட்டுதல்களில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளபடி அல்லது எங்களிடம் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே எங்கள் பதிப்புரிமைகள் அல்லது வர்த்தக முத்திரைகளைப் (அல்லது அதைப் போன்ற ஏதேனும் முத்திரைகள்) பயன்படுத்தலாம். மூலக் குறியீட்டைத் திருத்த, அதிலிருந்து பிற படைப்புகளை உருவாக்க, மீள் தொகுப்பு செய்ய அல்லது மூலக் குறியீட்டைப் பெற முயற்சிப்பதற்கு எங்களின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் (அல்லது ஓப்பன் சோர்ஸ் உரிமத்தின் கீழ் அனுமதி) பெற வேண்டும்.

4. கூடுதல் விதிகள்

1. எங்களின் விதிமுறைகளைப் புதுப்பித்தல்
உங்களுக்கும் நமது சமூகத்திற்கும் எங்கள் தயாரிப்புகளைச் சிறப்பானதாக்க, சேவைகளை மேம்படுத்தவும் புதிய அம்சங்களை உருவாக்கவும் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இதன் விளைவாக, எங்களின் சேவைகள் மற்றும் நடைமுறைகளைத் துல்லியமாகக் காட்டும் வகையில் அவ்வப்போது இந்த விதிமுறைகளில் நாங்கள் மாற்றங்களைச் செய்யக்கூடும். சட்டத்தின்படி தேவைப்பட்டால், இந்த விதிமுறைகளில் நாங்கள் மாற்றங்கள் செய்வதற்கு முன்னர், உங்களுக்குத் தெரிவிப்போம் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கு முன்னர் மதிப்பாய்வு செய்வதற்கு உங்களுக்கு வாய்ப்பளிப்போம். மாற்றங்கள் செய்யப்பட்ட விதிமுறைகள் நடைமுறையில் இருந்து, எங்களின் தயாரிப்புகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், அவற்றுடன் நீங்கள் இணங்கிச் செயல்பட வேண்டும்.
எங்களின் தயாரிப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம். ஆனால், மாற்றங்கள் செய்யப்பட்ட எங்களின் விதிமுறைகளை நீங்கள் ஏற்காமல், Facebook சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை எனில், எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கை நீங்கள் நீக்கலாம்.
2. கணக்கு இடைநீக்கம் அல்லது முடக்கம்
தங்களை வெளிப்படுத்துவதற்கும் தங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளைப் பகிர்வதற்கும் தாங்கள் வரவேற்கப்படுவதாகவும் பாதுகாப்பாக உணரும் இடமாகவும் Facebook இருக்க வேண்டுமென விரும்புகிறோம்.
குறிப்பாக, எங்கள் சமூகத் தரநிலைகள் உட்பட எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை நீங்கள் தெளிவாகவும், தீவிரமாகவும் அல்லது தொடர்ந்து மீறியுள்ளீர்கள் என்பதை நாங்கள் உறுதிசெய்தால், உங்கள் கணக்கிற்கான அணுகல் இடைநீக்கம் செய்யப்படலாம் அல்லது நிரந்தரமாக முடக்கப்படலாம். நீங்கள் தொடர்ச்சியாக பிறரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் பட்சத்தில் அல்லது சட்ட நோக்கங்களுக்காகத் தேவைப்பட்டால், உங்கள் கணக்கை நாங்கள் இடைநிறுத்தலாம் அல்லது முடக்கலாம்.
அவ்வாறு செய்வது சட்டப்பூர்வப் பொறுப்புக்கு எங்களை அல்லது மற்றவர்களை உட்படுத்தும்; நம் சமூகத்தில் உள்ள பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்; எங்கள் சேவைகள், அமைப்புகள் அல்லது தயாரிப்புகளின் நேர்மைத்தன்மை அல்லது செயல்பாட்டுக்கு மாறாகச் செல்லும் அல்லது குறுக்கிடும்; அல்லது தொழில்நுட்ப வரம்புகள் காரணமாக நாங்கள் கட்டுப்படுதல்; அல்லது சட்டப்பூர்வக் காரணங்களுக்காக நாம் அவ்வாறு செய்ய தடை செய்யப்படுவது போன்ற சூழல்கள் இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன் மதிப்பாய்வைக் கோருவதற்காக உங்களுக்குள்ள விருப்பங்கள் பற்றியும் விளக்குவோம்.
உங்கள் கணக்கு முடக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்யலாம் என்பது குறித்தும், உங்கள் கணக்கை நாங்கள் தவறாக முடக்கியுள்ளதாக நீங்கள் கருதினால், எங்களை எப்படி தொடர்புகொள்ளலாம் என்பது குறித்தும் மேலும் அறிந்துகொள்ளலாம்.
உங்கள் கணக்கை நீங்கள் நீக்கினாலோ அல்லது நாங்கள் முடக்கினாலோ, இந்த விதிமுறைகள் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தமாக இருப்பதில் இருந்து நீக்கப்படும் ஆனால் பின்வரும் விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும்: 3, 4.2-4.5.
3. பொறுப்பு மீதான வரம்புகள்
சிறந்த தயாரிப்புகளை வழங்குவதுடன் மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்படுத்துவோர்க்கு தெளிவான வழிமுறைகளை உருவாக்கி, வழங்கவும் கடுமையாகப் பணியாற்றி வருகிறோம். இருப்பினும், எங்கள் தயாரிப்புகளை, "உள்ளபடியே வழங்குவதால்", அவை எப்போதும் பாதுகாப்பாகவோ, பராமரிப்புடனோ அல்லது பிழையின்றி இருக்கும் என்றோ அல்லது தடைகள், தாமதங்கள் அல்லது குறைபாடுகள் இன்றி இயங்கும் என்றோ, எங்களால் உத்திரவாதம் அளிக்க முடியாது. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு, வணிகத்தன்மையின் மறைமுக உத்திரவாதங்கள், குறிப்பிட்ட நோக்கத்திற்கான தகுதி, உரிமை மற்றும் விதிமீறலற்ற தன்மை உட்பட, வெளிப்படையான அல்லது மறைமுகமான எல்லா உத்திரவாதங்களையும் நிராகரிக்கிறோம். பயனர்களும் பிறரும் என்ன செய்கிறார்கள் அல்லது சொல்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்தவோ அல்லது வழிநடத்தவோ முடியாது, மேலும் அவர்களது செயல்கள் மற்றும் நடத்தை (ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில்) அல்லது அவர்கள் பகிரும் உள்ளடக்கத்திற்கு (மனதைப் புண்படுத்தக்கூடிய, பொருத்தமற்ற, ஆபாசமான, சட்டவிரோதமான மற்றும் ஆட்சேபிக்கக்கூடிய பிற உள்ளடக்கம்) நாங்கள் பொறுப்பேற்க முடியாது.
எங்கள் தயாரிப்புகளில் சிக்கல்கள் எப்போது தோன்றும் என்பதை எங்களால் கணிக்க முடியாது. அதன்படி, பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழு அளவிற்கு எங்கள் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற சேதங்கள் ஏற்படுவது தொடர்பான சாத்தியக்கூறுகளைக் குறித்து எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும், உங்கள் இலாபங்கள், வருவாய்கள், தகவல்கள் அல்லது தரவு ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளுக்கோ அல்லது இந்த விதிமுறைகள் அல்லது Facebook தயாரிப்புகளின் விளைவாகவோ அல்லது இவை தொடர்பாகவோ ஏற்படக்கூடிய விளைவான, சிறப்பான, மறைமுகமான, முன்மாதிரியான, தண்டனைக்குரிய அல்லது தற்செயலான சேதங்களுக்கோ நாங்கள் பொறுப்பல்ல. இந்த விதிமுறைகள் அல்லது Facebook தயாரிப்புகளின் விளைவாகவோ அல்லது இவை தொடர்பாகவோ ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடாகக் கொடுக்க வேண்டிய மொத்தப் பொறுப்பானது $100 அல்லது கடந்த பன்னிரண்டு மாதங்கள் நீங்கள் செலுத்திய தொகைக்கு அதிகமாக இருக்காது.
4. சிக்கல்கள்
உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தும் அல்லது தவிர்க்கும் வகையில், விதிகளைத் தெளிவாக வழங்க முயற்சிப்போம். எனினும், அவ்வாறு முரண்பாடு ஏற்பட்டால், அது எங்கே தீர்க்கப்படும் மற்றும் அதற்கான சட்டங்கள் என்ன என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது பயனுள்ளதாகும்.
இந்த விதிமுறைகள் அல்லது Facebook தயாரிப்புகளிலோ ("கிளைம்") அல்லது அதன் தொடர்பாகவோ எங்களுக்கு எதிராக ஏதேனும் கிளைம், வழக்கு மூலம் அல்லது முரண்பாட்டை நீங்கள் கொண்டிருந்தால், அது அமெரிக்காவில் கலிஃபோர்னியா வடக்கு மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றம் அல்லது சான் மிடோ கவுண்டியில் அமைந்துள்ள மாநில நீதிமன்றத்தில் மட்டுமே தீர்த்துக்கொள்ளப்படும் என்பதை ஏற்கிறீர்கள். இது போன்ற கிளைமை வழக்கு தொடுக்கும் நோக்கத்தில், இந்த இரண்டு நீதிமன்றங்களில் ஒன்றின் அதிகார வரம்பிற்குக் கீழ் சமர்ப்பிக்கவும் ஒப்புகொள்கிறீர்கள். சட்ட விதிகளில் எந்த முரண்பாடு இருந்தாலும், இந்த விதிமுறைகளும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கிளைமும் கலிஃபோர்னியா மாகாணச் சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும்.
5. மற்றவை
  1. இந்த விதிமுறைகள் (முன்னர் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான அறிக்கை என்று அறியப்பட்டது) எங்கள் தயரிப்புகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் Facebook, Inc.க்கும் இடையே முழுமையான ஒப்பந்தத்தை உண்டாக்குகிறது. முந்தைய ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் இவை மாற்றியமைக்கும்.
  2. நாங்கள் வழங்கும் சில தயாரிப்புகளும் துணை விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தத் தயாரிப்புகளில் எதையேனும் நீங்கள் பயன்படுத்தினால், துணை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு உங்களுடனான எங்கள் ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக அவை மாறும். உதாரணமாக, விளம்பரங்களை வாங்குதல், தயாரிப்புகளை விற்பனை செய்தல், பயன்பாடுகளை உருவாக்குதல், உங்கள் வணிகத்திற்காக குழு அல்லது பக்கத்தை நிர்வகித்தல் அல்லது எங்கள் அளவீட்டு சேவைகளைப் பயன்படுத்துதல் போன்று எங்கள் தயாரிப்புகளை வர்த்தக ரீதியாக அல்லது வணிக நோக்கங்ளுக்காக அணுகினால் அல்லது பயன்படுத்தினால், நீங்கள் எங்கள் வர்த்தக விதிமுறைகளை ஏற்க வேண்டும். இசையைக் கொண்ட உள்ளடக்கத்தை நீங்கள் இடுகையிடுகிறீர்கள் அல்லது பகிர்கிறீர்கள் என்றால் எங்கள் இசை விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். துணை விதிமுறைகளுக்கும் இந்த விதிமுறைகளுக்கும் இடையே எந்தளவுக்கு முரண்பாடு உள்ளதோ, அந்த அளவுக்கு துணை விதிமுறைகள் நிர்வகிக்கப்படும்.
  3. இந்த விதிமுறைகளில் எந்தப் பகுதியாவது நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருந்தால், மீதமுள்ள பகுதி முழுமையாக நடைமுறையில் இருக்கும். இந்த விதிமுறைகளின் எந்தப் பகுதியையாவது நாங்கள் செயல்படுத்தத் தவறினால், அது விலக்கிக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படாது. இந்த விதிமுறைகளில் செய்யப்படும் திருத்தங்கள் அல்லது விலக்கு தொடர்பான தகவல்கள் எழுத்துப்பூர்வமாக, கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
  4. எங்கள் அனுமதி இல்லாமல், இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள உங்கள் உரிமைகளையோ கடமைகளையோ நீங்கள் வேறு யாருக்கும் மாற்றக்கூடாது.
  5. உங்கள் கணக்கு நினைவுக் கணக்காக மாற்றப்பட்டால், அதை நிர்வகிக்க ஒருவரை (விருப்புரிமைத் தொடர்பு என்றழைக்கப்படும்) நீங்கள் நியமிக்கலாம். உங்கள் கணக்கு நினைவுக் கணக்காக மாற்றப்பட்ட பிறகு மரணம் அல்லது இயலாமையின் பொருட்டு உங்கள் விருப்புரிமைத் தொடர்பு அல்லது உங்கள் உள்ளடக்கத்தை வெளியிடுவதற்குத் தெளிவான ஒப்புதலை வெளிப்படுத்தும் உயில் அல்லது சமமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டவர் மட்டுமே அதை வெளியிடுவதற்குக் கோர முடியும்.
  6. இந்த விதிமுறைகள் மூன்றாம் தரப்பு பயனாளர்கள் உரிமைகள் எதையும் வழங்குவதில்லை. சட்டப்படியாகவோ அல்லது பிற முறைகளிலோ இணைத்தல், கையகப்படுத்தல் அல்லது சொத்துகளை விற்பனை செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும் போது, இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள எங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் அனைத்தும், எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாற்றப்படும்.
  7. சில சூழ்நிலைகளில் (எடுத்துக்காட்டாக, ஒருவர் பயனர்பெயரை கிளைம் செய்து, அது நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெயருடன் தொடர்பில்லாமல் இருந்தால்) உங்கள் பயனர்பெயரை நாங்கள் மாற்ற நேரிடும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
  8. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பற்றிய உங்கள் பின்னூட்டம் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் எப்பொழுதும் பாராட்டுகிறோம். ஆனால், உங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்ற கட்டுப்பாடோ அல்லது கடமையோ இல்லாமல், அவற்றை நாங்கள் பயன்படுத்தக்கூடும், மேலும் அவற்றை இரகசியமாக வைத்திருப்பதற்கான கடமை எங்களுக்கு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பது அவசியம்
  9. வெளிப்படையாக உங்களுக்கு வழங்கப்படாத எல்லா உரிமையும் எங்களுக்கு உரியதாகும்.

5. உங்களுக்குப் பொருந்தக்கூடிய பிற விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்

  • சமூகத் தரநிலைகள்: Facebook இல் நீங்கள் இடுகையிடும் உள்ளடக்கம் மற்றும் Facebook மற்றும் பிற Facebook தயாரிப்புகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • வணிக விதிமுறைகள்: விளம்பரப்படுத்துவது, எங்கள் பிளாட்பார்மில் பயன்பாட்டைச் செயல்படுத்துவது, எங்கள் அளவீடு சேவைகளைப் பயன்படுத்துவது, வணிகத்திற்காகக் குழு அல்லது பக்கத்தை நிர்வகிப்பது அல்லது பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வது உள்ளிட்ட ஏதேனும் வர்த்தகம் அல்லது வணிக நோக்கத்திற்காக, எங்கள் தயாரிப்புகளை அணுகினாலும் அல்லது பயன்படுத்தினாலும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • விளம்பரப்படுத்தல் கொள்கைகள்: Facebook தயாரிப்புகள் அனைத்திலும் விளம்பரப்படுத்தும் கூட்டாளர்களுக்கு, எந்த வகையான விளம்பர உள்ளடக்கம் அனுமதிக்கப்படும் என்பதை இந்தக் கொள்கைகள் குறிப்பிடுகின்றன.
  • சுய சேவை விளம்பர விதிமுறைகள்: நீங்கள் விளம்பரங்கள் அல்லது பிற வர்த்தகச் செய்திகள் அல்லது ஸ்பான்சர் செயல்பாடு அல்லது உள்ளடக்கம் ஆகியவற்றை உருவாக்க, சமர்ப்பிக்க அல்லது டெலிவர் செய்ய சுய சேவை விளம்பர இடைமுகங்களைப் பயன்படுத்தினால் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • பக்கங்கள், குழுக்கள் மற்றும் நிகழ்வுகள் கொள்கை: Facebook பக்கம், குழு அல்லது நிகழ்வை உருவாக்கினாலோ அல்லது நிர்வகித்தாலோ அல்லது Facebook ஐப் பயன்படுத்தி விளம்பரத்தை வழங்கினாலோ அல்லது நிர்வகித்தாலோ இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
  • Facebook பிளாட்பார்ம் கொள்கைகள்: எங்கள் பிளாட்பார்மை நீங்கள் பயன்படுத்துவதற்குப் (எடுத்துக்காட்டாக, பிளாட்பார்ம் பயன்பாடு அல்லது இணையதளத்தின் டெவலப்பர்கள் அல்லது ஆப்ரேட்டர்கள் அல்லது நீங்கள் சமூக செருகுநிரல்களைப் பயன்படுத்தினால்) பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • டெவலெப்பர் கட்டண விதிமுறைகள்: Facebook Payments ஐப் பயன்படுத்தும் பயன்பாடுகளின் டெவலப்பர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • சமூகக் கட்டண விதிமுறைகள்: Facebook இல் அல்லது Facebook மூலம் செய்யப்பட்ட பணம் செலுத்துதல்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்.
  • வர்த்தகக் கொள்கைகள்: Facebook இல் தயாரிப்புகளையும் சேவைகளையும் நீங்கள் விற்பனைக்கு வழங்கும்போது பொருந்தும் கொள்கைகளை, இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • Facebook பிராண்டு வளங்கள்: Facebook டிரேடுமார்க்குகள், லோகோக்கள் மற்றும் ஸ்க்ரீன்ஷாட்களைப் பயன்படுத்துவதற்குப் பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.
  • இசை வழிகாட்டுதல்கள்: Facebook இல் இசையைக் கொண்ட உள்ளடக்கத்தை இடுகையிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ பொருந்தும் கொள்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன.

கடைசியாகத் திருத்திய தேதி: ஜூலை 31, 2019