தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பற்றிய பதில்கள்

உங்கள் தனிப்பட்ட தகவலைத் தனிப்பட்டதாகவும், பாதுகாப்பாகவும் வைப்பதுடன், அதன் கட்டுப்பாட்டையும் உங்களிடம் அளிப்போம்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் தகவல் குறித்து எங்களை நம்பலாம். அதை நாங்கள் என்ன செய்கிறோம் எனக் கூற விரும்புகிறோம்:

தேடல், Gmail, வரைபடம் போன்ற சேவைகளை இத்தகைய தரவின் மூலமே வழங்குகின்றோம்.

தொடர்புடைய விளம்பரங்களைக் காட்டவும் தரவு எங்களுக்கு உதவுகிறது. எனவே, எங்கள் சேவைகளை அனைவருக்கும் இலவசமாக வழங்கலாம்.

உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் விற்பனை செய்வதில்லை எனத் தெரிந்துகொள்ளவும்.

மேலும் நாங்கள் எந்த வகையான தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

வேறு யாரும் வழங்கமுடியாத அளவிற்கு உங்களுக்கும் உங்கள் தரவிற்கும் அதிகப் பாதுகாப்பை வழங்குகின்றோம்.

Google எந்த மாதிரியான தரவைச் சேகரிக்கிறது?

உங்கள் அடிப்படைக் கணக்கு விவரங்கள், உருவாக்கும் விஷயங்கள் போன்ற எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி செய்யும் செயல்களின் அடிப்படையில் நாங்கள் சேகரிக்கும் தரவின் முக்கிய வகைகள் இருக்கும்.

Google இல் தேடுதல், Google வரைபடத்தில் வழிகளைப் பெறுதல் அல்லது YouTube இல் வீடியோ பார்த்தல் போன்ற செயல்களை எங்கள் தயாரிப்புகளில் மேற்கொள்ளும் போது, நீங்கள் செய்கிற விஷயங்களின் அடிப்படையில், சிறப்பான சேவைகளை உங்களுக்கு வழங்க உதவும் தகவல்களைச் சேகரிப்போம். Google கணக்கிற்குப் பதிவுசெய்யும் போது, உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் போன்ற நீங்கள் வழங்கும் அடிப்படைத் தகவல்களை வைத்திருப்போம். எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கியவற்றைச் சேமித்து, பாதுகாப்பாக வைப்பதால், உங்களுக்குத் தேவையான போதெல்லாம் உங்கள் மின்னஞ்சல்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பெறலாம்.

நாங்கள் எந்த வகையான தரவைச் சேகரித்துப் பயன்படுத்துகிறோம் என்பதைக் கட்டுப்படுத்த, கருவிகளையும் அளித்துள்ளோம்.

Google சேகரிக்கும் தரவைப் பற்றி மேலும் அறிக


Google சேகரிக்கும் தரவை என்ன செய்யும்?

பிரதானமாக, சிறப்பான தேடல் முடிவுகளையும் சரியான நேரத்திற்கு டிராஃபிக் அறிவிப்புகளையும் வழங்குதல் போன்று, எங்கள் சேவைகளை மிகவும் விரைவானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற தரவைப் பயன்படுத்துகிறோம். தீப்பொருள், ஃபிஷிங் மற்றும் பிற சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் போன்றவற்றிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்காக தரவு வடிவங்களைப் பகுப்பாய்வு செய்ய, தரவு உதவும். எடுத்துக்காட்டாக, ஆபத்தான இணையதளங்களைப் பார்வையிடும் போது உங்களை எச்சரிக்கின்றோம். மேலும் உங்களுக்கு அதிகம் தொடர்புடைய மற்றும் பயனுள்ள விளம்பரங்களைக் காட்டவும், எங்கள் சேவைகளை அனைவருக்கும் இலவசமாக வழங்கவும் தரவைப் பயன்படுத்துகின்றோம்.

Google தரவைப் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி மேலும் அறிக


Google எனது தனிப்பட்ட தகவலை விற்பனை செய்கிறதா?

இல்லை. உங்கள் தனிப்பட்ட தகவலை விற்பனை செய்வதில்லை.

உங்களுக்கு மிகவும் தொடர்புடைய மற்றும் பயனுள்ள விளம்பரங்களைக் காட்ட, தேடல்கள் மற்றும் இருப்பிடம் போன்ற குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்துகிறோம். தேடல், Gmail, வரைபடம் போன்ற எங்கள் சேவைகள் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்க, விளம்பரங்கள் உதவுகின்றன. உங்கள் அனுமதியின்றி, உங்களைத் தனியாக அடையாளப்படுத்தும் தகவலை விளம்பரதாரர்களிடம் பகிரமாட்டோம். எங்கள் விளம்பர அமைப்புகள் கருவி மூலம், உங்கள் ஆர்வங்கள் மற்றும் தேடல்கள் அடிப்படையிலான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தலாம்.

Google எப்படி விளம்பரங்களைக் காண்பிக்கிறது என்பது பற்றி மேலும் அறிக


எனது Google அனுபவத்தைக் கட்டுப்படுத்த உதவும் கருவிகள் எவை?

Google உங்களுக்காகச் செய்கிற வேலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியாக, எளிதாகப் பயன்படுத்தும் கருவிகளை வழங்குகிறோம்.

எனது கணக்கு என்பதில், உங்கள் தனியுரிமை மற்றும் தகவல்களை ஒரே இடத்தில் நிர்வகிப்பதற்கான கருவிகளைக் காணலாம்.

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் என்பதில் உள்ள எங்கள் தரவுக் கட்டுப்பாடுகள் மூலம், உங்கள் தேடல், YouTube மற்றும் இருப்பிடச் செயல்பாடு உட்பட நாங்கள் சேகரிக்கும் தரவின் வகைகளை நிர்வகிக்கலாம்.

எங்கள் விளம்பர அமைப்புகள் கருவி மூலம், உங்கள் ஆர்வங்கள் மற்றும் தேடல்கள் அடிப்படையிலான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தலாம்.

எங்கள் கருவிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி மேலும் அறிக


Google எனது தகவலை எவ்வாறு பாதுகாப்பாக வைக்கும்?

உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இல்லையெனில், அது தனிப்பட்டதாக இருக்காது. எனவேதான் Google சேவைகளைப் பயன்படுத்தும் போது, நீங்கள் உலகின் மிகச் சிறந்த ஒரு மேம்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பினால் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள்.

Google இன் பாதுகாப்பு உலாவல் தொழில்நுட்பம், நூறு கோடிக்கும் அதிகமானவர்களைப் பாதுகாப்பதுடன், தீப்பொருள் உள்ள அல்லது ஃபிஷிங் செய்ய முயற்சிக்கும் தளத்தை அணுகும் போது உங்களை எச்சரிக்கிறது.

சாதனம் மற்றும் Google ஆகியவற்றுக்கு இடையே உங்கள் தகவல் பாதுகாப்பாகப் பயணிப்பதை முறைமையாக்கம் உறுதிசெய்கிறது.

Gmail பாதுகாப்பு அம்சம், வேறெந்த மின்னஞ்சல் சேவையைக் காட்டிலும் ஸ்பேம், ஃபிஷிங் மற்றும் தீப்பொருள் ஆகியவற்றிலிருந்து சிறப்பாக பாதுகாக்கிறது.

உங்களை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருப்பதைப் பற்றி மேலும் அறியவும்


ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

எங்கள் எல்லா தயாரிப்புகளும் மேம்பட்ட ஆன்லைன் பாதுகாப்பு அம்சத்துடன் கட்டமைக்கப்படுகின்றன. இதோ உங்கள் தகவல்களைப் பாதுகாப்பாக வைக்க முக்கியமான, மூன்று எளிய விஷயங்கள்.

உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாக வைக்க உதவ, அவ்வப்போதுபாதுகாப்புச் சோதனையை மேற்கொள்ளவும். இதற்கு சில நிமிடங்கள் ஆகலாம்.

வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குவதுடன், Google கணக்கைத் தவிர வேறெந்த விஷயத்திற்கும் அதனைப் பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் கணக்கில் ஒரு ஃபோன் மீட்பு ஃபோன் எண்ணைச் சேர்க்கவும், அதனை பூட்டப்பட்ட உங்கள் கணக்கை மீட்டெடுக்கவோ, வேறு யாராவது உங்கள் கணக்கை அணுக முயற்சிப்பதாக நினைத்தாலோ, உங்களை அடையாளங்காணப் பயன்படுத்துவோம்.

ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியதை பற்றி மேலும் அறிக

எனது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை எங்கு காணலாம்?

தனியுரிமையையும் பாதுகாப்பையும் நிர்வகிப்பதற்கான கருவிகளைக் கண்டறிய, எனது கணக்கு என்பதற்குச் செல்லவும்.

எனது கணக்கு என்பதற்குச் செல்க