பதிப்புரிமை என்பது ஒட்டுமொத்த YouTube சமூகத்திற்குமான ஒரு முக்கியமான தலைப்பு ஆகும். கீழே உள்ள பிரிவுகளில், YouTube பிளாட்ஃபார்மில் உங்கள் உரிமைகளை நிர்வகிக்கத் தேவையான கருவிகள் மற்றும் எல்லா தகவலுக்குமான அணுகலைக் கண்டறிவீர்கள், மேலும் பிற படைப்பாளர்களின் உரிமைகளை மதிப்பது பற்றியும் அறிந்துகொள்ளவும்.
நீங்கள் ஒரு பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டைப் பற்றிய ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்க விரும்பினால், உங்கள் வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டது என்று நம்பினால் என்ன செய்வது என்பது பற்றிய தகவலைப் பெறுவதற்கும் அல்லது ஒரு Content ID பொருத்தத்திற்கு எதிராக எப்படி வழக்கிடுவது என்பது பற்றிய தகவலைப் பெறுவதற்கும், பின்வரும் ஆதாரங்கள், பயன்படுத்துவதற்கு எளிதான உரிமைகள் நிர்வாகச் செயல்முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
உங்கள் ஆக்கப்பூர்வ பணியின் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டை அகற்றக் கோரவும்.
பதிப்புரிமை மீறலுக்காக YouTube இலிருந்து தவறாக அகற்றப்பட்ட வீடியோவை மீண்டும் அமைக்கக் கோரவும்.
நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் YouTube இடம் சமர்ப்பித்த அகற்றல் கோரிக்கையை ரத்துசெய்யவும் அல்லது திரும்பப்பெறவும்.
தவறு என நீங்கள் நம்பும் உங்கள் வீடியோவில் Content ID உரிமை கோரலை முயற்சி செய்யவும்.
பதிப்புரிமை உலகத்தைப் பற்றி அறிவதற்கு நிறைய உள்ளன. பதிப்புரிமை சிக்கலைக் கண்டறிவதற்கு உதவ விரும்பினால், தொடங்குவதற்கு சிறந்த இடமாகக் கீழே உள்ள ஆதாரங்கள் இருக்கும். உங்கள் கேள்விக்கு இங்கு பதில் கிடைக்கவில்லை எனில், எங்கள் உதவி மையத்தை அணுகவும், அங்கு கூடுதல் தகவலைப் பெறுவீர்கள்.
Content ID உரிமை கோரல் மற்றும் பதிப்புரிமை தரமிறக்குதலை வேறுபடுத்தவும்.
பதிப்புரிமை எதிர்ப்பைப் பெற்றால், ஏன் பெற்றீர்கள் என்றும் அதைத் தீர்க்க சிறந்த வழி என்ன என்பதைப் பற்றியும் அறியவும்.
Youtube இல் பதிப்புரிமையால் பாதுகாக்கப்பட்ட உள்ளடக்கம் கண்டறியப்படும் வழிகளில் ஒன்றைப் பற்றியும், உங்களிடம் உரிமை கோரல் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும் மேலும் அறியவும்.
குறிப்பிட்ட YouTube அம்சங்களுக்கு நல்ல பதிப்புரிமை நிலை தேவைப்படுகிறது.
YouTube இல் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் உள்ள தங்களின் உள்ளடக்கத்தை அடையாளங்கண்டு உரிமைகோர உள்ளடக்க உரிமையாளர்கள் பயன்படுத்தும் கருவியான Content ID பற்றி மேலும் அறியவும்.
உங்கள் கணக்கு நல்ல அல்லது தவறான பதிப்புரிமை நிலையில் உள்ளதா எனச் சரிபார்க்கவும்.
பதிப்புரிமையைப் பற்றி மேலும் அறிய வேண்டுமா? பொது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அல்லது நியாயமான பயன்பாடு போன்ற தலைப்புகளைப் பற்றி மேலும் ஆழமாக புரிந்துகொள்ள முயற்சிக்கிறீர்களோ, நீங்கள் தொடங்குவதற்கு இந்த ஆதாரங்கள் உதவும்.
பதிப்புரிமையால் பாதுகாக்கப்படுவது என்ன? அறிவுசார் சொத்தின் பிற வடிவங்களிலிருந்து பதிப்புரிமை எப்படி வேறுபடுகிறது?
பதிப்புரிமை செய்த உள்ளடக்கத்திலிருந்து பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ள சட்டத்தால் அனுமதிக்கப்படும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் உள்ளன.
நீங்கள் விதிகளைப் பின்பற்றினால் -- உள்ளடக்கத்தை மறுபயன்பாட்டுக்கு அனுமதிக்கும் சிறப்பு உரிம வகையைப் பற்றி அறிந்துகொள்ளவும்.
எங்களிடம் அடிக்கடி கேட்கப்பட்ட பதிப்புரிமை தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள்.