புள்ளி விவரங்கள்

பார்வையாளர் தகுதி

  • ஒவ்வொரு மாதமும் 1 பில்லியனுக்கும் மேலான தனிப்பட்ட பயனர்கள் YouTube ஐப் பார்வையிடுகின்றனர்
  • YouTube இல் ஒவ்வொரு மாதமும் சுமார் 6 பில்லியன் மணிநேர வீடியோ பார்க்கப்படுகிறது—இது உலகிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் சுமார் ஒரு மணிநேரமாகும்
  • YouTube இல் ஒவ்வொரு நிமிடமும் 100 மணி நேர வீடியோ பதிவேற்றப்படுகிறது
  • YouTube இன் 80% டிராஃபிக் யுஎஸ் க்கு வெளியிலிருந்தே வருகிறது.
  • 61 நாடுகளில், 61 மொழிகளில் YouTube மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது
  • நீல்சனின் கருத்துப்படி, எந்த கேபிள் நெட்வொர்க்கையும் விட YouTube, 18-34 வயதுக்குட்பட்ட அதிகமான யு.எஸ் குடிமக்களை அடைந்துள்ளது
  • பல லட்சக்கணக்கான சந்தாக்கள் தினமும் நடைபெறுகின்றன. தினமும் குழுசேரும் நபர்களின் எண்ணிக்கைக் கடந்த ஆண்டை விட 3 மடங்கிற்கும் அதிகமாக உள்ளது மற்றும் தினசரி சந்தாக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 4 மடங்கிற்கும் அதிகமாக உள்ளது

YouTube கூட்டாளர் திட்டம்

  • 2007 இல் உருவாக்கப்பட்டு, இப்போது எங்களிடம் உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மில்லியனுக்கும் அதிகமான படைப்பாளர்கள் தங்களின் YouTube வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர்
  • ஆயிரக்கணக்கான சேனல்கள் வருடத்திற்கு ஆறு இலக்கங்களில் வருவாயை ஈட்டுகின்றன

பணமாக்குதல்

  • ஆயிரக்கணக்கான விளம்பரதாரர்கள் TrueView இன்ஸ்ட்ரீமைப் பயன்படுத்துகின்றனர், மேலும் எங்களது 75% இன்ஸ்ட்ரீம் விளம்பரங்கள் இப்போது தவிர்க்கக்கூடிய நிலையில் உள்ளன
  • ஒரு மில்லியனிற்கும் மேலான விளம்பரதாரர்கள் Google விளம்பரத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள், அதில் பெரும்பான்மையானவை சிறிய வணிகங்கள்.

மொபைலும் சாதனங்களும்

  • YouTube இன் உலகளாவிய பார்வை நேரத்தில், ஏறத்தாழ 40% மொபைல் வழியாக வருகிறது
  • பல மில்லியன் கணக்கான சாதனங்களில் YouTube கிடைக்கிறது

Content ID

  • ஒவ்வொரு நாளும் 400 ஆண்டுகளை விடவும் நீளமான வீடியோக்களை Content ID ஸ்கேன் செய்கிறது
  • பெரிய யு.எஸ். நெட்வொர்க் ஒளிபரப்பாளர்கள், திரைப்பட ஸ்டுடியோக்கள் மற்றும் பதிவு லேபிள்கள் போன்றவற்றை உள்ளிட்ட 5,000 க்கும் மேற்பட்ட கூட்டாளர்கள் Content ID ஐப் பயன்படுத்துகின்றனர்
  • எங்கள் Content ID தரவுத்தளத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமாக குறிப்புக் கோப்புகள் உள்ளன; உலகின் மிகவும் விரிவான தரவுத்தளங்களில் இதுவும் ஒன்றாகும்
  • பல மில்லியன் கணக்கான டாலர்களைக் கூட்டாளர்களுக்கு Content ID ஈட்டித் தந்துள்ளது