கிரியேட்டிவ் காமன்ஸ்

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள், உள்ளடக்க படைப்பாளர்களின் படைப்பைப் பிறர் பயன்படுத்த அனுமதிப்பதற்கான நிலையான வழியை அவர்களுக்கு வழங்குகிறது. தங்களுடைய வீடியோக்களில் பயனர்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் CC BY உரிமத்தைக் குறிக்க YouTube அனுமதிக்கிறது. இதன் பிறகு, தங்களின் சொந்த வீடியோக்களில் YouTube வீடியோ திருத்தி வழியாக இந்த வீடியோக்களை வணிகரீதியாகவும் YouTube பயனர்கள் அணுக முடியும்.

CC BY உரிமத்தின் கீழ் தானாக பண்புக்கூறு வழங்கப்படும், அதாவது கிரியேட்டிவ் காமன்ஸ் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்கும் எந்த வீடியோவும், மூல வீடியோவின் தலைப்புகளை வீடியோ பிளேயரின் கீழ் தானாகவே காண்பிக்கும். உங்கள் பதிப்புரிமையைத் தக்கவைப்பதன் மூலம், உரிம விதிமுறைகளுக்கு உட்பட்டு பிற பயனர்கள் உங்கள் படைப்பை மீண்டும் பயன்படுத்தலாம்.

YouTube இல் கிரியேட்டிவ் காமன்ஸைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

தங்கள் கணக்குகளை நல்ல நிலையில் வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே ஏற்றப்பட்ட வீடியோக்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் மூலம் குறிக்கும் திறன் உள்ளது. உங்கள் YouTube கணக்கு அமைப்புகளின் கீழ் உங்கள் கணக்கின் நிலையைப் பார்க்கலாம்.

நிலையான YouTube உரிமமானது எல்லா ஏற்றங்களுக்கும் இயல்புநிலை அமைப்பாக இருக்கும். நிலையான YouTube உரிமத்தின் விதிமுறைகளைக் காண, எங்கள் சேவை விதிமுறைகளைப் பார்க்கவும்.

உங்கள் வீடியோவின் மேல் Content ID உரிமை கோரல் இருந்தால் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் மூலம் அதைக் குறிக்க முடியாது.

உங்கள் அசல் வீடியோவை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தால் குறிப்பதன் மூலம், வீடியோவை மீண்டும் பயன்படுத்துவதற்கும், திருத்துவதற்குமான உரிமையை மொத்த YouTube சமூகத்திற்கும் வழங்குகிறீர்கள்.

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்திற்கு தகுதிபெறுவது எது

CC BY உரிமத்தின் கீழ் மொத்த உள்ளடக்கமும் உங்களால் உரிமம் வழங்கக்கூடியதாக இருந்தால் மட்டுமே உங்கள் ஏற்றப்பட்ட வீடியோவை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் மூலம் குறிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளவும். இவை அதுபோன்ற உரிமம் வழங்கத்தக்க உள்ளடக்கத்தின் சில எடுத்துக்காட்டுகள்:

  1. நீங்கள் சொந்தமாக உருவாக்கிய உள்ளடக்கம்
  2. CC BY உரிமம் மூலம் குறிக்கப்பட்ட பிற வீடியோக்கள்
  3. பொது களத்தில் உள்ள வீடியோக்கள்