2024 இந்தியத் தேர்தல்கள்: பத்திரிகையாளர் பாதுகாப்புக் கையேடு
2024இல் ஆளும் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க தேர்தலை எதிர்கொள்கிறது. வரும் ஏப்ரல் 2024இல் நடக்கவிருக்கும் இந்த தேர்தலில் 60 கோடிக்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட இந்திய வாக்காளர் திரள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்த இருக்கிறது. சிபிஜேவின் அவசரகால செயல்பாட்டுக் குழு இந்தியாவின் தேர்தல் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் கையேட்டை உருவாக்கியிருக்கிறது. இதில் பதிப்பாசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக்காரர்களுக்கான தகவல்கள் இருக்கின்றன. தேர்தலுக்கு தயாராவது எப்படி, டிஜிட்டல், உடல்ரீதியான, மனரீதியான…
இணைய முடக்கங்களின் போது: டிஜிட்டல் பாதுகாப்பு
இணைய முடக்கங்கள் பத்திரிகைச் சுதந்திரத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்துவதையும் அவை ஊடகவியலாளர்கள் தமது பணியை வினைத்திறனுடன் செய்வதை போராட்டம் மிக்க விடயமாக மாற்றுவதையும் CPJ கண்டறிந்துள்ளது. இணையத்தை செயலிழக்க செய்வது அல்லது அதன் மீதான அணுகலை மட்டுப்படுத்தல் காரணமாக ஊடகப் பணியாளர்கள் தமது மூலங்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை, மற்றும் தரவுகளின் யதார்த்த நிலையை சோதனை செய்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாமல் போவதுடன் நிகழ்வு ஒன்று நிகழ்ந்த பின்னர் கூட கதைகளை அறிக்கையிட…
டிஜிட்டல் மற்றும் பௌதீக பாதுகாப்பு: இரகசிய மூலங்களை பாதுகாத்தல்.
இரகசிய மூலங்களைப் பாதுகாத்தல் என்பது ஒழுக்க நெறிமுறை மிக்க அறிக்கையிடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவுள்ளது. ஊடகவியலாளர்கள் ஒருவரின் அடையாளத்தை பாதுகாக்க இணங்கும் பட்சத்தில், அவர்கள் அதனை நிறைவேற்றுவதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். விசேடமாக, மூலம் ஒன்று கைது செய்யப்பட அல்லது தீங்கை எதிர்நோக்க சாத்தியம் மிக்க சூழ்நிலைகளில் இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். அதிகார தரப்பினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ளும் கண்காணிப்பு மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் உளவு பாரத்ததல் செயற்பாடுகள் என்பவற்றின் காரணமாக…
உடலியல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு: கைது மற்றும் தடுத்து வைக்கப்படல்
மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள், ஊழல், அல்லது சிவில் குழப்ப நிலை போன்ற விடயங்கள் தொடர்பான கதைகளை நீங்கள அறிக்கையிடும் வேளை, நீங்கள் கைது செய்யப்படும் மற்றும் தடுத்து வைக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகும், குறிப்பாக அதிக இராணுவ மற்றும் பொலிஸ் பிரசன்னம் மிக்க சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் இதன் சாத்தியம் உயர்வானதாகும். அதிகார தரப்புகளை எதிர்கொள்ளும் வேளை பொதுவாக அவர்களின் கட்டளைகளை ஏற்று நடக்கும் சூழ்நிலை உருவாகின்றது, அவர்களின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவையாக இருப்பினும் உங்களின் பாதுகாப்பை…
உடல் சார்ந்த (physical) மற்றும் டிஜிட்டல் (digital) பாதுகாப்பு: குடிமை சீர்கேடு
ஜுலை 20ää 2021 அன்று புதுப்பிக்கப்பட்டது. கூட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து அறிக்கையிடுவது ஆபத்தானது. வன்முறை ரீதியான எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அந்த இடங்களிலிருந்து அறிக்கையிடும் போது பல ஊடகப் பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் காயமடைகின்றனர். அபாயத்தைக் குறைக்க, ஊடகப் பணியாளர்கள் பின்வரும் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்: பணி திட்டமிடல் யார் கலந்துகொள்வார்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அவர்களின் மனோநிலையைக் கண்டறியவும் (உதாரணம்: தீவிரவாத குழுக்கள்ää எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்ää ஆயுதமேந்திய காவலர்கள்ää கலகப் பிரிவு…
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கேட்டு அரசாங்கங்கள் மீது குற்றம் சாட்டும் மக்கள் நியாய சபை
தி ஹேக்,(The Hague) 28 செப்டம்பர் 2021- ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதில் நீதி பெற முன்னெப்போதும் இல்லாத முயற்சியில், மூன்று முன்னணி பத்திரிகை சுதந்திரக் குழுக்கள், அவர்களது கொலைகளை விசாரிக்கவும் சம்பந்தபட்ட அரசாங்கங்களை பொறுப்பேற்கவும் மக்கள் நியாய சபையை நிறுவியுள்ளன. நியாய சபை என்பது அடித்தள நீதியின் ஒரு வடிவம். இது மூன்று நாடுகளில் குறிப்பிட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் மற்றும் உயர்தர சட்ட பகுப்பாய்வுகளை நம்பியுள்ளது. நவம்பர் 2 ம் திகதி ஹேக்கில் தொடக்க விசாரணை நடைபெறும்….
இந்திய மாநிலத் தேர்தலுகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டியை சிபிஜே (CPJ) உருவாக்கியுள்ளது
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அறிவுரைகள் பல மொழிகளிலும் கிடைக்கின்றன மார்ச் 8, 2021, நியூயார்க் – The Committee to Protect Journalists, அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறப் போகும் சட்டப் பேரவைத் தேர்தல் சம்பந்தமான பணிகளில் ஈடுபடப் போகும் எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள், புகைப் படக்கலைஞர்களின் பாதுகாப்பிற்காகத் தேர்தல் பாதுகாப்பு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர்கள் முதல் பலர் மீதான சட்ட மிரட்டல்கள், தாக்குதல்கள் மற்றும்…
2021 மாநில சட்டசபை தேர்தல்கள்: பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளன.. இந்தத் தேர்தல் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் பணியில் உள்ள ஊடகப் பணியாளர்கள் உடல் ரீதியான தாக்குதல், தீவிர மிரட்டல், துன்புறுத்தல், கொரோனா வைரஸ் தாக்கம், கைது செய்யப் படுதல், சிறையில் அடைக்கப் படுதல், அரசாங்கத்தின் இணையதளத் தொடர்பு சம்பந்தமான கட்டுப்பாடுகள் ஆகியவை பற்றி அறிந்திருப்பது அவசியம். 2020 ஆண்டில் இந்தியாவில் குறைந்த பட்சம்…
கொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்
Updated May 20, 2021 11 மார்ச் 2020, அன்று உலக சுதாகார அமைப்பு – WHO – COVID -19 அதாவது நாவல் கொரோனா பரப்பும் நோயை உலகளவில் ஒரு பெருந்தொற்று என்று அறிவித்தது. உலகளவில் நிலமை பரிணாம மாற்றம் அடைந்து கொண்டே போகிறது. செய்திகள் மூலம் கிடைக்கும் தகவல் படி புதிய கொரொனோ வைரஸ் வகைகள் அடையாளம் காணப் பட்டு வருவதாலும் தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப் பட்டு வருவதாலும் பல நாடுகள் பயணக் கட்டுப்…