Opens profile photo
Follow
M.K.Stalin
@mkstalin
Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
mkstalin.inJoined October 2013

M.K.Stalin’s Tweets

கழக அரசு அமைந்த இந்த ஓராண்டில் வரலாற்றில் நின்று பேசும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன! ஆல் போல் தழைக்கவுள்ள நமது சாதனைகளை அழகிய ஓவியங்களுடன் வெளியிட்டுள்ளது. இந்தச் சாதனை விளக்கப் புத்தகங்களைப் படிக்கவும்! பரப்பவும்!
Image
155
634
1,613
ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு, அறிவுசார் நகரம், புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம், உள்ளூர்ப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த உதவி எனத் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு துணைநிற்க வேண்டும்! ஏற்றுமதியில் முதலிடம்! 2030-க்குள் $1 டிரில்லியன் பொருளாதாரம்! இவையே நம் இலக்கு!
Image
Image
Image
Image
59
487
1,256
இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது. ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்!
Quote Tweet
Two Tamil Nadu players have been included in the Indian team for the Asia Cup for the first time in 13 years. bit.ly/3LSSK4N
51
570
1,949
மக்களைக் காக்கும் பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபடும் காவல்துறையைக் காப்பது அரசின் கடமை. காவல்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தி, அவர்களின் பணி - வாழ்க்கை சமநிலையைப் பேணும் நோக்கோடு மானியக் கோரிக்கை அறிவிப்புகளைச் செய்தேன். குற்றங்களே நடக்காத சூழலை ஏற்படுத்துவோம்!
Image
164
781
2,812

Topics to follow

Sign up to get Tweets about the Topics you follow in your Home timeline.

Carousel

LIVE: காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரை
77
462
1,086
LIVE: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு - முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா சிறப்பு மலர் வெளியீடு
78
568
1,462
தமிழ்நாட்டில் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு நிலவியதை #மயிலாடும்பாறை கரிம மாதிரிகளின் காலக் கணக்கீட்டு முடிவுகள் நிறுவியுள்ளன! பிற மாநிலங்களிலும் நாடுகளிலும் அகழாய்வு நடத்தப்படும்! இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்படும்!
Embedded video
8:54
24.9K views
115
851
2,339
உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை! அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை! உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை! #HappyMothersDay
Image
237
1,124
5,934
I extend my hearty thanks to the Honourable Governor for his kind wishes and words of appreciation on completion of one year of our good governance in the state.
Quote Tweet
Hon'ble Governor, Thiru.R.N.Ravi extended warm greetings and best wishes to Hon'ble Chief Minister, Thiru.@mkstalin and his colleagues on completion of first year of government. @CMOTamilnadu
84
357
1,112
முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் ஐம்பெரும் மக்கள்நலத் திட்டங்களில் கையெழுத்திட்டேன். ஓராண்டை நிறைவு செய்யும் இன்று, தமிழ்நாட்டை மாற்றியமைக்கும் 5 கனவுத்திட்டங்களை அறிவித்துள்ளேன்! நம் #DravidianModel-ல் அனைவருக்கும் சமவாய்ப்புகள்! சமவுரிமைகள்! கழக அரசு அனைவருக்கும் பெய்யும் மழை!
Embedded video
3:49
19.4K views
175
818
2,125
சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்ட ஓராண்டில் சொல்லாதவற்றையும் சேர்த்துச் செய்ததில் சிறு துளி! #1YearOfCMStalin
Embedded video
2:27
24.1K views
168
1,001
2,376
கழக அரசு பொறுப்பேற்ற முதலாமாண்டு முத்தான தொடக்கமாக அமைந்துள்ளது. இரண்டாம் ஆண்டு நிச்சயம் இணையற்ற ஆண்டாக இருக்கும்! வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து #DravidianModel-ல் நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம்! எந்நாளும் உழைப்பேன்! தமிழ்நாட்டைக் காப்பேன்! #1YearOfCMStalin
Image
Image
Image
Image
312
1,232
3,395
தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்திற்கிடையே அரசின் கொள்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப உதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
Image
43
312
944
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பட்டதாரி நிருவாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியார்களை தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டுமென்று வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்
37
271
687
தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்! மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்! (2/2)
32
423
1,238
Show this thread
"வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!" கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். (1/2)
Quote Tweet
Bedridden Tamil Nadu girl to appear for class 12 board exams after 10 surgeries in 2021 timesofindia.indiatimes.com/videos/toi-ori
70
665
2,225
Show this thread
திருச்சியில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் பங்கேற்றேன். வணிகர்களின் நலனுக்காக நாம் நிறைவேற்றிய, நிறைவேற்றவுள்ள புதிய நலத்திட்டங்களைப் பட்டியலிட்டேன். கழக அரசு வணிகர்களின் குரலை என்றும் மதித்துப் போற்றி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் நண்பன்!
Image
Image
Image
Image
116
683
2,228
Thank you Hon'ble for your assurance that Chennai will be considered as an Embarkation point for Haj from 2023 onwards. I request you to make sure that Chennai will be designated as the Embarkation point for Haj in future under any circumstances.
Image
88
676
2,348
பின்வாங்காத நம் முயற்சிகளின் விளைவாக, ஆளுநர் அவர்கள் நீட் விலக்கு சட்டமுன்வடிவைக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நீட் விலக்கு நம் சட்டமன்றத்தின் இறையாண்மை தொடர்பானது. ஒற்றுமையோடு குரல்கொடுத்து இறுதி வெற்றியையும் பெறுவோம்!
Embedded video
2:24
56.2K views
231
1,194
3,262
நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்! நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல! நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!
266
1,618
7,748
ஈகைப் பண்பு நிறைந்த தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுகூடி உதவிடுவோம்! நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் அல்லலுறும் இலங்கை மக்களைக் காத்திடுவோம்! திமுக சார்பில் ரூ.1 கோடியும் - கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். #TNhelpsSriLanka
Image
Image
Image
177
919
2,741
A personal thanks to Hon'ble for accepting TN’s request to help the people of SL. Am sure that this humane gesture will be greatly welcomed by all and help to improve the warmth and cordiality between nations. Let the goodwill grow in all spheres.
Image
Image
135
767
2,673
அரசுக்கு நற்பெயரைப் பெற்றுத்தருவதும் வளர்ச்சியின் கண்கூடான அடையாளங்களாக விளங்குவதும் நல்ல சாலைகள்! அத்தகைய நல்ல சாலைகளை அமைக்கும் பணியை ஏற்றுள்ள நெடுஞ்சாலைத்துறை பவளவிழாவில், அதற்கு தனி அமைச்சகம் உருவாக்கிய முத்தமிழறிஞர் கலைஞரின் பெயர் #ECR-க்குச் சூட்டப்படும் என்று அறிவித்தேன்.
Image
Image
Image
Image
193
720
2,304
மாணவரணி உடன்பிறப்புகளுக்கு இன்னும் நிறைய பணி காத்திருக்கிறது, இந்த கருத்தரங்கு ஒரு தொடக்கமே என்பதை நினைவில் கொண்டு, தொடர்ந்து உழைத்திடுக! (12/12)
29
254
717
Show this thread
இந்தியாவின் அனைத்துத் திசைகளில் இருந்தும் நம் திராவிடத் தலைநகராம் சென்னைக்கு வந்து கருத்தரங்கத்துக்கு வலுவும் பொலிவும் ஊட்டி, இந்திய அளவில் இதற்குக் கவனத்தைப் பெற்றுத் தந்த தலைவர்கள், செயற்பாட்டாளர்களுக்கும் எனது நன்றிகள்! (11/12)
24
307
866
Show this thread
இதனை முன்னெடுத்த கழக மாணவரணிச் செயலாளர் தம்பி எம்.எல்.ஏ., அவர்களுக்கும் மாணவரணி இணை-துணைச் செயலாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். (10/12)
6
199
481
Show this thread
கழக மாணவரணி நேற்றும் இன்றும் கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது கண்டு பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். (9/12)
6
191
472
Show this thread
இந்நிலையில், "#DravidianModel" ஆட்சியியலை இந்தியா முழுமையும் அறிந்துகொள்ளும் வகையிலும்; நமது கொள்கைகளை அனைத்திந்தியத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எதிரொலிக்கும் வகையிலும் காலத்தே ஒரு கருத்தரங்கைக் (8/12)
10
193
425
Show this thread
நியமனப் பதவியில் இருப்போர் மக்களாட்சியின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படும் போக்கு அதிகரிப்பது என ஒன்றிய பாஜக அரசு அமைந்ததில் இருந்து கடந்த எட்டாண்டுகளாக இந்தியா சந்தித்து வரும் தலையாய சிக்கல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. (7/12)
7
229
569
Show this thread
#NEET - #CUET நுழைவுத் தேர்வுகள், தேசிய கல்விக் கொள்கை, அரசின் அனைத்து நிலைகளிலும் அப்பட்டமான #HindiImposition, உயர்கல்வி நிறுவனங்கள் காவிமயமாக்கல், மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரங்கள் டெல்லியில் குவிக்கப்படுவது, (6/12)
7
206
446
Show this thread
மாணவத் தலைவர்கள், அரசியல்சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோரை ஒரே மேடையில் ஒருங்கிணைத்து அவர்களின் வாயிலாகத் திராவிடக் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறது. (5/12)
2
123
278
Show this thread
கழகத்தின் ஒரு துணை அமைப்பு, இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், தமிழ்நாட்டின் அமைச்சர் பெருமக்கள், கல்விப்புலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், மொழியுரிமைக்காகவும் மாநில உரிமைக்காகவும் ஓயாமல் குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளர்கள், (4/12)
2
147
353
Show this thread
அதற்குச் சான்றாக, நேற்றும் இன்றும் கழக மாணவரணி நடத்திய “கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம்” இருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்துள்ளது. (3/12)
2
119
267
Show this thread