O PanneerselvamVerified account

@OfficeOfOPS

Coordinator AIADMK | MLA - Bodinayakanur Constituency | Let's work together for the progress of TamilNadu

Joined December 2016

Tweets

You blocked @OfficeOfOPS

Are you sure you want to view these Tweets? Viewing Tweets won't unblock @OfficeOfOPS

  1. தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறவும், அவற்றை தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதி அடிப்படையில் வழங்கவும், மருத்துவ சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்திடுக!

    Undo
  2. Apr 13

    அறம், அகிம்சையை வலியுறுத்தும் சமண சமயத்தின் 24வது மற்றும் இறுதி தீர்த்தங்கரரான பகவான் மகாவீரர் பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! இந்நாளில் மகாவீரரின் போதனைகளான கொல்லாமை, தீங்கு செய்யாமை, வாய்மை, வன்முறையின்மை ஆகியவற்றை கடைபிடிக்க உறுதியேற்போம்

    Undo
  3. Apr 13

    இந்திய திருநாட்டின் மாபெரும் சிந்தனையாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக, கல்வியாளராக, சட்ட மேதையாக திகழ்ந்தவரும், மிகச் சிறந்த சீர்திருத்தவாதியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவருமான டாக்டர் அவர்களின் பிறந்தநாளில் அண்ணலை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்!

    Undo
  4. Apr 13

    தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மலரவிருக்கும் 'சுபகிருது' தமிழ்ப் புத்தாண்டில் அனைவர் வாழ்விலும் அமைதி நிலவட்டும்; வளம் கொழிக்கட்டும்; வளர்ச்சி பெருகட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

    Undo
  5. Apr 12

    முன்னெச்சரிக்கை தடுப்பூசியை தமிழக மக்களுக்கு இலவசமாக செலுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை எடுத்திடுக!

    Undo
  6. Apr 12
    Undo
  7. Apr 11

    சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம்! இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்க!

    Undo
  8. Apr 10

    திரு.வெங்கடபதி அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

    Show this thread
    Undo
  9. Apr 10

    தினமலர் நாளிதழின் நிறுவனர் திரு.ராம சுப்பையரின் மூத்த மகனும், தினமலர் மூத்த பங்குதாரருமான முனைவர் வெங்கடபதி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். திரு.வெங்கடபதி அவர்களின் இழப்பு பத்திரிகை துறையினருக்கு பேரிழப்பு!

    Show this thread
    Undo
  10. Apr 10

    30 வயதிற்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக, வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணாக்கர்களின் தேர்வுக் கட்டணங்களை இரண்டு, மூன்று மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது கண்டனத்திற்குரியது.

    Undo
  11. Apr 9

    பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியவாறு, இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அஇஅதிமுக உறுதியாக உள்ளது.

    Undo
  12. Apr 8

    அரசு தணிக்கைத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்க வித்திட்டிருக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்!

    Undo
  13. Apr 7

    உழைக்கும் மகளிருக்கு பெரிதும் உதவும் "அம்மா இரு சக்கரவாகனத் திட்டத்திற்கு" மூடு விழா நடத்தியுள்ள திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்கள்! அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை, திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

    Undo
  14. Apr 6

    மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது அஇஅதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. சமூக நீதியின்பால் -விற்குள்ள அக்கறைக்கு மற்றுமொரு சான்று!

    Undo
  15. Apr 6

    ஒரு திட்டம் வெற்றி பெற்றுவிட்டால், அதை தான் செய்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்வதையும், இல்லையெனில் பிறர்மீது பழி போடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ள திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

    Undo
  16. Apr 6

    பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திடுக!

    Undo
  17. Apr 4

    காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி, ரவுடிகளை கண்டு காவல்துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. சீர்கெட்டு வரும் சட்டம் ஒழுங்கை சரிசெய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்ல வேண்டும்!

    Undo
  18. Apr 4

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் உறுப்பினர்; மக்களவை உறுப்பினர்; தற்காலிக பேரவை தலைவராகவும் திறம்பட பணியாற்றி தமிழ்நாட்டிற்கு மகத்தான சேவை புரிந்த திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் பிறந்த நாளில் அன்னாரை போற்றி வணங்குகிறேன்!

    Undo
  19. Apr 3

    நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டு வருகின்றனர். நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

    Undo
  20. Apr 3

    I have great pleasure in conveying my warm felicitations and best wishes to Thiru R.N. Ravi, on the occasion of his 71st birthday. I pray that the Almighty may grant him many more years of good health and peace to continue serving the Nation and the people.

    Undo

Loading seems to be taking a while.

Twitter may be over capacity or experiencing a momentary hiccup. Try again or visit Twitter Status for more information.

    You may also like

    ·