Edappadi K PalaniswamiVerified account

@CMOTamilNadu

News and updates from Thiru Edappadi K. Palaniswami, Chief Minister of TamilNadu. Co-Coordinator AIADMK.

Chennai, India
Joined March 2017
Born May 12

Tweets

You blocked @CMOTamilNadu

Are you sure you want to view these Tweets? Viewing Tweets won't unblock @CMOTamilNadu

  1. Pinned Tweet

    தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு.

    Undo
  2. பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்படும்.

    Undo
  3. கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1,000 நிவாரண உதவி வழங்கப்படும்.

    Undo
  4. தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், (சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை தலா 1 கி.கி, எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி) நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

    Undo
  5. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல எந்தவித பாஸ் மற்றும் அனுமதியும் தேவையில்லை. தடையில்லாமல் விளைபொருட்களை எடுத்துச் செல்லலாம்!

    Undo
  6. மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது தம்பி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் தங்கள் தந்தையும் மனோ தைரியத்துடன் இருங்கள்.

    Undo
  7. தாராளமாக செய்யுங்கள் தம்பி!

    Undo
  8. இந்த சோதனையான காலத்தில் விளைபொருட்களை விற்க விவசாயிகள் அடையும் சிரமங்களை புரிந்து கொள்ள முடிகிறது. விவசாயிகளின் இன்னல்களை நீக்க அரசு என்றும் விவசாயிகளின் உற்ற தோழனாக துணை நின்று உதவி செய்யும். விவசாய பெருமக்கள் விளைபொருட்களை விற்க கீழ்க்கண்ட உதவி மைய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

    Undo
  9. தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட வாழ்த்தி, எனது மனமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    Undo
  10. உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்.

    Undo
  11. அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது.

    Undo
  12. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கண்காணிக்க மூத்த IAS மற்றும் IPS அதிகாரிகள் தலைமையில் மண்டல வாரியாக சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நடவடிக்கை குழு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவுடன் இணைந்து செயல்படும்.

    Undo
  13. நமக்காக உழைப்போருக்கு நாம் செய்ய வேண்டியது ஒத்துழைப்பு மட்டுமே!

    Undo
  14. இன்று (11.4.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

    Undo
  15. கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (11.4.2020) காணொளிக் காட்சி மூலம் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், அனைத்து முதல்வர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வில் ஆலோசனை மேற்கொண்டேன்.

    Undo
  16. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்திடவும், ஜெனீவா, வேலூர், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் சென்னையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டேன்.

    Undo
  17. கொரோனா நிவாரணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த தொகையை தங்கள் மகன் நிதியுதவியாக அளித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது. இச்சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கமும் நாட்டிற்கு உதவும் உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்

    Undo
  18. அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், அண்டை மாநிலங்களிலிருந்து கூட்டுறவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும்.

    Undo
  19. அங்கன்வாடிகளில் 24 லட்சம் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

    Undo
  20. 80 வயதினைக் கடந்த 13,66,579 முதியோர்களுக்கு நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கே சென்று முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் 1,95,249 பேருக்கு கிடைக்க வேண்டிய 2 மாத உதவித்தொகையும் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    Undo
  21. தமிழ்நாடு முழுவதும் 1370 பட்டாசு தொழிற்சாலைகளில் இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சுமார் 1,20,200 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கும் தலா 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

    Undo

Loading seems to be taking a while.

Twitter may be over capacity or experiencing a momentary hiccup. Try again or visit Twitter Status for more information.

    You may also like

    ·