அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • பவழமல்லி பூக்களை கசக்கிப்பிழிந்து அந்தச்சாற்றை வெயிலில் காயவைத்தால் பவழமல்லி சாந்து கிடைக்கும்.

  • தேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.

  • முகப்பருவை நீக்க சிறிதளவு சாதிக்காயை இழைத்து தினமும் பருக்களின் மீது தடவி வர, பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

  • துளசி இலையை உடலில் தேய்த்துக்கொண்டு படுத்தால் கொசு அருகிலேயே வராது. நிம்மதியாய் தூங்கலாம்.

  • வீட்டிலுள்ள தொட்டிச்செடிகளும் குரோட்டன்களும் ஒளி மங்கி இலைகள் சோர்வடைந்து மங்கலாய் இருந்தால், அவற்றின் மேல் கால் தேக்கரண்டி எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து தெளியுங்கள். பச்சைப்பசேல் என்றாகிவிடும்.

  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து மஞ்சள் காமாலைக்கு கொடுக்கலாம்.

  • கல்யாணபந்தியில் சாப்பாட்டிற்கு ஒரே ஈக்களாக படையெடுக்கின்றனவா? கவலைப்படாதீர்கள் ஒரு கொத்து கறிவேப்பிலையை கசக்கி பந்தி நடுவே வையுங்கள் அப்புறம் அந்தப்பக்கம் ஈ தலையே காட்டாது.

  • மருதாணி இலையை அரைத்து அந்த விழுதோடு சிறிது அமிர்தாஞ்சனத்தையும் கலந்து இட்டுக்கொண்டால் செக்கச்செவேலென்று வரும்.