அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • தேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.

  • கல்யாணபந்தியில் சாப்பாட்டிற்கு ஒரே ஈக்களாக படையெடுக்கின்றனவா? கவலைப்படாதீர்கள் ஒரு கொத்து கறிவேப்பிலையை கசக்கி பந்தி நடுவே வையுங்கள் அப்புறம் அந்தப்பக்கம் ஈ தலையே காட்டாது.

  • சிறிது சர்க்கரையுடன் 15பூச்சி உருண்டைகளை பொடிசெய்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, சிறிது மண்ணெய் ஊற்றி சிறிய துணியில் தோய்த்து பூச்சிகள் உள்ள இடத்தில் வைக்க, அவை வந்து இறந்துவிடும்.

  • துளசி இலையை உடலில் தேய்த்துக்கொண்டு படுத்தால் கொசு அருகிலேயே வராது. நிம்மதியாய் தூங்கலாம்.

  • முளைவந்த பயரை மூன்று மாதம் காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்க வாய்ப்புண்டு. அம்மூன்று மாதமும் கோப்பி, தேனீர் அருந்துவதை தடுக்கலாம்.

  • தோலில் முள்முள்ளாக வரும் வறட்டு சொறிக்கு எலுமிச்சம்பழச் சாறு தேய்த்துக் குளிக்கலாம்.

  • துளசியை மென்று ஒரு பிடி தின்றால் தேள்கொட்டிய விடம் இறங்கிவிடும். கொட்டிய இடத்தில் துளசிச்சாறு தேய்க்கலாம்.

  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து மஞ்சள் காமாலைக்கு கொடுக்கலாம்.