comment 0

பூரணம்

பதுங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப்பார்த்தால் ஆழ் கிணறு மாதிரி.. அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம் பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக் கேட்க மாட்டாளென்று பொறாமையாய் இருந்தது என்றாள். வானத்தைப்போன்ற பிரமாண்டமான தகரக்கூரையில் இடி உரசுமாற்போல ஒரு ஷெல் கூவியபடி விழுந்து வெடித்தது என்றாள். ‘விஷ்க்.. விஷ்க்..’ சன்னங்கள் காற்றை ஓட்டையிட்டன. தலையை உள்ளே இழுத்துப் பதுங்கினேன் என்றாள். வெளியில் அவளுடைய தலைக்கறுப்பை கண்டால் கதிர் அண்ணன் கண்டபாட்டுக்குத் திட்டுவார். ‘உனக்குச் சாக விருப்பமெண்டால் சொல்லு, நாளைக்கே நான் ஏற்பாடு செய்யிறன்’ கதிர் அண்ணன் இயக்கத்தில் இருந்தார் என்றாள். பக்கத்திலிருந்த தரப்பாள் கொட்டிலில்,…

comment 0

அல்லற்பட்ட ஓர் இனத்தின் துயர்

ஆதிரையைப் படிக்கத் தொடங்கிய போதே, போர் பற்றிய லட்சியவாதக் கற்பனைகள் எல்லாம் உடைந்து விட்டன. தியாகம் ,லட்சியம், கனவு என்பதைத் தாண்டி போர் என்பது ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான வேட்கையே என்பது விளங்கியது. போர் எவ்வாறு மனிதர்களுடைய சமநிலையை, வாழ்வாதாரத்தை, நம்பிக்கைகளை,தன்மானத்தை எல்லாம் குலைத்துப் போடுகிறது?எது மக்களை இயக்கத்தை நோக்கி நகர்த்துகிறது? பெண்களுடைய பார்வையில் போர் என்னவாக இருக்கிறது என்கிற கேள்விகளுக்கான பெரும் தேடலாகவே இந்தப் புதினம் விரிகிறது.  ஒரு போரின் வெற்றி தோல்வியை வெளியில் இருந்து வெறும் பார்வையாளர்களாகப் பார்க்கிறவர்கள், அதனுடைய கொள்கை , நோக்கம் , அதை நோக்கிய போராட்டத்திற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றை வைத்து அதை ஆதரிக்கவும், விமர்சிக்கவும் செய்கிறோம். போர் என்றால் இழப்புகளும் இருக்கதான் செய்யும் என்று சமாதானம் கொள்கிறோம். ஆனால் நேரடியாக போருக்குள் அகப்படும் மக்களின் மனநிலை வேறாக இருக்கிறது. போரினால் ஏற்படும் பொருள் இழப்புக்கள்,உயிர் இழப்புகள்,மற்றும் பாதுகாப்பின்மை போன்றவை பெரும்பான்மையான…

comment 0

ஆதிரை என்கின்ற இத்திமரத்துக்காரி

ஈழத்தில் இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் என்ற நீண்ட பயணத்தின் பிறகு, அதைப்பற்றிய முனைப்பான பிரதிகள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும், போராட்டத்தில் எழுத்தாளர்களின் தன்னிலையையும் தன் உணர்வுகளையும் பிரதிபலிக்கத்தக்கவாறே, எழுத்துவடிவம் பெறுகின்றன. ஒரு வகையில் அவை அரசியல் பிரச்சாரத்திற்கு இலக்கிய வடிவம் கொடுக்க முயல்கின்றன. சயந்தனின் ஆதிரையோ, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியில் கூற எத்தனிக்கும் உண்மையைத் தாண்டியும் மேலதிக உண்மையைப் பெறுவதற்கான வாசக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு இலக்கியப் பிரதியாக வெளியாகியிருக்கின்றது. தன் இருப்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தனித்துவிடப்பட்ட இனமொன்றின், கடை நிலை மாந்தர்களைப் பற்றியும், போராட்டத்தின் மேன்மைகள், கீழ்மைகள் யாவற்றையும் எழுத்தாளரின் அக, புற உணர்வுகளோடு அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்நாவல். மக்களின் அனுபவங்களை நேர்த்தியான கதைகளாகத் தொகுப்பதன் மூலம் நாவலுக்கான ஒரு வடிவம் நெய்யப்பட்டிருப்பினும்கூட, வாசகர்களே நிரப்புவதற்கான இடைவெளிகளும் உண்டு. நிறைய…

comment 0

காட்டின் பச்சை மணத்தில் இருந்து வெடிப்பின் கந்தக மணம் வரை

பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவதில்லை. கதைகளாக விளையாட்டுகளாக திரைப்படங்களாக போரினை கற்பனித்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். நம் கற்பனை செய்யும் போரில் வெற்றியும் தோல்வியும் இருந்திருக்கும். தொழில்நுட்பங்களும் சாகசங்களும் மரணங்களும் இருந்திருக்கும். ஆனால் அப்போர்  தொடங்கி  முடிவடைந்திருக்கும். போருக்கு முன்பான தயாரிப்புகளையோ போருக்குப் பிந்தைய நிலைகளையோ நாம் கற்பனை செய்திருக்கமாட்டோம். போர் களங்களில் மட்டும் நடப்பதாக எண்ணிக் கொண்டு இருந்திருப்போம். போரும் வாழ்வும் நாவலைப் படித்தபோது போர் குறித்த இத்தகைய மனச்சித்திரங்கள் கலையத் தொடங்கின. போர் வேறு வகையானதாக முன் ஊகங்களுக்கு வாய்ப்பற்றதாக தென்படத் தொடங்கியது. ஆனால் அந்த நாவலிலும் களம் என்ற ஒன்று உண்டு. அதில்தான் போர் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கழுகினைப் போல உச்சி மரக்கிளையில் அமர்ந்து கொண்டும் அவ்வப்போது களத்தில் ஊடுருவிப் பறந்தும் அப்போரினை நாம்…