ஆன்டன் செகாவ் (1860–1904) புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படும் ஓர் உருசிய எழுத்தாளர் ஆவார். நாடக ஆசிரியராக இருந்து படைத்த, கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் அவரது சிறந்த சிறுகதைகள் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் தனி மரியாதையை ஏற்படுத்தின. செகாவ் தனது இலக்கியப் பயணத்துடன் கூடவே, மருத்துவப் பணியையும் மேற்கொண்டு வந்தார். செகாவின் நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாக, பார்வையாளர்களுக்கு "மனநிலை சார்ந்த அரங்கியல்" என்னும் நுட்பத்தையும், "நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்து போகும் நிலையையும்" கொடுத்தன. இவரது கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும்...
எயித்தியப் புரட்சி (1791–1804) கரிபியனில் உள்ள பிரெஞ்சுக்குடியேற்ற நாடானசெயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டிஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கிய புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்காற்றியது. கரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். மேலும்...
தர்மராஜிக தூபிமௌரியப் பேரரசர்அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு நிறுவப்பட்டது.
1998 – இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
புனித பசில் பேராலயம்உருசியத் தலைநகர் மாஸ்கோவில்செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட்டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,22,359 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.