அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • துளசி இலையை உடலில் தேய்த்துக்கொண்டு படுத்தால் கொசு அருகிலேயே வராது. நிம்மதியாய் தூங்கலாம்.

  • பொன்னாங்காணிக்கீரையுடன் துவரம்பருப்பு நெய் சேர்த்து சாப்பிட உடல் பெருக்கும். துவரம்பருப்பு மிளகு சேர்த்த சமைத்து சாப்பிட வேண்டாத சதை நீங்கும்.

  • பிரசவித்த பெண்ணிற்கு கர்ப்பவலி இருந்தால் அடி வயிற்றில் தேன் தடவுவது வலியை நீக்கும்.

  • வீட்டிலுள்ள தொட்டிச்செடிகளும் குரோட்டன்களும் ஒளி மங்கி இலைகள் சோர்வடைந்து மங்கலாய் இருந்தால், அவற்றின் மேல் கால் தேக்கரண்டி எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து தெளியுங்கள். பச்சைப்பசேல் என்றாகிவிடும்.

  • முகப்பருவிற்கு சீரகம் கருஞ்சீரகம் சம எடை எடுத்து எருமைப்பால் விட்டு அரைத்துப்போடலாம்.

  • உடம்பு அரிப்பு ஏற்பட்டு உடம்பு பூராகவும் திட்டு திட்டாக வந்தால், கொஞ்சம் புளித்த கெட்டி மோரில் 5, 6 செம்பருத்திப் பூக்களை பறித்துக் கரைத்து அரிக்கும் இடங்களில் தேய்த்தால் மாறிவிடும்.

  • பவழமல்லி பூக்களை கசக்கிப்பிழிந்து அந்தச்சாற்றை வெயிலில் காயவைத்தால் பவழமல்லி சாந்து கிடைக்கும்.

  • முளைவந்த பயரை மூன்று மாதம் காலையில் தினமும் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்க வாய்ப்புண்டு. அம்மூன்று மாதமும் கோப்பி, தேனீர் அருந்துவதை தடுக்கலாம்.