ஜனதா கட்சி உடைத்த பின் முன்பிருந்த ஜனசங்கம் புது வடிவம் பெற்றது.அது பாரதிய ஜனதா கட்சி என்ற புதுப் பெயருடன் 1980 ஏப்ரல் மாதம் தோன்றியது . அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதல் தலைவரானார்.
முன்பிருந்த கட்சியின் காவிக்கொடி இப்போது காவியும், பச்சையும் கொண்ட கொடியாக மாறியது. முன்பு கட்சியின் வழிகாட்டுக் கொள்கையாக ‘ஒன்றிணைந்த மானுட வாதம்’ இருந்தது. இப்போது அது ‘காந்தீய சோசலிச’மாக மாறியது.
இவையெல்லாம் கட்சி உறுப்பினர்கள் ஜனதா கட்சியிலும் , ஜே . பி இயக்கத்திலும் அடைந்த அனுபவத்தின் தாக்கமே.
1984 மக்களவைத் தேர்தலில் பா ஜ கவுக்கு 3 இடங்களே கிடைத்தன.
அத்வானி அவர்கள் கட்சியின் தலைவரானார்.
1989 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா ஜ க 85 தொகுதிகளில் வென்றது.
1991ல் அது 119 ஆக உயர்ந்தது.
1996ல் பா ஜ க மிக அதிக பட்சமாக 187 தொகுதிகளை வென்றது .
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆனார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாததால் அவர் 13 நாட்களே ஆட்சியில் இருந்தார்
பிறகு 1998 ல் மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார்.
இம்முறை அ தி முக ஆதரவை விலக்கிக் கொண்டதால் 13 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்.
1999 ல் பா ஜ கவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசமைத்தது.
இம்முறை அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
2014 மக்களவைத் தேர்தல்
பா ஜ கவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மத்தியில் திரு நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
நாளை நமதே……
|