logo
TTL அலுவலர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து நன்றியை தெரிவித்து கொண்டனர்

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிக்கை செய்தி

மத்திய அரசின் டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா  லிமிடெட் – இன் (TCIL) துணை நிறுவனமான (Subsidiary Unit) தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (TTL) சென்னை மறைமலை நகரில் ஆப்டிகல் பைபர் கேபிள் உற்பத்தி (OFC ) செய்து வருகிறது . இது பைபர் கேபிள் உற்பத்தி செய்யும் ஒரே மத்திய அரசு நிறுவனமாகும் . மாதம் சுமார் 1௦௦௦ கிலோ மீட்டர் ஆப்டிகல் பைபர் கேபிள் தயாரிக்கும் திறன் படைத்த இந்த நிறுவனத்தில் 67 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (TTL) – ன்  49% பங்குகளை டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் வைத்துள்ளது. அப்பங்குகளை விற்பனை செய்ய விளம்பரப்படுத்தியதை தொடர்ந்து, மத்திய அரசின் BSNL   நிறுவனம்  TTL – ஐ due diligence  செய்துள்ளது.

டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டின் 49%            பங்குகளை BSNL நிறுவனம் வாங்கும் பட்சத்தில் அது BSNL மற்றும் TTL      ஆகிய இரு நிறுவங்களும் வளர்ச்சி அடைய உதவும் என தமிழ்நாடு டெலி கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் அலுவலர்கள் சங்கம் (TTLOA – NCOA)                      மற்றும் தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் தொழிலாளர்கள் சங்கம் (CPTS – CITU)  பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் திரு. பொன்.  இராதாகிருஷ்னன் அவர்களை சந்தித்து மனு அளித்து உதவி செய்ய வேண்டினர்.

மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்னன் அவர்கள், மத்திய              டெலிகம்யூனிகேஷன்ஸ் அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா அவர்களை நேரில் சந்தித்து மேற்படி கோரிக்கைகளை ஏற்க வற்புறுத்தினார். மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அவர்களும் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று (18/06/2018) TTL அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.