எங்களின் தரவுக் கொள்கை மாறுகிறது. இங்கே எங்களின் புதிய தரவுக் கொள்கையைப் பார்க்கலாம்.

தரவுக் கொள்கை

உலகினர் அனைவரும் தடையின்றி தகவல்களை அணுகுவதுடன், இணைந்திருக்கவும் வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதியாக, தகவல்களைப் பகிர்வதற்கான ஆற்றலை வழங்குகிறோம். நாங்கள் எந்தெந்த தகவல்களைச் சேகரிக்கிறோம், அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்கிறோம் என்பது இந்தக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளது. கூடுதலான கருவிகளையும் தகவல்களையும் தனியுரிமை அடிப்படைகளில் கண்டறியலாம்.

எங்கள் கொள்கையை நீங்கள் படிக்கும் போது, இது தனிப்பட்ட தனியுரிமைக் கொள்கை இல்லாத அல்லது இந்தக் கொள்கையுடன் இணைக்கப்பட்ட எல்லா Facebook பிராண்டுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கும் (“Facebook சேவைகள்” அல்லது “சேவைகள்” என்று அழைக்கிறோம்) பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

எந்த வகையான தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்?

நீங்கள் பயன்படுத்தும் சேவைகளைப் பொறுத்து, உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றிய பல்வேறு வகையான தகவல்களைச் சேகரிப்போம்.
நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் நீங்கள் வழங்கும் தகவல்கள்.
ஒரு கணக்கிற்குப் பதிவுசெய்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல் அல்லது பகிர்தல், பிறருக்குச் செய்தி அனுப்புதல் அல்லது அவர்களைத் தொடர்புகொள்ளுதல் உட்பட எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது நீங்கள் வழங்கும் உள்ளடக்கம் மற்றும் பிற தகவல்களை நாங்கள் சேகரிப்போம். படத்தின் இருப்பிடம் அல்லது கோப்பினை உருவாக்கிய தேதி போன்று நீங்கள் வழங்கிய உள்ளடக்கத்தில் உள்ள தகவல்கள் அல்லது அவற்றைப் பற்றிய தகவல்கள் இதில் அடங்கும். நீங்கள் பார்க்கும் அல்லது ஈடுபாடு காட்டும் உள்ளடக்கம் அல்லது நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளின் கால இடைவெளி மற்றும் கால அளவு போன்று நீங்கள் எப்படி எங்கள் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பற்றிய தகவல்களையும் சேகரிப்போம்.
பிறர் மேற்கொள்ளும் செயல்கள் மற்றும் அவர்கள் வழங்கும் தகவல்கள்.
உங்களின் படத்தைப் பகிர்தல், உங்களுக்குச் செய்தி அனுப்புதல் அல்லது உங்கள் தொடர்புத் தகவல்களைப் பதிவேற்றுதல், ஒத்திசைத்தல் அல்லது இறக்குமதி செய்தல் போன்ற செயல்களைப் பிறர் மேற்கொள்ளும் போது உங்களைப் பற்றிய தகவல்களையும் எங்கள் சேவைகளைப் பிறர் பயன்படுத்தும் போது அவர்கள் வழங்கும் உள்ளடக்கம் மற்றும் தகவல்களையும் சேகரிப்போம்.
உங்கள் நெட்வொர்க்குகள் மற்றும் இணைப்புகள்.
நீங்கள் அதிகமாகத் தொடர்புகொள்பவர்கள் அல்லது அதிகமாகப் பகிர்ந்துகொள்ள விரும்பும் குழுக்கள் போன்று நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்கள் மற்றும் குழுக்கள், அவர்களுடன் தொடர்புகொள்ளும் முறை போன்ற தகவல்களையும் நாங்கள் சேகரிப்போம். நீங்கள் வழங்கும் தொடர்புத் தகவல்களைச் சாதனத்தில் இருந்து பதிவேற்றினால், ஒத்திசைத்தால் அல்லது (முகவரிப் புத்தகம் போன்றவை) இறக்குமதி செய்தால், இந்தத் தகவல்களையும் சேகரிப்போம்.
கட்டணங்கள் பற்றிய தகவல்கள்.
எங்கள் சேவைகளைப் பணம் செலுத்துவதற்கு அல்லது நிதிப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தினால் (Facebook இல் ஏதாவது வாங்குதல், கேமில் ஏதாவது வாங்குதல் அல்லது நன்கொடை அளித்தல்), பணம் செலுத்துதல் அல்லது பரிவர்த்தனை பற்றிய தகவல்களையும் சேகரிப்போம். உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு எண் மற்றும் பிற கார்டு தகவல்கள், இதர கணக்கு மற்றும் அங்கீகாரத் தகவல்கள், அதே போல் பில்லிங், ஷிப்பிங் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற உங்கள் கட்டணத் தகவல்கள் இதில் அடங்கும்.
சாதனத் தகவல்கள்.
கணினிகள், மொபைல்கள் அல்லது வேறு சாதனங்கள் என எங்கள் சேவைகளை நீங்கள் நிறுவும் அல்லது அணுகும் சாதனங்களில் இருந்து அல்லது அவற்றைப் பற்றிய தகவல்களை நீங்கள் வழங்கிய அனுமதிகளைப் பொறுத்து சேகரிப்போம். உங்களின் சாதனங்கள் முழுவதும் ஒரே மாதிரியான சேவைகளை வழங்குவதற்காக உங்களின் வெவ்வேறு சாதனங்களில் இருந்து சேகரிக்கும் தகவல்களை நாங்கள் ஒருங்கிணைக்கக்கூடும். நாங்கள் சேகரிக்கும் சாதனத் தகவல்கள் தொடர்பான சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • இயக்க முறைமை, வன்பொருள் பதிப்பு, சாதன அமைப்புகள், கோப்பு மற்றும் மென்பொருள் பெயர்கள் மற்றும் வகைகள், பேட்டரி மற்றும் சிக்னல் வலிமை மற்றும் சாதனத்தின் அடையாளங்காட்டிகள் போன்ற பண்புக்கூறுகள்.
  • GPS, புளூடூத் அல்லது WiFi சிக்னல்கள் மூலமாகக் கிடைக்கும் குறிப்பிட்ட புவியியல் இருப்பிடங்கள் அடங்கிய சாதன இருப்பிடங்கள்.
  • உங்கள் மொபைல் ஆபரேட்டர் அல்லது ISP இன் பெயர், உலாவி வகை, மொழி மற்றும் நேர மண்டலம், மொபைல் எண் மற்றும் IP முகவரி போன்ற இணைப்புத் தகவல்கள்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளை நீங்கள் பார்க்கும் போதும் அல்லது பயன்படுத்தும் போதும் தகவல்களைச் சேகரிப்போம் (மூன்றாம் தரப்பினர் எங்கள் விரும்பு பொத்தான் அல்லது Facebook உள்நுழைவு வசதியை வழங்கும் போது அல்லது எங்கள் அளவீடு மற்றும் விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்தும் போது). நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றிய தகவல்கள், அந்த இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளில் உள்ள எங்கள் சேவைகள் மீதான உங்கள் பயன்பாடு, அதேபோன்று பயன்பாடு அல்லது இணையதளத்தின் டெவலப்பர் அல்லது வெளியீட்டாளர் உங்களுக்கு அல்லது எங்களுக்கு வழங்கும் தகவல்கள் ஆகியவை இதில் அடங்கும்.
மூன்றாம் தரப்புக் கூட்டாளர்கள் வழங்கும் தகவல்கள்.
உங்களைப் பற்றியும் Facebook இலும் அதற்கு வெளியேயும் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் பற்றியும் மூன்றாம் தரப்புக் கூட்டாளர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவோம். இதில் கூட்டாளரும் நாங்களும் இணைந்து வழங்கும் சேவைகளில் உள்ள தகவல்கள் அல்லது விளம்பரதாரருடனான உங்கள் அனுபவங்கள் அல்லது ஊடாடல்கள் பற்றி அவர்களிடமிருந்து பெறும் தகவல்கள் போன்றவை அடங்கும்.
Facebook நிறுவனங்கள்.
Facebookக்குச் சொந்தமான அல்லது அதனால் இயக்கப்படும் நிறுவனங்களில் இருந்தும் அவற்றின் விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு உங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவோம். இந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தனியுரிமைக் கொள்கைகளைப் பற்றி மேலும் அறிக.

இந்தத் தகவல்களை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

பிறரை ஈர்க்கும் வகையிலும் தனிப்பயன் அனுபவங்களை வழங்குவதற்காகவும் பணியாற்றுகிறோம். எங்கள் சேவைகளை வழங்குவதில் மற்றும் ஆதரிப்பதில் எங்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காக இந்த எல்லாத் தகவல்களையும் பயன்படுத்துகிறோம். இதோ பயன்படுத்தப்படும் முறை:
சேவைகளை வழங்கவும், மேம்படுத்தவும் மற்றும் உருவாக்கவும்.
எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் விதம் மற்றும் அவற்றுடன் ஊடாடும் விதம், சேவைகளை மூலமாக நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்கள் அல்லது விஷயங்கள், எங்கள் சேவைகளிலும் பிற சேவைகளிலும் நீங்கள் காட்டும் ஆர்வம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு, எங்கள் சேவைகளை வழங்கவும், உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்கவும் மற்றும் உங்களுக்கான தகவல்களைப் பரிந்துரைக்கவும் சேகரிக்கும் தகவல்களைப் பயன்படுத்துவோம்.

உங்களுக்கான குறுக்குவழிகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்காகவும் தகவல்களைப் பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட சுயவிவரப் படம் மற்றும் பிற படங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் மூலம் உங்கள் நண்பர்களின் படத்துடன் ஒப்பிட்டு உங்களை உங்கள் நண்பர் ஒரு படத்தில் அடையாளப்படுத்தப் பரிந்துரைக்க முடியும். இந்த அம்சம் உங்களுக்காக இயக்கப்பட்டிருந்தால், ஒரு படத்தில் உங்களை அடையாளப்படுத்த வேறொரு பயனருக்கு நாங்கள் பரிந்துரைக்கலாமா என்பதை “காலக்கோடு மற்றும் குறியிடல்” அமைப்புகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியும்.

இருப்பிடத் தகவல்கள் எங்களிடம் இருக்கும் போது, அவற்றை செக்-இன் செய்தல் அல்லது உள்ளூர் நிகழ்வுகள் அல்லது உங்கள் பகுதியில் கிடைக்கும் ஆஃபர்களைத் தெரிந்துகொள்ளுதல் அல்லது நீங்கள் அருகில் இருப்பதை உங்கள் நண்பர்களுக்குக் கூறுதல் ஆகியவற்றுக்கான உதவியை வழங்குவது போன்ற எங்கள் சேவைகளை உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஏற்ற வகையில் வழங்குவதற்குப் பயன்படுத்துகிறோம்.

நாங்கள் கருத்துக்கணிப்புகளையும் ஆய்வுகளையும் நடத்தலாம், மேம்பாட்டில் உள்ள அம்சங்களைச் சோதிக்கலாம், மேலும் தயாரிப்புகளையும் சேவைகளையும் மதிப்பாய்வு செய்து மேம்படுத்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்யலாம், புதிய தயாரிப்புகள் அல்லது அம்சங்களை உருவாக்கலாம் மற்றும் தணிக்கைகள் மற்றும் சிக்கல்தீர்ப்புச் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மார்க்கெட்டிங் தகவல்களை அனுப்புதல், எங்கள் சேவைகள் தொடர்பாக உங்களைத் தொடர்புகொள்ளுதல் மற்றும் எங்கள் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவித்தல் ஆகியவற்றுக்காகவும் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம். எங்களைத் தொடர்புகொள்ளும் போது உங்களுக்குப் பதிலளிப்பதற்காக உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம்.
விளம்பரங்கள் மற்றும் சேவைகளைக் காட்டுதல் மற்றும் புள்ளிவிவரங்களைச் சேகரித்தல்.
எங்களிடம் உள்ள தகவல்களை எங்கள் விளம்பரப்படுத்தல் மற்றும் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் அமைப்புகளுக்காகவும் பயன்படுத்துவோம். அதன் மூலம் எங்கள் சேவைகளிலும் பிறவற்றிலும் உங்களுக்கு ஏற்ற விளம்பரங்களைக் காட்ட முடிவதுடன், விளம்பரங்கள் மற்றும் சேவைகளின் செயல்திறனையும் பார்வைகளையும் அளவிட முடியும். எங்கள் சேவைகளில் காட்டப்படும் விளம்பரங்களைப் பற்றியும் உங்களுக்குத் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட உங்கள் தகவல்கள் பயன்படுத்தப்படும் விதத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றியும் மேலும் அறியவும்.
ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல்.
கணக்குகளையும் செயல்பாடுகளையும் சரிபார்ப்பதற்காகவும், மேலும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் அல்லது எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளில் ஏற்படும் மீறல்களை விசாரிப்பது போன்ற செயல்களை மேற்கொண்டு எங்கள் சேவைகளிலும் பிற சேவைகளிலும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காகவும் தகவல்களைப் பயன்படுத்துவோம். பொறியாளர்கள், தானியங்கு அமைப்புகள் மற்றும் குறியாக்கம் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் கணக்கைப் பாதுகாப்பதற்குக் கடுமையாக உழைக்கிறோம். உங்கள் கணக்கிற்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்புக் கருவிகளையும் வழங்குகிறோம். Facebook இல் பாதுகாப்பைக் குறித்து தெரிவிப்பது பற்றிய மேலும் தகவலுக்கு, Facebook பாதுகாப்பு உதவி மையத்தைப் பார்க்கவும்.
எங்கள் சேவைகளை வழங்குவதற்காகவும் அவற்றின் ஆதரவுக்காகவும் குக்கீகள் மற்றும் அதே போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம், மேலும் அவற்றின் ஒவ்வொரு பயன்பாடும் எங்கள் கொள்கையின் இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய, எங்கள் குக்கீ கொள்கையைப் படிக்கவும்.

எவ்வாறு இந்தத் தகவல்கள் பகிரப்படுகின்றன?

எங்கள் சேவைகளில் பகிர்தல்
பிறருடன் இணைந்திருக்கவும் தகவலைப் பகிரவும் எங்கள் சேவைகளைப் பிறர் பயன்படுத்தலாம். பின்வரும் வழிகளில் உங்கள் தகவல்களைப் பகிர்வதன் மூலம் இதைச் சாத்தியமாக்குகிறோம்:
நீங்கள் பகிர்ந்துகொள்ளும் மற்றும் தொடர்புகொள்ளும் நபர்கள்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் பகிரும் மற்றும் தொடர்புகொள்ளும் போது, நீங்கள் பகிர்வதைப் பார்க்க வேண்டிய பார்வையாளர்களைத் தேர்வுசெய்யலாம். உதாரணமாக, நீங்கள் Facebook இல் இடுகையிடும் போது, இடுகைக்கான பார்வையாளர்களைத் தேர்வுசெய்யலாம், இதில் தனிநபர்களுக்கான குழுவைத் தனிப்பயனாக்குதல், உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அல்லது ஒரு குழு உறுப்பினர்கள் போன்றவற்றைத் தேர்வுசெய்யலாம். அதேபோல், நீங்கள் Messenger ஐப் பயன்படுத்தும் போது, படங்கள் அல்லது செய்தியை யாருக்கு அனுப்புவது என்பதையும் தேர்வுசெய்யலாம்.

பொதுத் தகவல்கள் என்பது நீங்கள் பொதுவில் பகிரும் தகவல்கள் ஆகும், அத்துடன் உங்கள் பொதுச் சுயவிவரத்தில் உள்ள தகவல்கள் அல்லது நீங்கள் Facebook பக்கம் அல்லது வேறொரு பொது மன்றத்தில் பகிரும் தகவல்களும் பொதுவானவை ஆகும். பொதுத் தகவல்கள் என்பவை எங்கள் சேவைகளிலும் பிற சேவைகளிலும் கிடைக்கும், மேலும் தேடல் என்ஜின்கள், APIகள் மற்றும் டிவி போன்ற ஆஃப்லைன் மீடியா மூலமும் அவற்றைப் பார்க்க அல்லது அணுக முடியும்.

சில நேரங்களில், நீங்கள் தொடர்புகொள்ளும் மற்றும் பகிரும் நபர்கள் உள்ளடக்கத்தைப் பதிவிறக்கலாம் அல்லது எங்கள் சேவைகளில் மற்றும் பிற சேவைகளில் அவற்றைப் பிறருடன் மீண்டும் பகிரலாம். Facebook இல் உள்ள பிறரின் இடுகையில் கருத்துத் தெரிவிக்கும் போது அல்லது அவர்களின் உள்ளடக்கத்தை விரும்பும் போது, யாரெல்லாம் உங்கள் கருத்து அல்லது விருப்பத்தைப் பார்க்கலாம் என்பதை அவர் தீர்மானிக்கலாம். அவர்களின் பார்வையாளர்கள் பொதுவில் இருந்தால், உங்கள் கருத்தும் பொதுவானதாக இருக்கும்.
பிறர் உங்களைப் பற்றி பகிரும் உள்ளடக்கத்தைப் பிறரும் காணலாம்.
மற்றவர்களும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உங்களைப் பற்றிய தகவல்களை அவர்கள் தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களுடன் பகிரலாம். எடுத்துக்காட்டாக, உங்களின் படத்தைப் பகிரலாம், இடுகையின் இருப்பிடத்தில் உங்களைக் குறிக்கலாம் அல்லது குறியிடலாம் அல்லது நீங்கள் அவர்களுடன் பகிர்ந்த உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். வேறொருவரின் இடுகையைப் பற்றிய கவலைகள் இருந்தால், நம்பிக்கைக்குரியவரின் உதவியை விரைவாகவும் எளிதாகவும் பெற சோஷியல் ரிப்போர்டிங்கைப் பயன்படுத்தவும். மேலும் அறிக.
எங்கள் சேவைகளில் பயன்பாடுகள், இணையதளங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்துதல்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் அல்லது அவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மூன்றாம் தரப்புப் பயன்பாடுகள், இணையதளங்கள் அல்லது பிற சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, அவை நீங்கள் இடுகையிடுவது அல்லது பகிர்வதைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். உதாரணமாக, உங்கள் Facebook நண்பர்களுடன் கேம் விளையாடும் போது அல்லது ஓர் இணையதளத்தில் Facebook இன் கருத்து அல்லது பகிர் பொத்தானைப் பயன்படுத்தும் போது, கேம் டெவலப்பர் அல்லது இணையதளம் கேமில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களைப் பெறக்கூடும் அல்லது அவர்களின் இணையதளத்தில் இருந்து Facebook இல் பகிர்ந்துகொண்ட கருத்து அல்லது இணைப்பைப் பெறக்கூடும். கூடுதலாக, அத்தகைய மூன்றாம் தரப்புச் சேவைகளைப் பதிவிறக்கும் அல்லது பயன்படுத்தும் போது, அவர்களால் உங்கள் பொதுச் சுயவிவரத்தை அணுக முடியும், அதில் உங்கள் பயனர்பெயர் அல்லது பயனர் ஐடி, உங்கள் வயது வரம்பு மற்றும் நாடு/மொழி, உங்கள் நண்பர்கள் பட்டியல் மற்றும் அவர்களுடன் பகிர்ந்த தகவல்கள் அடங்கும். இந்தப் பயன்பாடுகள், இணையதளங்கள் அல்லது ஒருங்கிணைந்த சேவைகள் சேகரிக்கும் தகவல்கள், அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டது.

இந்தப் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களுடன் நீங்கள் அல்லது மற்றவர்கள் உங்களைப் பற்றி பகிரும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி மேலும் அறிக.
Facebook நிறுவனங்களுக்குள் பகிர்தல்.
உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தகவல்களை Facebook குழும நிறுவனங்களுக்குள்ளாகவே பகிர்ந்துகொள்வோம். எங்கள் நிறுவனங்களைப் பற்றி மேலும் அறிக.
புதிய உரிமையாளர்.
எங்கள் சேவைகள் அல்லது அவற்றின் சொத்துகளின் உரிமை அல்லது கட்டுப்பாடு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றப்பட்டால், உங்கள் தகவல்கள் புதிய உரிமையாளருக்குப் பரிமாற்றம் செய்யப்படலாம்.

மூன்றாம் தரப்புக் கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் பகிர்தல்.
எங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் அல்லது விளம்பரப்படுத்தல் அல்லது அது தொடர்புடைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பணியாற்றுதன் மூலம், எங்கள் நிறுவனத்தை இயக்குவதும் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு இலவசமாகச் சேவைகளை வழங்குதும் சாத்தியமாகிறது.

இங்கு உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் மூன்றாம் தரப்பினரின் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளது:
விளம்பரம், புள்ளிவிவரக் கணக்கீடு மற்றும் பகுப்பாய்வுச் சேவைகள் (தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்கள் மட்டும்).
எங்கள் சேவைகளில் நீங்கள் காணும் மற்ற தகவல்களைப் போலவே எங்கள் விளம்பரங்களும் உங்களுக்குத் தொடர்புடையதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருப்பதை விரும்புகிறோம். இதை மனதில் கொண்டு, உங்களுக்குத் தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் பயன்படுத்துகிறோம். நீங்கள் அனுமதி அளிக்கும் வரை விளம்பரம், புள்ளிவிவரக் கணக்கீடு மற்றும் பகுப்பாய்வு செய்யும் கூட்டாளர்களுடன் உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவல்களைப் (பெயர் அல்லது மின்னஞ்சல் போன்ற உங்களைத் தொடர்புகொள்ள அல்லது நீங்கள் யார் என அடையாளம் காணப் பயன்படுத்தும் தகவல்கள் தனிப்பட்ட தகவல்கள் ஆகும்) பகிரமாட்டோம். உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவல்களை வழங்காமல் அல்லது உங்களை அடையாளப்படுத்தாத வகையில் தகவல்களை ஒருங்கிணைத்து, இந்தக் கூட்டாளர்களிடம் அவர்களது விளம்பரத்தின் பார்வை மற்றும் செயல்திறன் பற்றிய தகவல்களை அளிப்போம். உதாரணமாக, விளம்பரதாரர்களுடன் அவர்களின் விளம்பரங்கள் எவ்வாறு செயல்பட்டது அல்லது எத்தனை பேர் அவர்களின் விளம்பரங்களைப் பார்த்தனர் அல்லது விளம்பரத்தைப் பார்த்த பிறகு பயன்பாட்டை நிறுவினர் போன்ற தகவல்களை நாங்கள் கூறலாம் அல்லது கூட்டாளர்கள் தங்கள் பார்வையாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்ள தனிப்பட்ட முறையில் அடையாளம் காணமுடியாத (மாட்ரிட்டில் வசிக்கும் 25 வயதுடைய மென்பொருள் பொறியியலை விரும்பும் பெண் போன்ற) தகவல்களை வழங்கலாம், எனினும் விளம்பரதாரர் எங்கள் விளம்பரதாரர் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Facebook இல் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தை ஏன் பார்க்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, உங்கள் விளம்பர விருப்பத்தேர்வுகளைப் பார்க்கவும். Facebook இல் உங்கள் விளம்பர அனுபவத்தைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் விரும்பினால், உங்கள் விளம்பர விருப்பத்தேர்வைச் சரிசெய்யலாம்.
விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிற கூட்டாளர்கள்.
தொழில்நுட்ப உட்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல், எங்கள் சேவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை பகுப்பாய்வு செய்தல், விளம்பரங்கள் மற்றும் சேவைகளின் திறனை மதிப்பீடு செய்தல், வாடிக்கையாளர் சேவைகளை வழங்குதல், பணம் செலுத்தும் வசதியை அளித்தல், அல்லது அகாடமிக் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை நடத்துதல் போன்று உலகளாவிய அளவில் எங்கள் வணிகத்திற்கு ஆதரவளிக்கும் விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் பிற கூட்டாளர்களுக்குத் தகவல்களை நாங்கள் பரிமாற்றுவோம். எங்களுக்கும் அவர்களுக்குமான தரவுக் கொள்கை மற்றும் ஒப்பந்தங்களின்படி இந்தக் கூட்டாளர் கண்டிப்பான ரகசியத்தன்மை கடமைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்.

என்னைப் பற்றிய தகவல்களை நிர்வகிப்பது அல்லது நீக்குவது எப்படி?

Facebook இல் நீங்கள் பகிரும் உள்ளடக்கம் மற்றும் தகவல்களை, செயல்பாட்டுப் பதிவுக் கருவி மூலம் நிர்வகிக்கலாம். எங்கள் தகவல்களைப் பதிவிறக்கும் கருவி மூலம், உங்கள் Facebook கணக்குடன் தொடர்புடைய தகவல்களையும் நீங்கள் பதிவிறக்கலாம்.

மேலே குறிப்பிட்ட முறையுடன், உங்களுக்கும் பிறருக்கும் எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கும் வரை தரவைச் சேமித்து வைத்திருப்போம். இனி தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குவதற்குத் தரவு தேவையில்லை என்ற நிலை வந்தாலொழிய, உங்கள் கணக்கை நீக்கும் வரை உங்கள் கணக்குடன் தொடர்புடைய தகவல்களை வைத்திருப்போம்.

உங்கள் கணக்கை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். உங்கள் கணக்கை நீங்கள் நீக்கும் போது, உங்கள் படங்கள் மற்றும் நிலைப் புதுப்பிப்புகள் போன்ற நீங்கள் இடுகையிட்ட தகவல்களை நீக்குவோம். உங்கள் கணக்கை நீக்க விரும்பாமல் தற்காலிகமாக Facebook ஐப் பயன்படுத்துவதை நீக்க விரும்பினால், நீக்குவதற்குப் பதிலாக உங்கள் கணக்கை முடக்கி வைக்கலாம். உங்கள் கணக்கை முடக்குவதை அல்லது நீக்குவதைப் பற்றி மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யவும். மற்றவர்கள் உங்களைப் பற்றி பகிர்ந்த தகவல்கள் உங்கள் கணக்கின் ஒரு பகுதி அல்ல, அதனால் நீங்கள் உங்கள் கணக்கை நீக்கும் போது அவை நீக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

சட்டக் கோரிக்கைகளுக்கு நாங்கள் எப்படிப் பதிலளிக்கிறோம் அல்லது தீங்குகளைத் தடுக்கிறோம்?

சட்டத்தால் கேட்கப்படுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்தால் சட்டக் கோரிக்கைக்குப் (சர்ச் வாரண்ட், நீதிமன்ற ஆணை அல்லது சம்மன் போன்றவை) பதிலளிக்கும் போது உங்கள் தகவல்களை அணுகலாம், தக்கவைக்கலாம் மற்றும் பகிரலாம். இதில் அமெரிக்காவிற்கு வெளியிலும் சட்டத்தால் கேட்கப்படுவதில் நியாயம் இருக்கும் போது, பயனர்கள் அந்தச் சட்ட வரையறைக்குள் வரும் போது, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவாறு இருக்கும் போது அந்தச் சட்டக் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதும் அடங்கும். பின்வருபவற்றுக்காக நியாயம் இருப்பதாக உணரும் போது நாங்கள் தகவல்களை அணுகலாம், தக்கவைக்கலாம் மற்றும் பகிரலாம்: மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கையைக் கண்டறிதல், தடுத்தல் மற்றும் தீர்த்தல்; விசாரணையின் பாகமாக எங்களையும், உங்களையும், பிறரையும் பாதுகாத்தல் அல்லது மரணம் அல்லது உடனடி உடல் தீங்கைத் தடுத்தல். எடுத்துக்காட்டாக, எங்கள் சேவைகளிலும் பிற சேவைகளிலும் மோசடி மற்றும் முறைகேட்டைத் தடுப்பதற்காக உங்கள் கணக்கின் நம்பகத்தன்மை பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பு வழங்குநர்களுக்கு நாங்கள் அளிக்கக்கூடும். Facebook உடன் நீங்கள் மேற்கொண்ட வாங்குதல்கள் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைத் தரவு உட்பட உங்களைப் பற்றிய தகவல்களை, சட்டக் கோரிக்கை அல்லது பொறுப்பு, அரசு விசாரணை அல்லது எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளில் நிகழ்ந்த சாத்தியமான மீறல்கள் தொடர்புடைய விசாரணைகள் அல்லது இல்லையெனில் தீங்கினைத் தவிர்ப்பதற்காக அணுகலாம், செயலாக்கலாம், குறிப்பிட்ட காலம் வரை தக்கவைக்கலாம். எங்கள் விதிமுறைகளை மீறியதாக முடக்கிய கணக்குகளில் உள்ள தகவல்களை மீண்டும் முறைகேடு செய்யாமல் தடுக்க அல்லது எங்கள் விதிமுறைகளை மீறாமல் தடுப்பதற்காக, குறைந்தது ஒரு வருடத்திற்குத் தக்கவைத்திருப்போம்.

எங்கள் உலகளாவிய சேவைகள் செயல்படும் விதம்

இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக Facebook ஆனது அதன் குழும நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பினருடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய பொருளாதார பகுதியில் (“EEA”) நாங்கள் சேகரிக்கும் தகவல்களை, இந்தக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக EEAக்கு வெளியில் உள்ள நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளக்கூடும். ஐரோப்பிய கமிஷனால் ஒப்புதலளிக்கப்பட்ட வழக்கமான ஒப்பந்த நிபந்தனைகளைப் பயன்படுத்துகிறோம், ஐரோப்பிய யூனியன் சட்டத்தின் கீழுள்ள மற்ற வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம் மற்றும் EEA இலிருந்து அமெரிக்கா மற்றும் இதர நாடுகளுக்குத் தரவுப் பரிமாற்றங்களை மேற்கொள்வதைச் சட்டப்பூர்வமாக்குவதற்கு உங்கள் ஒப்புதலைப் பெறுகிறோம்.

கேள்விகள் அல்லது நீங்கள் அக்கறை கொள்ளும் விஷயங்களுடன் கீழே வழங்கப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்புகொள்ளலாம். எங்களின் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய, எங்களுடன் உங்களுக்கு இருக்கும் சர்ச்சைகளை TRUSTe வழியாக நாங்கள் சரிசெய்யலாம். TRUSTe இன் இணையதளத்தின் வழியாக அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தக் கொள்கையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களைப் பற்றி எவ்வாறு உங்களுக்குத் தெரிவிப்போம்?

இந்தக் கொள்கையில் மாற்றங்களைச் செய்யும் முன் உங்களுக்குத் தெரிவிப்பதுடன், எங்கள் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் முன் மாற்றங்களை மதிப்பாய்வு செய்யவும் கருத்துகளைத் தெரிவிக்கவும் உங்களுக்கு வாய்ப்பளிப்போம்.

கேள்விகள் இருந்தால் Facebook ஐ எப்படித் தொடர்புகொள்வது

Facebook இல் தனியுரிமை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிய, தனியுரிமை அடிப்படைகளைப் பார்க்கவும். இந்தக் கொள்கைகள் தொடர்பான கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளும் முறை இங்குள்ளது:
நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் வசித்தால்…
Facebook, Inc. ஐ ஆன்லைனில் தொடர்புகொள்ளவும் அல்லது இந்த அஞ்சலில் தொடர்புகொள்ளவும்:
Facebook, Inc.
1601 வில்லோ சாலை
மென்லோ பார்க், கலிபோர்னியா 94025
நீங்கள் வேறு எங்காவது வசித்தால்…
உங்கள் தகவல்களுக்கான தரவுக் கட்டுப்பாட்டாளர் Facebook Ireland Ltd. ஆகும், அதனை நீங்கள் ஆன்லைனில் தொடர்புகொள்ளலாம் அல்லது இந்த அஞ்சலில் தொடர்புகொள்ளலாம்:
Facebook அயர்லாந்து லிமிடெட்
4 கிராண்ட் கேனல் ஸ்கொயர்
கிராண்ட் கேனல் ஹார்பர்
டப்ளின் 2 அயர்லாந்து


கடைசியாகத் திருத்திய தேதி: செப்டம்பர் 29, 2016