அம்மாவின் சிறு குறிப்புக்கள்.. மேலும்..

  • முகப்பருவிற்கு சீரகம் கருஞ்சீரகம் சம எடை எடுத்து எருமைப்பால் விட்டு அரைத்துப்போடலாம்.

  • துளசி இலையை உடலில் தேய்த்துக்கொண்டு படுத்தால் கொசு அருகிலேயே வராது. நிம்மதியாய் தூங்கலாம்.

  • மருதாணி இலையை அரைத்து அந்த விழுதோடு சிறிது அமிர்தாஞ்சனத்தையும் கலந்து இட்டுக்கொண்டால் செக்கச்செவேலென்று வரும்.

  • உடம்பு அரிப்பு ஏற்பட்டு உடம்பு பூராகவும் திட்டு திட்டாக வந்தால், கொஞ்சம் புளித்த கெட்டி மோரில் 5, 6 செம்பருத்திப் பூக்களை பறித்துக் கரைத்து அரிக்கும் இடங்களில் தேய்த்தால் மாறிவிடும்.

  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து மஞ்சள் காமாலைக்கு கொடுக்கலாம்.

  • பிரசவித்த பெண்ணிற்கு கர்ப்பவலி இருந்தால் அடி வயிற்றில் தேன் தடவுவது வலியை நீக்கும்.

  • தேமலுக்கு இலுப்பை இலையை வேகவைத்து அரைத்துக் குளிக்கலாம்.

  • துளசியை மென்று ஒரு பிடி தின்றால் தேள்கொட்டிய விடம் இறங்கிவிடும். கொட்டிய இடத்தில் துளசிச்சாறு தேய்க்கலாம்.