குப்தப் பேரரசு (ஆட்சிக் காலம் கி பி 320 – 550) இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது. குப்தப் பேரரசை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் ஆவார். கி பி 320 முதல் 550 வரை, குப்தர் எனும் அரச மரபினரால் ஆளப்பட்ட இப்பேரரசு அதன் உச்சக்கட்டத்தில், அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்தது. இப்பேரரசின் பகுதிகளாக இன்றைய பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் அமைந்திருந்தன. அறிவியல், கணிதம், வானியல், சமயம், இந்திய தத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதால், குப்தப் பேரசின் காலம் இந்தியாவின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படுவது உண்டு. குப்தர்களின் ஆட்சியில் ஏற்பட்டிருந்த அமைதியும், வளமும் அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதை ஊக்குவித்தன. பதின்ம எண்முறை, இந்திய எண் முறை மற்றும் பூஜ்ஜியம் குப்தப் பேரரசுக் காலத்துக் கண்டுபிடிப்புக்களே. வரலாற்றாளர்கள், செந்நெறி நாகரிகத்தின் ஒரு மாதிரியாக குப்தப் பேரசை, ஹான் பேரரசு, தாங் பேரரசு மற்றும் ரோமப் பேரரசு என்பவற்றுடன் ஒன்றாக வைத்து எண்ணுகிறார்கள். மேலும்...
தட்டம்மை, தாளம்மை, மணல்வாரி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்தும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் தடுப்பு மருந்து என்ற பெயரில் தரப்படுகிறது.
த. சீனிவாசன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பல கட்டற்ற மென்பொருட்களை உருவாக்குவதுடன் கட்டற்ற மென்பொருள் தத்துவம் குறித்த விழிப்புணர்வையும் கூட்டி வருகிறார். 2016ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் எழுத்துணரியையும் விக்கி மூலத்தையும் இணைக்க இவர் எழுதிய OCR4wikisource நிரல், இந்திய மொழிகளின் விக்கிமூலம் திட்டத்தில் ~9,00,000 பக்கங்களைச் சேர்க்க உதவியது. பொதுவகத்தில் படங்களை மொத்தமாகப் பதிவேற்றுதல், பல்வேறு விக்கி துப்பரவுப் பணிகள் செய்தல் என இவர் எழுதிய நிரல்கள் பயன் மிக்கவை. தமிழில் கட்டற்ற உரிமையில் தமிழக வரைபடங்கள், உரைதிருத்தி, உரை ஒலி மாற்றி ஆகியவற்றை உருவாக்க, ஆய்வுகளைச் செய்து வருகிறார். விக்கிமூலம் மற்றும் பிற திட்டங்களுக்கு இவரது பங்களிப்பைப் பாராட்டி, 2016ம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது வழங்கப்பட்டுள்ளது.
சூரிய உதயத்தின்போது சர்க்கரைக்கட்டி மலை உட்பட்ட இரியோ டி செனீரோவின் காட்சி. இது பிரேசிலின் பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,11,652 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.