சிறப்பாக சிலவற்றை உருவாக்குவோம்.

200-க்கும் அதிகமான புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்துதலுடன்.

உலகின் மிகவும் விருப்பமான தகவல் நிர்வகிக்கும் நுட்பமானது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. Drupal8 -ஆனது சிறு வர்த்தகங்கள், உலக நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்ளுக்காக வியக்கத்தக்க டிஜிட்டல் நுட்பங்களை உருவாக்கப் பயன்படும் புதிய தரம் ஆகும்.

Drupal 8-ஐ தரவிறக்கம் செய்கமாதிரியை முயற்சி செய்

Drupal.org is generously sponsored by companies like:

அமைப்புக்கான கருவிகள்

Drupal 8ஆனது ஒரு வலிமைவாய்ந்த கருவிகளின் புதிய தொகுப்பு, மற்றும் உங்களின் தகவல் வழங்கும் சங்கிலித்தொடரின் வலிமையான இணைப்பு ஆகும். எண்ணிலடங்கா செயலிகளுடன் இணைப்பு ஏற்படுத்தலாம், REST-first வளைத்தள சேவைக்கு நன்றி. பாதுகாப்பு மற்றும் அணுகுமுறையை தியாகம் செய்யாமல், பின்பக்க கட்டுப்பாடுகளை உடைக்காமல் இருக்க முற்பட்ட துண்டிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட நகல் எடுக்கும் நுட்பங்கள் மற்றும் CDN உடன் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தலைகீழ் ப்ராக்ஸிகள் ஆகியவற்றால் விரைவாக செயலாற்றுகிறது. Drupal 8 உதவியுடன் நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு உங்களால் ஒருங்கினைக்கப்பட்ட நுட்பங்களை உருவாக்க முடியும்.

மேலும் படிக்க

பதிப்பாளர்களுக்கான எளிமை

உயரிய எண்ணங்களை உயரிய அனுபவங்களாக மாற்றுகிறது. உங்கள் கணினியைப் பின் தள்ளுங்கள், மற்றும் ஈர்ப்புத்தன்மை கொண்ட தகவல்களை முன் எப்போதும் இல்லாத வகையில் நவீன சாதனங்களில் உருவாக்கலாம். சிறந்த முன்னோட்ட வசதி மற்றும் புகைப்படங்களை இழுத்துப் போட்டு பதிவேற்றும் வசதி ஆகியவற்றால் திறமையாகப் பணியாற்றலாம். மற்றும் விரைவான மாற்றங்களை செய்யவேண்டிய தேவை ஏற்படும்போது, உள்ளக மாற்ற அமைப்பைத் தேர்ந்தெடுத்து, தேவையான வசதிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிர்வாகிகளுக்கான ஆற்றல்

முன்னெப்போதும் இல்லாத வகையில் காட்சிகள், பட்டியல்கள், பகுதிகள், நிர்வகிக்கும் கருவிகள் மற்றும் பல கூறுகளை மிக எளிதாக நம் விருப்பம் போல அமைத்துக் கொள்ளலாம். தகவல் காட்சிபடுத்தப்படும் முறையை ஒரு வரி கோடு கூட இல்லாமல் கட்டுப்படுத்த இயலும். அதிக வகைப்பாடுகளுடன் தகவல்களை கட்டமைக்கலாம், மற்றும் இயல்பான Schema.org செயல்முறையுடன் தேடுதல் பொறிகளில் மேம்பாடுகளை சேர்க்கலாம். தகவலை உருவாக்குவதும், நிர்வகிப்பதும் சிறந்த அனுபவமும் கூட.

அனைவருக்குமான அணுகல்தன்மை

Drupal 8 அணுகல் தரத்திற்கான விரிவான ஆதரவுடன் உருமாற்றம் பெற்றுள்ளது, வெறுமென நிற வேறுபாடுகள் மற்றும் எழுத்துரு அளவுகளுக்காக மட்டுமல்ல. பொருள்நிறைந்த HTML5 ஆனது மிகவும் பயனுள்ள நிலைத்தன்மையற்ற தகவல்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது . கூடுதலாக, தற்போது Drupal அதிக WAI-ARIA செய்முறைகளை பின்பற்றுகிறது. மாற்றுத்திறனாளிகளும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தகவல் கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

இணக்கமான பயன்படுத்தல்

புதிய அமைப்பின் உதவியோடு கட்டமைப்பு மேலாண்மையை தங்களுக்கு எற்றாற்போல அமைத்துக் கொள்ளுங்கள். தற்போது அமைப்பு மாற்றங்களை பல்வேறு நிலைகளுக்கிடையே மிக எளிதாக நகர்த்த முடியும். அதாவது சிறப்பான பயன்படுத்தலும், நிர்வகித்தலும் உங்கள் விரல் நுனியில். காட்சிகளை ஒருமைப்படுத்துதல், தகவல் வகைகள், பயனர் பாத்திரங்கள் மற்றும் பலவற்றின் மீது துல்லியமான கட்டுப்படுத்துதலை உருவாக்குங்கள். கட்டமைப்பு தரவுகளை தொடர்ச்சியாக ஒரு மையப் பகுதியில் சேமிக்கலாம். அனைத்தையும் கட்டவிழ்த்துவிடும் இந்த ஆற்றலானது Drupal-இன் தரமான அம்சமாகும்.

மேலும் படிக்க

அனைவருக்குமான மொழிகள்

நிறுவுதலின் முதல் படியிலேயே நூற்றுக்கணக்கான மொழிகளில் ஒன்றைத் தெரிவு செய்யலாம். இந்த மென்பொருளின் பகுதிகளான வகைப்பாடுகள், பின்னூட்டங்கள், அமைப்புகள், புகைப்பட வடிவங்கள் மற்றும் பலவற்றை மொழிமாற்றம் செய்யலாம். பிரவுசர் மொழியைக் கண்டறிதல், எளிமையான வலதிலிருந்து இடது நோக்கிய நோக்கிய எழுத்துமுறை மற்றும் கட்டமைக்கப்பட்ட மொழிமாற்று உதவி ஆகியவற்றை அனுபவியுங்கள். தனித்துவமான, உள்ளூர் மொழிகளைக் கொண்டு நீங்கள் உருவாக்கலாம். மற்றும் சிறந்த உலகத்தரமான நுட்பங்களை உருவாக்க அவற்றைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க

பெருமையுடன் வழங்கப்படும் பிற வசதிகள்

Object சார்ந்த கோடு மற்றும் சமீபத்திய தரங்கள் மூலம் Drupal8-இன் நெகிழும் தன்மையை மேலும் விரிவுபடுத்தலாம். நன்கு அறியப்பட்ட நுட்பங்கள் தற்போது Drupal 8-இன் பகுதிகளாக உள்ளன. இது Composer, Guzzle, மற்றும் Symfony2 போன்ற வெளிப்புற மென்பொருட்களை சார்ந்திருக்கிறது. எனவே கோடு எழுதுவதையும், சரி செய்தலையும் விரைவாகவும் அதிக நம்பிக்கையுடனும் செய்யலாம். PHP வடிமைப்பிற்கு விடை சொல்லுங்கள்; புரிந்துகொள்ள மிகவும் எளிமையான Twig வடிவமைப்பை சார்ந்திருங்கள். மற்றும் எளிமையான, மிகவும் தனித்துவமான API-களை பயன்படுத்தி உங்களின் தொகுதிகள் மற்றும் வடிவமைப்புகளை மேலும் வலுப்படுத்துங்கள்.

மேலும் படிக்க

சிறப்பாக சிலவற்றை உருவாக்குவோம்: Drupal 8-ஐ தரவிறக்கம் செய்க

Drupal சோதனை ஓட்டம் செய்க: மாதிரியை முயற்சி செய்

உருவாக்கியவர்கள்