1912
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19வது நூ - 20வது நூ - 21வது நூ |
பத்தாண்டுகள்: | 1880கள் 1890கள் 1900கள் - 1910கள் - 1920கள் 1930கள் 1940கள் |
ஆண்டுகள்: | 1909 1910 1911 - 1912 - 1913 1914 1915 |
1912 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1912 MCMXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1943 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2665 |
அர்மீனிய நாட்காட்டி | 1361 ԹՎ ՌՅԿԱ |
சீன நாட்காட்டி | 4608-4609 |
எபிரேய நாட்காட்டி | 5671-5672 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1967-1968 1834-1835 5013-5014 |
இரானிய நாட்காட்டி | 1290-1291 |
இசுலாமிய நாட்காட்டி | 1330 – 1331 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 45Taishō 1 (大正元年) |
வட கொரிய நாட்காட்டி | 1 |
ரூனிக் நாட்காட்டி | 2162 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4245 |
1912 (MCMXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 1 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
- ஜனவரி 8 - ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
- மார்ச் 1 - ஆல்பேர்ட் பெரி என்பவர் ஓடும் விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் குதித்த முதலாவது மனிதரானார்.
- ஏப்ரல் 14 - டைட்டானிக் கப்பல் 11:40 மணிக்கு பனிப்பாறையுடன் மோதியது.
- ஏப்ரல் 15 - டைட்டானிக் கப்பல் 2:20 மணிக்கு 1,494 பேருடன் மூழ்கியது.
- மே 26 - இலங்கையில் இருந்து 7 பேரடங்கிய முதல் தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
- ஜூன் 5 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் கியூபாவில் இறங்கினர்.
- அக்டோபர் 8 - மொண்டெனேகிரோ துருக்கி மீது போரை அறிவித்தது.
பிறப்புக்கள்[தொகு]
- ஏப்ரல் 27 - சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)
- மே 12 - மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (இ: 1979)
- ஆகஸ்ட் 12 - சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (இ. 2000)
இறப்புக்கள்[தொகு]
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - நில்ஸ் டாலென்
- வேதியியல் - விக்டார் கிறிக்னார்ட், போல் சபாட்டியெர்
- மருத்துவம் - அலெக்சிஸ் கரெல்
- இலக்கியம் - ஜெராட் ஹோப்ட்மான்
- அமைதி - எலிஹு ரூட்