பாமியான் மாகாணம் என்பது முப்பத்து நான்கு ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்று. இதன் பெயர் "ஒளி வீசும் இடம்" என மொழிபெயர்க்கப்படுகிறது. பண்டைக் காலத்தில், நடு ஆப்கானிஸ்தான் பகுதி பட்டுப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தது. உரோமப் பேரரசு, சீனா, நடு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா ஆகியவற்றுக்கு இடையிலான பாதைகள் சந்திக்கும் இடமாக இருந்தது. பாமியான் பல நாட்டுப் பயணிகள் தங்கிச் செல்லக்கூடிய பகுதியாக இருந்தது. இங்கு கிரேக்கம் மற்றும் புத்த கலை அம்சங்கள் ஒரு தனிப்பட்ட பாரம்பரிய பாணியில், ஒருங்கிணைந்து அக்கலை கிரேக்க-புத்த கலை என்று அறியப்பட்டது. இந்த மாகாணத்தில் பல புகழ்மிக்க வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கதாக புகழ்வாய்ந்த பாமியன் புத்தர் சிலைகள் உள்ளன. அதைச் சுற்றி உள்ள 3,000 குகைகள், பேண்ட்-இ அமீர் தேசிய பூங்கா, தாரா-இ-அஜ்ஹடார், கோல்கோடா மற்றும் ஜாகாக் ஆகிய பண்டைய நகரங்கள், பெரோஸ் பஹார், அஸ்டோபா, கிளிகான், கஹோர்கின் , காஃரின் மற்றும் சில்டுகட்டரன் போன்ற இடங்கள் ஆகும். மாகாணத்தின் மக்கள் தொகை 425,500 ஆகும். மேலும்...
தட்டம்மை, தாளம்மை, மணல்வாரி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்தும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் தடுப்பு மருந்து என்ற பெயரில் தரப்படுகிறது.
சாம்பல்நிற வாலாட்டிக் குருவிவாலாட்டிகள் இனத்தைச் சேர்ந்த சிறு பறவை ஆகும். ஒட்டு மொத்தமாக இக்குருவியின் நீலம் 18 முதல் 19 செ.மீ வரை இருக்கும்.வேகமாக ஓடும் ஆற்றின் ஓடைகளின் அருகே இவை கூடு கட்டியிருக்கும். 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 92,324 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.