ஈராக்குது அணைஇந்தியாவின்ஒடிசா மாநிலத்தில், மகாநதி ஆற்றின் குறுக்கே சம்பல்பூர் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் கட்டப்பட்டுள்ளது. அணைக்கு பின்னால் ஏரி மற்றும் 55 கி.மீ. நீர்த்தேக்கம் பரவியுள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு செயற்படுத்தப்பட்ட முதலாவது பெரிய பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டங்களில் இவ்வணையும் ஒன்றாகும். 1936 ஆம் ஆண்டு மகாநதி படுகையில் ஏற்பட்ட வெள்ளப்பேரழிவுக்கு முன்பு, மகாநதிப் படுகையில் ஏற்படக்கூடிய வெள்ளத்தின் பிரச்சினையைச் சமாளிக்க நீர்த்தேக்கங்களில் வெள்ளங்களின் நீரை சேகரிக்க சர். விசுவேசுவசரய்யாவால் விரிவான விசாரணை முன்மொழியப்பட்டது. 1945 ஆம் ஆண்டில், தொழிலாளர் உறுப்பினர் முனைவர். பி. ஆர். அம்பேத்கர் தலைமையில், மகாநதியை பல நோக்கத்திற்காக பயன்படுத்த வெள்ளத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான முடிவுகளில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய நீர்வழி நீர்ப்பாசன ஆணையம் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. மேலும்...
தட்டம்மை, தாளம்மை, மணல்வாரி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்தும் கலந்து 1971 ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் தடுப்பு மருந்து என்ற பெயரில் தரப்படுகிறது.
தகைவிலான் பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 91,758 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.