கழுகு ஓர் வலுவான கொன்றுண்ணிப் பறவை ஆகும்.உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான நகங்களைக் கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. மேலும்...
1967 - அப்பொலோ 1விண்வெளி வீரர்கள் மூவர் புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.
அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கை.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 91,058 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.