காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவன்அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் "காரைக்கால் அம்மையார்" என்று வழங்கப்பெறுகிறார். ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார். மேலும்..
2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு(படம்) விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.
அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே உலகைச் சுற்றிவரும் ஒரு விண்நிலையம். பலநாடுகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய, நெடுங்காலம் நிலைத்து விண்ணிலே இயங்கவல்ல ஒரு விண்வெளி நிலையம். இது புவியில் இருந்து 360 கி.மீ. உயரத்தில் வளிமண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியில் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை உலகைச் சுற்றி வருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003 (2003-2003இல்) தொடங்கப்பட்டது, தற்போது 89,282 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.