குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓரு தமிழ்க் குடும்பம்

குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "குடும்பம்" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஒரு உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது."[1] நெருங்கிய குடும்பம் என்பது வாழ்க்கைத் துணைவர், பெற்றோர், உடன்பிறந்தோர், மகன்கள், மகள்கள் ஆகியோரை உள்ளடக்கும். இவர்களோடு, பெற்றோரின் உடன்பிறப்புகள், ஒன்றுவிட்ட உடன்பிறந்தோர், மருமக்கள் போன்றோரும் சேர்ந்து விரிந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகின்றனர்.

பெரும்பாலான சமுதாயங்களில் பிள்ளைகள் சமூகமயமாவதற்கான முதன்மை நிறுவனமாகக் குடும்பம் விளங்குகிறது.

சொற்பிறப்பு[மூலத்தைத் தொகு]

குடும்பம் என்னும் சொல் கூடல் என்னும் பொருள் கொண்ட குல் என்னும் தமிழ் வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. குல் > குள் > குழு என மாற்றம் பெறும்.[2] குழு என்பது கூட்டம் என்ற பொருள் தருவது. குழு > குழும்பு > குடும்பு > குடும்பம் என்றவாறு குடும்பம் என்னும் சொல் பெறப்படுகிறது. இது பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்த கூட்டம் என்ற பொருள் தருகிறது.[3]

குடும்பத்தின் வகைகள்[மூலத்தைத் தொகு]

கணவன்மனைவி தொடர்பு, பெற்றோர்பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையிலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன.

அமைப்பு[மூலத்தைத் தொகு]

குடும்பங்களின் அமைப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை,

  1. மணவழிக் குடும்பம் (Conjugal Family)
  2. தனிக் குடும்பம் (Nuclear family)
  3. விரிந்த குடும்பம் (Extended Family)

என வகைப்படுத்தலாம்.

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

இவற்றையும் பார்க்கவும்[மூலத்தைத் தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்பம்&oldid=2115904" இருந்து மீள்விக்கப்பட்டது