மதுரை:மதுரையில் அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கக் கூட்டம் நகர் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. செயலாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். நிர்வாகிகள் பாக்கியம், மகேந்திரன், கண்ணன், பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இணையாக ரேஷன் கடை பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். ஒரே துறையின் கீழ் ரேஷன் கடைகளை கொண்டு வர வேண்டும். முறைகேடுகளை தவிர்க்க உணவுப்பொருட்களை பாக்கெட்டில் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஆவணங்களை கணினிமயமாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.