முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


முதற்பக்கக் கட்டுரைகள்

Komono cropped.png

கிமோனோ என்பது ஒரு சப்பானிய மரபுவழி ஆடை ஆகும். இதை ஆண், பெண் இருபாலாரும் அணிவர். "T" வடிவம் கொண்டதும், நேர்கோடுகளால் ஆனதுமான கிமோனோக்களின் கீழ் விளிம்பு அணியும்போது கணுக்கால் அளவுக்கு வரும். இதற்குக் கழுத்துப் பட்டையும், நீளமான கைகளும் இருக்கும். கிமோனோக்களின் இடப்பக்கப் பகுதி வலப்பக்கத்தின் மேலாகச் செல்லும்படி உடம்பைச் சுற்றி அணியப்படுகின்றன. இது ஒபி எனப்படும் நாடா மூலம் உடம்பின் பிற்பகுதியில் முடிச்சு இட்டுக் கட்டப்படும். இறந்தவர்களுக்கு புதைப்பதற்கு முன் அணிவிக்கும்போது மட்டும் மறுபுறமாகச் சுற்றப்படுகிறது. கிமோனோக்கள் பொதுவாக "சோரி" அல்லது "கோதா" எனப்படும் மரபுவழிக் காலணிகளுடனும், பெருவிரல் பிரிந்திருக்கும் காலுறைகளுடனும் அணிவது வழக்கம். மேலும்...


Kishi church 0.jpg

கிசி பொகொஸ்ட் என்பது கிசி தீவில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டுக்குரிய வரலாற்று இடமாகும். இத்தீவு உருசியாவின் கரேலியாவிலுள்ள ஓனேகா ஏரியில் அமைந்துள்ளது. பொகொஸ்ட் எனப்படும் பகுதியில் மரத்தாலான இரண்டு பெரிய கிறித்தவ தேவாலயங்களையும் ஒரு மணிக் கோபுரத்தையும் கொண்டுள்ளது. பொகொஸ்ட் அதனுடைய அழகிற்கும் நீண்ட கால இருப்புக்கும் முக்கியத்துவம் பெற்றதெனிலும், அது மரத்தினால் கட்டப்பட்டது. 1990 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் கள இடமாக உள்வாங்கப்பட்டது. 1993 இல் உரசிய கலாச்சார பாரம்பரியக் களமாக பட்டியலிடப்பட்டது. மேலும்..

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Gerald Ford - NARA - 530680.tif

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

Andrew wiles1-3.jpg

பங்களிப்பாளர் அறிமுகம்

பயனர்,Krishnamoorthy1952.jpg

மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசில், தேர்வு நிலை கூட்டுறவு தணிக்கை அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிப்ரவரி 2013 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கி, இந்திய வரலாறு, இந்திய அரசியல், இந்து சமயம், புவியியல், நடப்பு நிகழ்வுகள், ஆளுமைகள் தொடர்பாக 700 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளில் பங்களித்துள்ளார். ஒளிப்படங்களையும் விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றியுள்ளார். உத்தவ கீதை, இராணியின் கிணறு, சூரியன் கோயில், கஜினி முகமது, தேவகிரி யாதவப் பேரரசு முதலியன இவர் பங்களித்த கட்டுரைகளுள் சில.

இன்றைய நாளில்...

Uganda-Amin-10-Shillings-cr.jpg

ஏப்ரல் 11:

அண்மைய நாட்கள்: ஏப்ரல் 10 ஏப்ரல் 12 ஏப்ரல் 13

சிறப்புப் படம்

Monaco Panorama 2015.jpg

மொனாக்கோ என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும்.

படம்: Villy Fink Isaksen
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

உங்கள் கருத்துகள் | பிற மொழி விக்கிப்பீடியாக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=1964231" இருந்து மீள்விக்கப்பட்டது