கிமோனோ என்பது ஒரு சப்பானிய மரபுவழி ஆடை ஆகும். இதை ஆண், பெண் இருபாலாரும் அணிவர். "T" வடிவம் கொண்டதும், நேர்கோடுகளால் ஆனதுமான கிமோனோக்களின் கீழ் விளிம்பு அணியும்போது கணுக்கால் அளவுக்கு வரும். இதற்குக் கழுத்துப் பட்டையும், நீளமான கைகளும் இருக்கும். கிமோனோக்களின் இடப்பக்கப் பகுதி வலப்பக்கத்தின் மேலாகச் செல்லும்படி உடம்பைச் சுற்றி அணியப்படுகின்றன. இது ஒபி எனப்படும் நாடா மூலம் உடம்பின் பிற்பகுதியில் முடிச்சு இட்டுக் கட்டப்படும். இறந்தவர்களுக்கு புதைப்பதற்கு முன் அணிவிக்கும்போது மட்டும் மறுபுறமாகச் சுற்றப்படுகிறது. கிமோனோக்கள் பொதுவாக "சோரி" அல்லது "கோதா" எனப்படும் மரபுவழிக் காலணிகளுடனும், பெருவிரல் பிரிந்திருக்கும் காலுறைகளுடனும் அணிவது வழக்கம். மேலும்...
கிசி பொகொஸ்ட் என்பது கிசி தீவில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டுக்குரிய வரலாற்று இடமாகும். இத்தீவு உருசியாவின்கரேலியாவிலுள்ள ஓனேகா ஏரியில் அமைந்துள்ளது. பொகொஸ்ட் எனப்படும் பகுதியில் மரத்தாலான இரண்டு பெரிய கிறித்தவ தேவாலயங்களையும் ஒரு மணிக் கோபுரத்தையும் கொண்டுள்ளது. பொகொஸ்ட் அதனுடைய அழகிற்கும் நீண்ட கால இருப்புக்கும் முக்கியத்துவம் பெற்றதெனிலும், அது மரத்தினால் கட்டப்பட்டது. 1990 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின்உலகப் பாரம்பரியக் கள இடமாக உள்வாங்கப்பட்டது. 1993 இல் உரசிய கலாச்சார பாரம்பரியக் களமாக பட்டியலிடப்பட்டது. மேலும்..
மொனாக்கோ என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும்.