சோழர் கடற்படை என்பது சோழப் பேரரசின் உள்ளடக்கப்பட்ட கடற்படைகள் மற்றும் அதன் ஏனைய கடல் படைக்கலங்கள் என்பவற்றைக் கொண்டிருந்தது. சோழப் பேரரசானது இலங்கை, சிறீவிஜயம் (தற்போதைய இந்தோனேசியா) ஆகியவற்றை வெற்றி கொண்டு விரிவடைவதற்கும், இந்து சமயம், திராவிடக் கட்டிடக்கலை, திராவிடக் கலாச்சாரம் தெற்காசியா என்பன தெற்காசியாவில் பரவுவதற்கும், கி.பி 900 காலப்பகுதியில் கடற்கொள்ளையினை தென்கிழக்காசியா தடுப்பதிலும் சோழர் கடற்படை முக்கிய பங்காற்றியது. இடைக்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்படை அளவிலும் தரத்திலும் வளர்ந்தது. சோழ கடற்படைத் தளபதிகள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டும் செல்வாக்கும் பெற்றும் காணப்பட்டனர். கடற்படையின் கட்டளைத்தளபதிகள் சில சந்தர்ப்பங்களில் ராஜதந்திரிகளாகவும் செயற்பட்டனர். கி.பி 900 முதல் கி.பி. 1100 வரை, சிறிய காயல் உட்பகுதிகளில் இருந்து ஆசியா முழுவதற்கும் ராஜதந்திர அடையாளமாகவும் மிகுந்த வல்லமை நீட்சியாகவும் கடற்படை காணப்பட்டது. மேலும்...
ஆசியா உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது. பொதுவாக ஆசியா யுரேசியாவின் கிழக்கு ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன. மேலும்...
எழுத்தாளரும் முன்னாள் ஈழப் போராளியுமான சோபா சக்தி நடித்த தீபன் 2015 கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப் பனை) விருதை வென்றது.