முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


முதற்பக்கக் கட்டுரைகள்

Munneswaram.jpg

முன்னேசுவரம் இலங்கையில் உள்ள சிவன் கோவில்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகிறன்து. இக்கோவில் இலங்கையில் உள்ள பஞ்ச ஈசுவரங்களில் முதன்மையானது. இக்கோயிலில் இன, சமய, மொழி வேறுபாடின்றி பல இனத்தவரும் வழிபட்டு வருகின்றனர். இலங்கையின் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை இராமர், வியாசர் முதலியோர் வழிபட்டதாக தட்சணகைலாசபுராணம் குறிப்பிடுகின்றது. குளக்கோட்ட மன்னன் இவ்வாலயத்தைப் புனர்நிர்மாணம் செய்ததுடன், அதற்கு 64 கிராமங்களை வழங்கியதாகவும் முன்னேஸ்வர மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டை அரசன் ஆறாம் பராக்கிரமபாகு இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ததுடன் பல கிராமங்களையும் மானியமாக அளித்துள்ளான். போர்த்துக்கேயர் 1578 இல் முன்னேசுவர ஆலயத்தை அழித்துச் சூறையாடி, இத்தலத்துக்கு உரித்துடையதான வளம் மிகுந்த நிலங்களையும் அபகரித்தனர். மேலும்...


Susa.JPG

சுந்தர சண்முகனார் (1922-1977) புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர். தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்டவர். நூல் தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. 70 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன. சண்முகனார் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து வித்துவான் பட்டம் பெற்றார். 1952 இல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார். ஞானியார் அடிகளின் பரிந்துரையைப் பெற்று மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியேற்றார். 1947-இல் புதுச்சேரியில் பைந்தமிழ் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பின்னர் புதுவை அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Bruxelles Manneken Pis.jpg
  • சிறுநீர் பெய்யும் சிறுவன் என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.
  • முதல் எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

Nelson Mandela-2008 (edit).jpg

தமிழீழ வலைவாசல்

Tamil eelam map.svg
தமிழீழம் எனப்படுவது இலங்கைத் தமிழர்களால் தங்களது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களை உட்பட்ட நிலப்பகுதியைக் குறிப்பதாகும். தமிழர்களாலும், தமிழ் அரசியல் நிறுவனங்களாலும் தமிழீழம் தங்களது தேசியமாக முன்வைக்கப்படுகிறது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் எண்ணிக்கைப் பெரும்பான்மை இனமான சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வாக உருவானது. தமிழீழக் கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.

இன்றைய நாளில்...

AlfredNobel2.jpg

டிசம்பர் 10: மனித உரிமைகள் நாள்

தொடர் கட்டுரைப் போட்டி

Shrikarsan.jpg
2013 தொடர் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ள அழைக்கிறோம். இப்போட்டியின் முதன்மை நோக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி தரத்தை உயர்த்துவது ஆகும். யுவான் மரபு, மக்களாட்சி, நானோ தொழில்நுட்பம், கியூபா ஏவுகணை நெருக்கடி, வால்ட் டிஸ்னி போன்ற 29 கட்டுரைகளை விரிவாக்கி நவம்பர் மாத கட்டுரைப் போட்டியின் வெற்றியாளராகத் திகழும் ஸ்ரீகர்சனுக்கு வாழ்த்துகள் !

சிறப்புப் படம்

{{{texttitle}}}

கொத்தமல்லி அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும் கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்த இது 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. படத்தில் அதன் பாகங்கள் விளக்கப்படமாகக் காட்டப்பட்டுள்ளன.

படம்: முனைவர் ஓட்டோ வில்எம் தோமெ
தொகுப்பு


Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

உங்கள் கருத்துகள் | பிற மொழி விக்கிப்பீடியாக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=1554307" இருந்து மீள்விக்கப்பட்டது