ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார். இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார். மேலும்...
காலநிலை மாற்றம் அல்லது தட்பவெப்ப நிலை மாறுதல் என்பது பத்தாண்டுகள் முதல் பல மில்லியன் வருடங்கள் வரை உண்டான கால கட்டங்களில் வானிலை மாறுவதன் பேரிலான புள்ளியியல் பரம்பல் என்பதாகும். அது, சராசரி பருவ நிலையில் ஏற்படும் மாறுதலாகவோ அல்லது ஒரு சராசாரியைச் சுற்றிலும் உள்ளதான பருவ நிலை நிகழ்வுகளின் பரம்பலின் மாற்றமாகவோ இருக்கலாம் (எடுத்துக் காட்டாக, மிகவும் அதிகமான அல்லது மிகவும் குறைவான தீவிர பருவ நிலை மாற்றங்கள்). தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்தோ அல்லது புவி முழுமையிலும் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இது மீண்டும் மீண்டும் நிகழ்வதான, பெரும்பாலும் சுழற்சியான, எல் நினொ-தெற்கு அலைவு போன்ற தட்பவெப்ப உருமாதிரிகளாக இருக்கலாம்; அல்லது புழுதிப் புயல் போன்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒற்றை நிகழ்வுகளாக வரலாம். மேலும்...
பரதநாட்டியம்தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரியநடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது.
எறி கற்குழம்பு அல்லது லாவா என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700°C முதல் 1200°C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது. படத்தில் அவாய் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வடிந்தோடும் லாவா காட்டப்பட்டுள்ளது.