முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


முதற்பக்கக் கட்டுரைகள்

Periodic table compilation.svg

ஆவர்த்தன அல்லது தனிம அட்டவணை வரலாறு வேதியியற் பண்புகளைப் புரிந்துகொள்ள, ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைப் காட்டுகின்றது. இது 1869ல் திமீத்ரி மென்டெலெயேவ் வெளியிட்ட முதல் தனிம அட்டவணையில் முதிர்ச்சி அடைந்தது. மென்டெலெயேவுக்கு முன்னரே அந்துவான் இலவாசியே போன்ற சில வேதியியல் வல்லுனர்கள் இதன் வளர்ச்சிக்கு வித்திட்டாலும் உருசிய வேதியியல் வல்லுனரான திமீத்ரி மென்டெலெயேவுக்கே தனிம அட்டவணை உருவாக்கியதற்கான சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தனிமங்களின் (மூலகங்களின்) பண்புகளை வெவ்வேறு தொகுதிகளாக எளிதில் அறிந்துகொள்ள அட்டவணைப்படுத்தல் தேவையாகின்றது. இது தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்தன அட்டவணை எனப்படுகின்றது. தொடக்கத்தில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் (தொடர்பணுத்திணிவு) அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டன. மேலும்...


Badami-chalukya-empire-map.svg

ஐந்நூற்றுவர் எனப்படுவோர் முற்காலத்தில் சாளுக்கியத் தலைநகராகிய வாதாபியில் உள்ள ஐகோலே என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்த ஒரு வணிகக் கழகத்தினர் ஆவர். இன்றைய இந்தியாவின் தமிழகம், கருநாடகம் ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம் சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றி பொ.கா. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன. சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. எனினும் ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலை தூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். பொ.கா. 9 ஆம் நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றியும் தெளிவுறுத்துகின்றன. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Malkhamb team of the Bombay Sappers.jpg

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

Thikasivasanakaran.JPG

புவியியல் வலைவாசல்

Physical world.jpg
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, 1) இயற்கை மற்றும் மனிதத் தோற்றப்பாடுகள் தொடர்பிலான இடம்சார் பகுப்பாய்வு, இது பரம்பல் அடிப்படையிலான புவியியல் ஆய்வு; 2) நிலப்பரப்பு ஆய்வு, இது இடங்களும், நிலப்பகுதிகளும் தொடர்பானது; 3) மனிதனுக்கும், நிலத்துக்குமான தொடர்பு பற்றிய ஆய்வு; 4) புவி அறிவியல்கள் தொடர்பான ஆய்வு; என்பனவாகும்.

இன்றைய நாளில்...

Yuri Gagarin official portrait.jpg

மார்ச் 27:

தொடர் கட்டுரைப் போட்டி

Shrikarsan.jpg
2013 தொடர் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ள அழைக்கிறோம். இப்போட்டியின் முதன்மை நோக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி தரத்தை உயர்த்துவது ஆகும். மின்தடை, கிரேக்க எழுத்துக்கள், எதியோப்பியா, அருகிய இனம், தீப்புண் போன்ற கட்டுரைகளை விரிவாக்கி பெப்ருவரி மாத கட்டுரைப் போட்டியின் வெற்றியாளராகத் திகழும் ஸ்ரீகர்சனுக்கு வாழ்த்துகள் !

சிறப்புப் படம்

{{{texttitle}}}

மான்டே கார்லோ என்பது மொனாக்கோவின் நிர்வாகம் சார்ந்த பகுதிகளில் ஒன்றாகும். சில சமயங்களில் இது நாட்டின் தலைநகரமாக தவறாக நம்பப்படுகிறது. ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள், உலகக் குத்துச்சண்டை போட்டிகள், போக்கர் டூர் இறுதியாட்டம் ஆகியவை இங்கு நடைபெறுகின்றன. இந்நகரம் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உலகின் பிரபலமான ஆட்கள் பலரும் இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.

படம்: ஆம்பஸ் கல்லின்
தொகுப்பு


Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

உங்கள் கருத்துகள் | பிற மொழி விக்கிப்பீடியாக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=1554307" இருந்து மீள்விக்கப்பட்டது