நோய்விடுபட அற்புதங்கள் செய்யும் இளநீர்!

உலக அளவில் தென்னை வளர்ப்பில் இந்தியா 3-ம் இடத்தை வகிக்கிறது. தென்னையானது 56 சதவீதம் இளநீருக்காகவும், 44 சதவீதம் தேங்காய் எண்ணை மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்காகவும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியா உஷ்ணம் மிகுந்த நாடாகும். அதிலும் குறிப்பாக மார்ச் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை தடுப்பதுடன், உடலை குளிர்ச்சி ஆக்குவதில் முதன்மை இடம் வகிக்கின்ற இளநீர் தென்னையில் இருந்து தான் பெறப்படுகிறது.

நோய்களை தடுக்கும் இளநீர்

இளநீரில் சர்க்கரை சத்து 5.5 சதவீதத்திற்கு அதிகமாகவும், சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. கோடைக்கால வியாதிகளான வயிறுக்கடுப்பு, நீர் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மைநோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு. மற்ற இளநீரை விட செவ்விளநீரில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. சிறுநீரகம், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மையை செவ்விளநீர் பெற்றுள்ளது. இவ்வாறு பலவகைகளில் பயன்படும் தென்னையை நடும்போது இளநீருக்காக மட்டும் உள்ள தென்னை மரங்களை மட்டும் சாகுபடி செய்யாமல், இளநீர் மற்றும் தேங்காய்க்கு பயன்படும் திருவையாறு-2 என்ற ரக தென்னம்பிள்ளைகளை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம். இதன் மூலம் தென்னை விவசாயிகள் நல்ல இலாபம் பெறலாம். கோடைகால வியாதிகளை தடுக்கக்கூடிய இளநீரை நாம் பருகி நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

நச்சு நீக்கி

நம் உடலில் சாதாரணமாக நச்சுக்கள் தினம் சேர்கின்றன, இவையை சீர்படுத்த நம் உடல் வளம் உதவுகிறது. சற்று சோர்வாகவே எப்போதும் காணப்படுபவர்கள் தினம் இளநீரை பருகுவது நல்லது. இளநீர் உடலில் சேரும் நச்சுக்களை சீரமைக்கிறது.

குறைந்த இரத்த அழுத்தம்

இளநீரில் உள்ள குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் இரத்த அழுத்த அளவுகளை குறைக்க வழி செய்கிறது.

தீக்காய நிவாரனி

தீக்காயங்கள் பட்ட இடத்தில் இளநீரை தடவலாம். இது தவிர அமிலத்தால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த இளநீர் வல்லமை பெற்றது.

எடை இழப்பு

இளநீரில் குறைவான கலோரிகள் உள்ளது, மேலும் சுலபமாக செலவிடக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இதில் உள்ளது. இது உங்கள் எடையை இழக்க ஒரு பெரிய அருப்பொருளாக உள்ளது.

கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய்.

சாதாரணமாக எல்லா காலகட்டத்திலும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் கத்திரிக்காயின் அபாரமான மருத்துவகுணங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.

'பி' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.

மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.

சின்ன சீரகத்தின் மருத்துவ குணங்கள்

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். இதுபோன்ற எண்ணற்ற தன்மைகள் கொண்ட சீரகத்தின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.

சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்தை தூள் செய்து லேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.

சில காய்கறிகளின் மருத்துவ குணங்கள்.

வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், பாகற்காய், சேப்பங்கிழங்கு, பீட்ரூட், வெண்டைக்காய், கோவைக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், சுரைக்காய், குடைமிளகாய், சௌசௌ, அவரைக்காய், காரட், கொத்தவரங்காய் மற்றும் கத்தரி பிஞ்சு ஆகிய காய்கறிகளின் மருத்து குணங்களைப் பார்ப்போம்.

வாழைப்பூ:
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்:
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக்காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ:
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்:
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்:
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்:
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு:
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.


ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்க சில எளிய டிப்ஸ்...

உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவசரப்படாமல், ஒருசிலவற்றை சரியாகவும், நம்பிக்கையுடனும் மேற்கொண்டால், அதற்கான பலனைப் பெறுவது உறுதி. ஆகவே தொப்பையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, அதனைக் குறைக்க சில எளிமையான மற்றும் ஆரோக்கியமான டிப்ஸ்களை தமிழ் போல்டு ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, தினமும் நம்பிக்கையுடன் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவது உறுதி
1. தொப்பையை குறைக்க எளிய ஒரு வழியென்றால், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை விட்டு, சிறிது உப்பு சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைத்து, நாளடைவில் தொப்பை மறைந்துவிடும்.

2. தினமும் வெள்ளை சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக, கோதுமை பொருட்களை உணவில் சேர்க்கலாம். வேண்டுமெனில் கைக்குத்தல் அரிசி, ப்ரௌன் பிரட், நவதானியங்கள், ஓட்ஸ் மற்றும் தினை போன்றவற்றை உணவில் சேர்த்தால், அவை உடல் எடை குறைய உதவியாக இருக்கும்

3. பெல்லி குறைய வேண்டுமெனில், தினமும் போதுமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இவ்வாறு அடிக்கடி போதிய இடைவெளியில் தண்ணீர் பருகினால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்.

4. இனிப்புகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, உடல் எடை மற்றும் தொப்பை குறைவதில் தடையை உண்டாக்கும்

5. தினமும் காலையில் 2-3 பூண்டுகளை பச்சையாக சாப்பிட்டு, பின் எலுமிச்சை ஜூஸை குடித்தால், உடல் எடை ஆரோக்கியமான வழியில் விரைவில் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.

6. வயிற்றில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க வேண்டுமெனில், முதலில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

7. தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், தொப்பை குறைவதோடு, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்
8.தொப்பை குறைய வேண்டுமெனில், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும்.

9. மசாலாப் பொருட்களான பட்டை, இஞ்சி மற்றும் மிளகு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் அதிலுள்ள காரமானது கொழுப்புக்களை கரைப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

அழகாய் திகழ்வதற்கான சில ஆரோக்கியமான 20 வழிகள்!!!

மிக அழகாக இருக்க வேண்டும், பிறர் பாராட்டும் வண்ணம் அழகு வெளிப்பட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தொன்று தொட்டு இருக்கும் ஆசையாகும். பொதுவாக பெண்கள் என்றாலே அழகு தான். அந்த அழகை மேலும் மேம்படுத்த பலவித இரசாயன க்ரீம்களைப் பயன்படுத்துவதை விட, தினமும் நமது வாழ்க்கை முறைகளில் சில ஆரோக்கியமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் பொழுது, இயற்கையாகவே மிகச்சிறந்த அழகை பெற முடியும். அதிலும் முறையான சருமப் பராமரிப்பு, முடி பராமரிப்புடன், சரியான உடல் பராமரிப்பும் சேர்ந்து இருந்தால், அது ஒருவரை அழகாக ஆக்குவதோடு, நல்ல தோற்றத்தையும் அளிக்கும். ஆகவே அத்தகைய தோற்றத்திற்கு பின்வரும் அழகுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள். அதன் பின் பாருங்கள்! உடல் தோற்றத்தை கண்ணாடியில் கண்டு காதல் கொள்வீர்கள்
1. ஒழுங்கான முறையில் உடலைத் தேய்த்து கழுவினால், உடலிலுள்ள இறந்த செல்கள் நீங்கி, மீண்டும் அவை வளராமல் தடுக்கலாம். மேலும் தினமும் குளித்த பிறகு மாய்ஸ்சுரைசரை உடல் முழுவதும் தடவ வேண்டும். அதிலும் மாய்ஸ்சுரைசர் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இயற்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த ஸ்கரப் தேனையும் சர்க்கரையையும் கலந்து தடவுவது ஆகும்

2. ஒவ்வொரு நாளும் 8-10 டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் நீர்ச்சத்து இழப்பினைத் தடுத்து, சருமம் ஆரோக்கியமாகத் திகழ உதவும்

3. அதிகமாக வியர்க்கிறதா? ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும் குளிக்க வேண்டும். நல்லதொரு குளியலானது, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் குளித்த பிறகு, நெகிழ்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்

4. அதிகமான வெப்பத்தாலும், மாசடைந்த சூழ்நிலையாலும், முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே முடியைப் பராமரிக்க முடிக்கு நல்ல ஷாம்பு போட்டுக் கழுவ வேண்டும். அதிகப்படியான ஷாம்பு பயன்படுத்தும் போது, முடி பொலிவிழந்தும் வறண்டும் போகும். அதிலும் ஷாம்புவில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து கொண்டால். முடியிலுள்ள அழுக்கும் மாசும் நீங்கும்

5. வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான குறிப்பு என்னவென்றால், சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனைத் தினமும் பயன்படுத்துவது ஆகும். அதற்கு சருமத்திற்குத் தகுந்த அலர்ஜி ஏற்படுத்தாத ஒரு சன் ஸ்கிரீன் லோசனைக் கண்டுப்பிடித்து, பயன்படுத்தினால் சூரிய ஒளியினால் ஏற்படும் தோல் தடிப்புகளைத் தடுக்க முடியும்

6. காற்றோட்டம் உள்ள காலணிகளை அணிய வேண்டும். இதனால் பூஞ்சைகள் தொற்று மற்றும் நாற்றம் இல்லாத பாதங்களையும் பெறலாம்

7. உணவில் அதிக அளவு தயிரைச் சேர்த்துக் கொள்ளவும். இது சருமத்தினை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் பாதுகாக்கும். அதிலும் முடி மற்றும் சருமத்தின் மீது தயிர் கலவையை பயன்படுத்தும் போது, சருமமும் முடியும் மென்மையாகும். மேலும் சூரிய ஒளியினால் ஏற்படும் தீங்கையும் குறைக்கும்

8. ஷேவிங் செய்து கொள்பவராக இருந்தால், குளிக்கும் போது, கையிலும் காலிலும் ஷேவிங் செய்வதற்கு முன், குறைந்தது 3 நிமிடங்கள் காத்திருந்து பிறகு ஷேவ் செய்யவும். அதிலும் இளஞ்சூடான நீரைப் பயன்படுத்தவும். ஷேவிங் செய்து முடித்த பிறகு, படிகாரத்தை குளிர்ந்த நீரில் கலந்து தடவவும்

9. பட்டுத் துணி போன்ற மென்மையான தலையணை மற்றும் தலையணை உறையைப் பயன்படுதுவதன் மூலம், தலையணைக்கும் கியூட்டிகள்களுக்கும் இடையில் உள்ள உராய்வைத் தடுக்கலாம். மேலும் முடி உதிர்வதையும் இது தடுக்கும்

10. வெயிலின் காரணமாக எளிதில் சருமம் கருமையடைபவர்கள், இயற்கைப் பொருள்களைக் கொண்டு, இப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளலாம். அதற்கு முட்டையின் வெள்ளை கரு, சோள மாவு, எலுமிச்சை சாறு கலந்த கலவையை சருமத்தின் மீது தடவ வேண்டும். மாறாக வெட்டிய உருளைக்கிழங்கு அல்லது எலுமிச்சைச் சாறு போன்றவற்றையும் கருமையான இடத்தின் மீது தடவலாம். இம்முறைகள் பயன் தரவில்லையா? அப்படியாயின், உடனே ஒரு சரும நோய் நிபுணரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்

11. கவர்ச்சியான முதுகினைப் பெறுவதற்கு, முதுகினை தொடர்ந்து எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். அதிலும் பப்பாளிப் பழத்தினை அரைத்து, அதனை சருமத்தின் மீது தடவி 5-10 நிமிடங்கள் வைக்க வேண்டும். இதனால் செய்முறை முதுகில் உள்ள இறந்த செல்களை அகற்றி, தூசி மற்றும் அழுக்கிலிருந்து பாதுகாக்கும்

12. தலையில் தொப்பி அணிபவராக இருந்தால், அதன் காரணமாக நெற்றியில் எண்ணெய் படிந்து, பருக்கள் உண்டாகலாம். இதனைத் தவிர்க்க நல்ல க்ளின்ஸர்களைக் கொண்டு நெற்றியை அடிக்கடி துடைத்துக் கொள்ளவும் 

13. ஷூக்கள் அணிபவராக இருந்தால், கால்களை ஷூக்களுக்குள் நுழைக்கும் முன், பூஞ்சைத் தடுப்பு மருந்தை (anti-fungal powder) தடவிக் கொள்ளவும். மேலும் இறந்த செல்களை நீக்கவும், பாதங்கள் இளமை எழில் பெறவும், மெருகேற்ற உதவும் கற்களைப் (pumice) பயன்படுத்தவும்

14. ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சரும நிறத்தைப் பெற, உணவுடன் புரோட்டீன் அதிகமுள்ள கொழுப்பில்லாத மாமிசம், முட்டைகள், பருப்பு வகைகள், பால் மற்றும் பாலாடைக் கட்டி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் அதிகமுள்ள இவ்வகை உணவுகள், ஆரோக்கியமான மற்றும் வலிமையான எலும்புகளையும் பற்களையும் பெறவும் உதவும்

15. அழகாகத் திகழ வேண்டுமானால், தேவையான தூக்கம் அவசியம். அதே போல், தேவையான அளவு தண்ணீர் குடித்து வர வேண்டும். சருமம் பட்டுப் போல் திகழ, இவை இரண்டும் முக்கியமானவை. ஏனெனில், நல்ல தூக்கத்தினாலும், அதிகமான தண்ணீர் குடிப்பதினாலும், உடலில் உள்ள நச்சுப் பொருள்கள் நீங்குகின்றன

16. அதிகமான மேக்-கப் பொருள்கள் சருமத்தில் பயன்படுத்தப்படும் போது, அவை சருமத்தில் உள்ள துவாரங்களை அடைத்து, சருமத்தில் சுருக்கங்களை உண்டாக்கக் கூடும். மேலும், உறங்கப் போகும் முன், சருமத்தின் மீது பயன்படுத்தியிருந்த அனைத்து வேதிப் பொருள்களையும் நீக்கிவிட வேண்டும்

17. தினந்தோறும் சருமத்தினை சுத்தப்படுத்துங்கள், பதப்படுத்துங்கள், ஈரப்படுத்துங்கள். இதற்காக சருமத்திற்கு உகந்த தரமான க்ளின்சர் ஒன்றினையும், டோனர் ஒன்றினையும், வாங்கிக் கொள்ளவும். ஒரு தரமான க்ளின்சரானது, அனைத்து இறந்த செல்களையும் நீக்க உதவும். அதோடு, உடலில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி, எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசரை சருமத்தின் மீது தடவி, சருமத்தினைச் சிறப்பாக பராமரிக்க உதவும்

18. அழுக்கடைந்த கைகளைக் கொண்டு முகத்தைத் தொடுவதால், சருமத்தில் பருக்கள் உண்டாகலாம். இதனைத் தடுக்க, வெளியில் செல்லும் போது, கையடக்கமான சேனிடைசர் ஒன்றினை உடன் வைத்திருக்கவும்

19. வாரம் ஒருமுறையேனும் சருமத்தினை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். சருமத்தின் மீது படிந்துள்ள அனைத்து தூசிகள் மற்றும் அழுக்குகளை நீக்கி, சருமம் புத்துணர்வுடன் பளபளப்பாகத் திகழ, இது மிகவும் உதவும்

20. தலைமுடியை நன்கு அலசிய பிறகு, நல்ல கண்டிஷனரைக் கொண்டு முடியைக் கண்டிஷன் செய்ய வேண்டும். இதனால் சுற்றுப்புற மாசினால் தலைமுடி சிக்கடைவதையும், முடி பாதிக்கப்படைவதையும் தடுக்கலாம். குறிப்பாக ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தி தலைமுடியை உலர வைப்பதைக் குறைக்கவும்