முதற்பக்கக் கட்டுரைகள்
|
தமிழ் நாடக வரலாறு என்பது தமிழர் வளர்த்த நாடகக்கலையின் தோற்றம், ஏற்றம் மற்றும் வீழ்ச்சியினைக் குறிப்பதாகும் தமிழர் நாடகக்கலையின் தோற்றத்தினை விவரிக்கும் நூற்களில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது அகத்தியம் என்னும் தலைச்சங்க காலத்து நூலாகும். நாடகம் என்பது பாட்டும், உரையும், நடிப்பும் என்பதும் தமிழ் மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்த நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது. கடைச்சங்க காலம் வரை எழிலோடு இருந்த நாடகக்கலை, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் காலப்பகுதியில் எவ்வித செழிப்புமற்ற நிலையில் இருந்தது. மேலும்...
ஐரோப்பிய களத்தின் மேற்குப் போர்முனை இரண்டாம் உலகப் போரில் டென்மார்க்,நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நாசி ஜெர்மனியின் மேற்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இங்கு இரு கட்டங்களாகப் பெரும் போர் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 1939-40ல் ஜெர்மானியப் படைகள் பிரான்சு, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து ஆகியவற்றைக் கைப்பற்றின. இக்கட்டம் பிரிட்டனுடனான வான்படை சண்டையில் ஜெர்மானியத் தோல்வியுடன் முடிவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழ வில்லை. இரண்டாம் கட்டம் ஜூன் 1944ல் பிரான்சு மீதான நேச நாட்டு படைகளின் கடல்வழிப் படையெடுப்புடன் தொடங்கியது. ஏப்ரல் 30ல் முற்றுகையிடப்பட்ட பெர்லின் நகரில் ஹிட்லர் தனது பதுங்கு அறையில் தற்கொலை செய்து கொண்டார். மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் இரண்டாம் உலகப் போர் முற்றுப்பெற்றது.மேலும்...
மேலும் கட்டுரைகள்...
|
உங்களுக்குத் தெரியுமா?
|
- குண்டர் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில் 1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.
தொகுப்பு
|
|
|
செய்திகளில்
|
|
தமிழ் மொழி வலைவாசல்
|
தமிழ், தமிழர்களின் தாய்மொழி. தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களிலும், இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியசு, பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 85 மில்லியன் மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது. 2,300 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.
|
இன்றைய நாளில்...
|
|
|