முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


முதற்பக்கக் கட்டுரைகள்

முரசு ஒலித்தல்.jpg

பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும், இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்களும் எழுந்தன. இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன. மேலும்...


1 singapore city skyline dusk panorama 2011.jpg

சிங்கப்பூர் அல்லது அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் குடியரசு தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. ஆனாலும் நிலச்சிரமைப்பு மூலம் மேலதிக நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளும் 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகளும் இங்குள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும். மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

Biret.JPG

தொகுப்பு

நீங்களும் கட்டுரை எழுதலாம்

தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்களும் கட்டுரை எழுதலாம் என்பதை அறிவீர்களா? இன்றே உங்கள் முதல் கட்டுரையைத் தொடங்குங்கள்.


  • கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் தமிழில் இருக்க வேண்டும். பார்க்க: தமிழ்த் தட்டச்சு உதவி
  • நீங்கள் வாழும் ஊர், அண்மையில் படித்த நூல், பார்த்த திரைப்படம், புகழ்பெற்ற ஆளுமைகள் என பல வகையான தலைப்புகள் குறித்தும் எழுதலாம். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்தும் எழுதலாம். காப்புரிமை உள்ள கட்டுரைகள், படிமங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
  • கட்டுரைகள் சரியான தகவலை மட்டும் முன்னிறுத்தி சொந்தக் கருத்துகள் இன்றி, நடுநிலையுடன், ஆதாரத்துடன் இருக்க வேண்டும். தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விளம்பரங்கள், உயர்வு நவிற்சிகள், அனுபவ வலைப்பதிவுக் கட்டுரைகளைத் தவிர்க்கவும். பார்க்க: சில மாதிரிக் கட்டுரைகள்.
  • விக்கிப்பீடியாவில் எழுதிப் பழக, விக்கிப்பீடியா:மணல்தொட்டி பயன்படுத்துங்கள்.

செய்திகளில் இற்றைப்படுத்து

Abe Shinzo 2012 02.jpg

இன்றைய நாளில்...

First four nuclear lit bulbs.jpeg

டிசம்பர் 20:

சிறப்புப் படம்

Nan Lian Garden 3.JPG

நாண் லியான் பூங்கா ஹொங்கொங்கில் மாணிக்க மலை நகரில் அமைக்கப்பட்டிருக்கும் சீனப் பாரம்பரியக் கட்டடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு பூங்காவாகும். பூங்காவின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் சீனக் கட்டக்கலையின் தொன்மையை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன. இயற்கை அழகுமிகு மலைத்தொடர்கள் மத்தியில், வானுயர் தற்கால குடியிருப்புத் தொகுதிகளின் மையத்தில் இந்த சீனத் தொன்மையின் சிறப்பை எடுத்துக்காட்டும் பூங்கா அமைந்துள்ளது இன்னுமொரு சிறப்பாகும். இந்தப் பூங்கா 35,000 மீட்டர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்காவின் நாண் லியான் பூங்காவின் உள்ளே கட்டப்பட்டுள்ள டாங் அரசவம்சக் கட்டட வடிவம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: அருண்
தொகுப்பு


Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

உங்கள் கருத்துகள் | பிற மொழி விக்கிப்பீடியாக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=964964" இருந்து மீள்விக்கப்பட்டது